தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 november 2014

ஷிராணிக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை! - ஐ.நா. கேள்வி தொடுத்துள்ளது

வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள உசிதமான நாடுகளின் பட்டியலில் இலங்கை 99வது இடத்தில்...
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 11:40.08 PM GMT ]
வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள உசிதமான நாடுகளின் வரிசையில் இலங்கை பின்தள்ளப்பட்டுள்ளது.
உலக வங்கியின் டுயிங் பிஸ்னஸ் என்னும் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டுக்கான அறிக்கையில் இலங்கை 99ம் இடத்தை வகிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இலங்கை 85ம் இடத்தை வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு பதினான்கு இடங்கள் பின்தள்ளப்பட்டு 99ம் இடத்தை வகிக்கின்றது.
வர்த்தக துறையில் ஏதேனும் சட்டத் தேவைகளை நீதிமன்றின் ஊடாக பூர்த்தி செய்து கொள்ள நான்கு ஆண்டு காலம் தேவைப்படுவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
இலங்கையில் வரிச் செலுத்துகை தொடர்பிலும் சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை, வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள மிகவும் உசிதமான நாடுகளின் பட்டியலில்  சிங்கப்பூர் முதலாம் இடத்தை வகிக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXisz.html
ஷிராணிக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை! - ஐ.நா. கேள்வி தொடுத்துள்ளது
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 11:20.16 PM GMT ]
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக அரசாங்கம் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டது. இதன் காரணமாக அவர் பதவியும் பறிக்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் இடைக்கால அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் அரசாங்கம் அநீதியான முறையில் ஷிராணியின் பதவியைப் பறித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் பயங்கரவாத தடுப்புச் சட்டம், காலவரையறையற்ற தடுப்புக் காவல், சித்திரவதைகள் தொடர்பிலும் இந்த அறிக்கையில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் மூலமாக அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXir6.html

Geen opmerkingen:

Een reactie posten