[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 04:17.07 PM GMT ]
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மஹர நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 9ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
களனி பெதியாகொட மாவெல்ல ஆவாசவத்த இரண்டு மாடி வீடொன்றில் புதையல் தோண்ட முயற்சிக்கப்பட்டுள்ளது.
பெலியாகொட பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
வீட்டின் உள்ளேயே மண்ணைத் தோண்டி வேறு ஓர் அறையில் மண் கொட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பூஜைப் பொருட்கள், புதையல் தோண்டுவதற்கான ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாரம்மல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
நேற்றிரவு 10.00 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் படுகாயமடைந்த நிலையில் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
படுகாயமடைந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மோட்டார் போக்குவரத்துப் பிரிவினர் இரவுநேர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, இருவருக்கு இடையிலான மோதல் சம்வமொன்று இடம்பெற்றுள்ளது.
வாள் ஒன்றை வைத்திருந்த நபரிடமிருந்து வாளை பிடிங்கி எறிந்து அதன் பின்னர் அவரை கைது செய்ய முற்பட்ட போது அருகிலிருந்தவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வாளை வைத்திருந்த நபர் வெள்ளை நிற மோட்டார் கார் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXir3.html
இன்டர்போல் மாநாட்டில் பங்கேற்க உள்ளார் பொலிஸ்மா அதிபர்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 03:58.43 PM GMT ]
இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரின் 83ம் மாநாட்டில் பங்கேற்பதற்காக பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் இன்று மொன்கோ நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நாளை முதல் எதிர்வரும் 7ம் திகதி வரையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
மாநாட்டின் பின்னர் எதிர்வரும் 9ம் திகதியே பொலிஸ் மா அதிபர் நாடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் காலப் பகுதியில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.
காமினி நவரட்ன பதில் பொலிஸ் மா அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த மாநாட்டில் 190 நாடுகள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீவிரவாதம், சைபர் குற்றச் செயல்கள், குற்றச் செயல் அச்சுறுத்தல்கள், சுற்றாடல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து மாநாட்டில் கலந்துரையாடப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXir2.html
மீனவர் வழக்கில் சந்தேகமில்லை: அமைச்சர் டக்ளஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 03:41.26 PM GMT ] [ பி.பி.சி ]
இராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கும், இலங்கையின் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 2 பேர் மற்றும் மண்டைதீவைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவருக்கும் இந்த மரண தண்டனையை இலங்கை நீதிமன்றம் விதித்துள்ளது.
இந்த நிலையிலேயே இலங்கை மீனவர்கள் 3 பேரின் சார்பில், அவர்களது உறவினர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் ஒரு கருணை மனுவைச் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யுமாறும், தானும் இது குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறுவதாகவும் அவர்களிடம் தெரிவித்ததாக அமைச்சர் கூறினார்.
இந்திய மீனவர்கள் தரப்பில் கூறப்படுவதுபோல நீதிமன்ற நடவடிக்கையில் சந்தேகம் எதனையும் இதுவரை எவரும் தம்மிடம் எழுப்பவில்லை என்றும், தான் விசாரித்த வரையிலும் அப்படியான சந்தேகம் எதனையும் காணமுடியவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த விடயத்தில் குரல் கொடுப்பவர்கள் இரு நாடுகளுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தாதவாறு இதனை கையாள வேண்டும் என்றும், அதுமாத்திரமன்றி, அவர்கள் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்வதில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXir1.html
Geen opmerkingen:
Een reactie posten