தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 november 2014

பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்புக்களுக்கு உதவி! பிரித்தானியா இணக்கம்

தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுக்க கூட்டமைப்பும் காங்கிரஸும் இணக்கம்
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 02:47.54 AM GMT ]
தொடர்ந்தும் தமிழ் - முஸ்லிம் உறவை பேணுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இணங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன.
கொழும்பில் உள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் இரண்டு தரப்பினரும் நேற்று சந்திப்பை நடத்தினர்.
இதன்போது கூட்டமைப்புக்கு ஆர் சம்பந்தனும் காங்கிரஸ_க்கு ரவூக் ஹக்கீமும் தலைமை தாங்கினர்.
சந்திப்பின் போது இரண்டு சமூகங்களுக்கு இடையிலான தற்போதைய உறவு நிலை மற்றும் கிழக்கு மாகாணத்தின் நிலைமை குறித்து பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்துவதற்கு நேற்றைய சந்திப்பின் போது இணங்கப்பட்டதாக அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgr5.html


பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்புக்களுக்கு உதவி! பிரித்தானியா இணக்கம்
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 02:52.27 AM GMT ]
பெருந்தோட்டப்புறங்களில் மாதிரி கிராமங்களை உருவாக்கி தனி வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பிரித்தானியா கொள்கையளவில் உடன்பட்டுள்ளது
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீன், நேற்று நுவரெலியாவுக்கு விஜயம் செய்த போதே பிரதியமைச்சர் வி இராதாகிருஸ்ணனிடம் இந்த கொள்கை இணக்கத்தை வெளியிட்டார்.
பிரித்தானியாவினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெருந்தோட்ட தமிழர்களை பிரித்தானியாவும் கவனிக்கவில்லை.
அதேபோல அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்த இந்தியாவும் அவர்களை கவனிக்கவில்லை என்று இராதாகிருஸ்ணன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக பெருந்தோட்ட மக்களின் வீடமைப்புகளுக்கு உதவமுடியும். எனவே அதற்கான உத்தியோகபூர்வ கோரிக்கையை தமக்கு அனுப்புமாறு இராதாகிருஸ்ணனிடம் கேட்;டுக்கொண்டார்.
இதேவேளை பெருந்தோட்டப்புறங்களில் உள்ள விசேட தேவையுயடையவர்களுக்கு உதவுவதற்கும் அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் பிரித்தானிய உதவியை வழங்கும் என்று உயர்ஸ்தானிகர், மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ் சதாசிவத்துடனான சந்திப்பின் போது உறுதியளித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgr7.html

Geen opmerkingen:

Een reactie posten