தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 november 2014

வடக்கு பெண்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்: அமைச்சர் சுமேதா


த.தே.மக்கள் முன்னணியினர் மீரியபெத்த பகுதிக்கு விஜயம்
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 02:52.27 AM GMT ]
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மலையகத்தில் மண்சரிவினால் மண்ணுள் புதையுண்டுபோன மீரியபெத்த கிராமத்திற்கு நேரில் சென்று அழிவுகளைப் பார்வையிட்டனர்.
அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சியின் முக்கியஸ்த்தர்களும் ஊடகவியலாளர்களும் சென்று பார்வையிட்டிருந்தனர்.
மேலும் மீரியபெத்த மண்சரிவிலிருந்து தப்பியவர்கள் தஞ்சமடைந்துள்ள கொஸ்லாந்த ஸ்ரீகணேச தமிழ் வித்தியாலயம், மற்றும் பூணேகல தமிழ் வித்தியாலயம் ஆகிய இடங்களிற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
மேலும் அடுத்த கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிப் பொருட்களை எடுத்துவரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆசியாவின் ஆச்சரியம் எங்கே? - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 03:01.34 AM GMT ]
ஆசியாவின் ஆச்சரியம் எங்கே என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் இமதியாஸ் பாக்கீர் மாக்கார் கேள்வியெழுப்பியுள்ளார்.
போலி பிரச்சாரங்களின் மூலம் மக்களை நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக ஏமாற்ற முடியாது, அவை கொஞ்ச காலத்திற்கே நீடிக்கும்.
மக்களினால் சமூகத்தினால் உணரக்கூடிய அபிவிருத்தியே உண்மையானது.
அபிவிருத்தி அடைந்துள்ளது என்பதனை ஒவ்வொருவரையும் குத்தி உணரச் செய்ய முடியாது.
அனைத்து இன மக்களுக்கும் ஒன்றிணைந்து வாழக்கூடிய ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்பும் வல்லமை ஐக்கிய தேசியக் கட்சிக்கே காணப்படுகின்றது.
சமூக நீதி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் இனங்களுக்கு இடையிலான ஐக்கியம் ஆகிய மூன்று பிரதான காரணிகளையும் சிறந்த முறையில் முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டுமே முடியும்.
என்னை வெளியேற்றியவர்களே இன்று என்னை அழைத்து கட்சியில் இணைந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியமானது என்றே கருதுகின்றேன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgsy.html


அரசியலில் நிரந்தர நண்பரும், பகையாளியும் இல்லை: லக்ஸ்மன் யாப்பா
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 03:03.20 AM GMT ]
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை. நிரந்தர பகையாளியும் இல்லை என்று அரசாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்று முன்னிலையில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னிலை உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இதன்போது ராஜபக்ச குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவும் அரசாங்கத்துடன் இணையப் போகிறாரா? என்று செய்தியாளர்கள் வினவியபோது, அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை. பகைவரும் இல்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgsz.html


வடக்கு பெண்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்: அமைச்சர் சுமேதா
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 03:14.46 AM GMT ]
வடக்கு வாழ் பெண்கள் இன்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் சுமேதா ஜயசேன தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இன்று விவசாய பூமிகளாக மாற்றமடைந்துள்ளன.
குறித்த பிரதேசங்களில் போர் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டமையை அடுத்து தாய், சேர் மரணங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பிரதேச பெண்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
நிலக்கண்ணி வெடிகள் பற்றிய அச்சம் கிடையாது.  பிள்ளைகள் அச்சமின்றி பாடசாலைக்கு செல்லக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக தலா ஐம்பது லட்ச ரூபாவினை வழங்கி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் இதனை விடவும் அதிகளவு பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் நேற்று இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgs0.html

Geen opmerkingen:

Een reactie posten