தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 november 2014

தூக்கு தண்டனை... இலங்கையின் அடுத்த அஸ்திரம்!

[ விகடன் ]
ஒன்றரைக் கோடி சிங்களவர் வாழும் ஈழத்துக்கு அடங்கி ஒடுங்கியிருக்கும் இந்தியாவுக்கு ஏழு கோடி தமிழர்கள் அடிமை போல இருப்பது சோழ ராஜராஜனுக்கு அடங்காத கம்பனைக்கூட அவமதிப்பதாகும்!அறிவற்ற வடக்கருக்கு அடங்குவது தமிழருக்கு பெருமை போலும்!!
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை இராணுவம் கைது, சித்திரவதை, படகு பறிமுதல், மீன்பிடிப் பொருட்கள் சூறை என்றுதான் தாக்குதல் தொடுக்கும். இப்போது ஐந்து மீனவர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தூக்குத் தண்டனை விதித்திருக்கிறது இலங்கை நீதிமன்றம்.
இனிமேல் இராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடித்தால், இதுதான் தண்டனை’ எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது இலங்கை அரசு. வழக்கமாக தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை இராணுவம் கைது, சித்திரவதை, படகு பறிமுதல், மீன்பிடிப் பொருட்கள் சூறை... என்றுதான் தாக்குதல் தொடுக்கும். இப்போது ஐந்து மீனவர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தூக்குத் தண்டனை விதித்திருக்கிறது இலங்கை நீதிமன்றம். தண்டனை விதிக்கப்பட்ட எட்டு பேரில், பிரசாத், எமர்சன், வில்சன், லாங்லெட், அகஸ்டஸ் ஆகிய ஐவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள். மற்றவர்கள் இலங்கைத் தமிழர்கள். தூக்கு எனத் தீர்ப்பு வந்ததும், துயரம் சூழ்ந்த தீவாகிவிட்டது இராமேஸ்வரம்!
அப்பாவிகளைத் தாக்கிய இடி!
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐவரில் ஒருவர், பிரசாத். ஸ்கெனிட்டாவுக்கும் பிரசாத்துக்கும் 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பிரசாத் இலங்கைக் கடற்படையால் பிடிபட்டபோது ஸ்கெனிட்டா, 45 நாள் கர்ப்பம் (இரண்டாவது குழந்தை). தன் கணவரிடம் இரண்டாவது குழந்தையைக் காட்ட வேண்டும் என ஆசையுடன் காத்திருந்த ஸ்கெனிட்டாவுக்கு இந்தத் தீர்ப்பு பேரதிர்ச்சி.
இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிளாட்வின் என்பவர் படகில் 2011-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி மீன்பிடிக்க  ஐந்து பேரும் கடலுக்குப் போனாங்க. அதில் என் கணவர் பிரசாத்தும் ஒருவர். அரசாங்கத்திடம் டோக்கன் பெற்று முறையான அடையாள அட்டையுடன்தான் மீன் பிடிக்கப் போனாங்க. அன்றைக்கு 700 படகுகள் வரை கடலுக்கு பாடெடுக்கப் போயிருந்துச்சு. அவங்களை எல்லாம் வளைச்சுப் பிடிச்ச இலங்கை இராணுவம் எல்லா படகுகளிலும் மீன்கள், இறால்களைக் கொள்ளையடிச்சுட்டு துரத்திவிட்டாங்க.
ஒவ்வொருத்தரா திரும்பி வர்றப்போ, எங்க வீட்டுக்காரர் படகும் திரும்பி வந்துரும்னு காத்திருந்தோம். ஆனா, வரவே இல்லை. விசாரிச்சா அந்தப் படகில் இருந்த  ஐந்து பேரை மட்டும், பிடிச்சுக் கொண்டுபோயிட்டதா சொன்னாங்க. திங்கள்கிழமை கைது பண்ணினவங்களை, இரண்டு நாட்கள் காவலில் வெச்சிருந்து புதன்கிழமைதான் கோர்ட்ல ஆஜர்படுத்தினாங்க. அப்போதான் அவங்க மேல போதைப்பொருள் கடத்தினதா கேஸ் போட்டிருக்காங்கனு சொன்னாங்க. எங்களுக்கு என்ன பண்றதுனே தெரியலை. உடனே நாங்க அரசாங்க அதிகாரிகளிடம்தான் ஓடினோம். 'நீங்களேகூட எங்க ஐந்து குடும்பங்களையும் விசாரிச்சுக்கங்க. நாங்க நிரபராதினு தெரிஞ்சா மட்டும் எங்களுக்கு உதவுங்க’னு கேட்டோம்.
தமிழக அரசின் உளவுத் துறை எங்க வீட்டுக்காரங்களோட மொபைல் போன்ல இருந்து கடந்த ஒரு வருஷத்தில் யார் யாருக்கு எல்லாம் பேசியிருக்காங்க, என்னவெல்லாம் தகவல் பரிமாற்றங்கள் நடந்திருக்குனு விசாரிச்சுட்டு, 'உங்க ஆளுங்க எந்தத் தப்பும் செய்யலை’னு சொன்னாங்க. என் கணவர் கைதுசெய்யப்பட்டு எட்டு மாசம் இந்த விசாரணை நடந்துச்சு. அப்புறம்தான் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரெண்டு லட்ச ரூபாய் இழப்பீடும், தினம் 250 ரூபாய் பணமும் தமிழக அரசு கொடுத்தது.
எங்க வழக்குகளை இந்த நிமிஷம் வரை நடத்துவது தமிழக அரசுதான். ஆனா, தமிழக அரசு விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்ட உண்மையை, மத்திய அரசு காதுலயே வாங்கிக்கலை. மத்திய அரசு கவனத்துக்கு நாங்க பலமுறை இந்த விஷயத்தைக் கொண்டுபோயும், அது பத்தி எந்த அக்கறையும் அவங்க காட்டலை. ஆரம்பத்தில் இருந்தே இந்தியத் தூதரகம் தன் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தால், இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்காது. கடைசியில் நாங்கதான் ஏமாந்து நிக்கிறோம்!'' எனக் குமுறுகிறார் ஸ்கெனிட்டா.
பிடிபட்ட படகை ஓட்டிச் சென்றவர் எமர்சன். அவருடைய மனைவி லாவண்யாவால் தீர்ப்பின் அதிர்ச்சியை இன்னமும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
''எங்க வீட்ல ஆணும் பொண்ணுமா மொத்தம் 9 பேர். எல்லோரும் ஒரே வீட்ல கூட்டுக் குடும்பமா இருந்தோம். அவரை ஏதேதோ கொடுமைப்படுத்துனதா சொன்னாங்க. ஆனா, கடைசில உயிரோட அனுப்பிருவாங்கங்கிற நம்பிக்கைல இருந்தோம். அதுக்கும் இப்போ சிக்கல். அரசாங்கம் எங்களுக்கு நல்ல வழி காமிக்கணும்'' என அழுது புலம்பும் லாவண்யாவை, அவரது இரண்டு குழந்தைகளும் வெறித்து நோக்குகின்றனர்.
தூக்குத் தண்டனை பெற்றிருக்கும் வில்சனுக்கு ஏழு சகோதரிகள். காவியா, சுபிக்ஷா, ஜோகன்ஸ் என மூன்று குழந்தைகள். ''அவர் ஒருத்தரோட வருமானத்தில்தான் மொத்தக் குடும்பமும் நடந்துச்சு. கைது பண்ணப்போ சீக்கிரம் அவரை விட்ருவாங்கனுதான் காத்துட்டு இருந்தோம். ஒவ்வொரு முறை அங்கே இருந்து விடுதலையாகி வர்றவங்ககிட்ட, 'எம் புருஷனைப் பார்த்தீங்களா... நல்லா இருக்காரா?’னு விசாரிப்பேன். ஆனா, பதிலே இருக்காது. தீர்ப்பு சொல்றப்போ, 'நிச்சயம் விடுதலை பண்ணிருவாங்க’னு நம்பி குடும்பத்தோடு டி.வி முன்னாடி தவம் கிடந்தோம். ஆனா, திடுக்னு 'தூக்குத் தண்டனை’னு சொல்லிட்டாங்க. எனக்கு கண்ணைக் கட்டிக்கிட்டு வந்திருச்சு. அவுக கைதான நாளில் இருந்து ஒவ்வொரு ஆபீசருங்ககிட்டயும் மனு கொடுக்க நடந்து கால் முட்டி தேய்ஞ்சதுதான் மிச்சம். எந்தச் சாமியும் எங்களைக் காப்பாத்த வரலையே'' என மூன்று குழந்தைகளையும் அள்ளி அணைத்து அழுகிறார் ஜான்சி.
ஜான் பிரிட்டோவின் ஒரே ஒரு மகன் லாங்லெட். நாமக்கல் பள்ளி ஒன்றின் பத்தாம் வகுப்பு மாணவன். ஜான் பிரிட்டோவுக்கு உடல் நலம் சரியில்லாத நாள் அன்று விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கிறான் லாங்லெட். அப்பாவுக்குப் பதிலாக தான் கடலுக்குச் சென்றால் அன்றைய வருமானம் குடும்பத்துக்கு உதவுமே என பாடெடுக்கச் சென்றிருக்கிறான். அன்று சென்றவன்தான்... இன்று இலங்கை அரசாங்கத்தால் தூக்கு மேடைக்குத் தள்ளப்பட்டிருக்கிறான். ஒரே மகனை இலங்கை அரசின் கோரப் பிடியில் இருந்து எப்படி மீட்பது எனத் தெரியாமல், பித்துப்பிடித்து அலைகிறார்கள் ஜான் பிரிட்டோவும் அவரது மனைவியும்.
அகஸ்டஸுக்கு சந்தியா, மிர்ஷா என இரண்டு குழந்தைகள். அவர்களுடன் தன் வயதான பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார் அகஸ்டஸின் மனைவி பாக்கியசீலி. ''அவரைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு. ஆனா, எனக்கு பாஸ்போர்ட் இல்லை. அதைக் கொடுக்கச் சொல்லி அரசாங்கத்துக்கிட்ட கேட்டுட்டு இருந்தேன். ஆனா, இனி அவரைக் காப்பாத்தச் சொல்லிப் போராடணும்'' என்கிறார் பாக்கியசீலி.
கைது சம்பவத்தின்போது நடந்தது என்ன?
ஐந்து மீனவர்களும் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழித்துதான் இலங்கையின் மல்லாகம் நீதிமன்றத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆஜர்படுத்தியது காங்கேசன்துறை போலீஸ். அதுவரை வழக்கம்போல எல்லை தாண்டிய வழக்கில்தான் தாங்கள் கைது செய்யப்பட்டுள்ளோம் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தனர் அந்த அப்பாவி மீனவர்கள்.
கைது செய்யப்பட்டதில் இருந்து இவர்களுக்காக ஆஜர் ஆனது சிங்கள வழக்குரைஞர் அனில் சில்வா. இவருக்கு தமிழ் தெரியாது என்பதால், தமிழ் தெரிந்த சராபி என்ற வழக்குரைஞரை உதவிக்கு வைத்து மீனவர்களுக்காக வாதாடினார். நீதிமன்ற விசாரணை முழுக்கவே சிங்களத்தில்தான் நடந்திருக்கிறது. ஓரிரு வரிகளில் பதில் அளிக்கக்கூடிய கேள்விகளை மட்டும் மீனவர்களிடம் கேட்டு, இறுதியில் தீர்ப்பை மட்டும் இவர்களிடம் தமிழில் சொல்லியிருக்கிறார்கள்.
மீனவர்களுக்கு இந்தியாவில் இருந்து போதுமான உதவியும் சட்ட ஆலோசனையும் கிடைக்காத நிலையில், ஒருதலைப்பட்சமாக நடந்த விசாரணையே இந்த அதிர்ச்சி தீர்ப்புக்குக் காரணம் என்கிறார்கள் மீனவ அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள்.
இந்த வழக்கில் கண்காணிப்பாளராக செயல்பட்ட 'நிரபராதிகள் மீனவர் கூட்டமைப்பின்’ தமிழகப் பிரதிநிதி அருளானந்தம் இப்போது மேல்முறையீட்டு நடவடிக்கைகளுக்காக கொழும்பில் இருக்கிறார். அவரைத் தொடர்புகொண்டு பேசினேன்.
நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நம் மீனவர்களைச் சுற்றிவளைத்த இலங்கைக் கடற்படை, அவர்கள் பிடித்துவைத்திருந்த மீன்களை எடுத்துக்கொண்டு நால்வரை தங்கள் படகில் ஏற்றிக்கொண்டு, எமர்சனை படகை ஓட்டிக்கொண்டு தங்களைப் பின்தொடருமாறு துப்பாக்கி முனையில் மிரட்டி அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
அவர்களை நெடுந்தீவு கடற்கரை முகாமுக்குக் கொண்டுசென்றனர். மறுநாள் காலை காங்கேசன் துறை போலீஸிடம் இவர்களை ஒப்படைத்தபோது, அங்கு ஏற்கெனவே இலங்கைத் தமிழ் மீனவர்கள் கமல் கிறிஸ்டியன், கில்சன், துசாந்தன் ஆகிய மூவர் இருந்துள்ளர். தமிழக மீனவர்கள் தாங்கள் கொண்டுவந்த 999.4 கிராம் ஹெராயின் போதைப்பொருளை, இலங்கை மீனவர்களிடம் கொடுத்ததாக போதைத்தடுப்புப் பிரிவின் கீழ் வழக்கு பதிந்தனர்.
மல்லாகம் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்களை 'யார் என்றே தெரியாது’ எனச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. மேல்முறையீடு கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் வரும்போது, நம் மீனவர் தரப்பு நியாயத்தை அழுத்தமாக எடுத்துச் சொல்லலாம். அப்போது அவர்கள் விடுதலை ஆவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது!'' என்கிறார் அருளானந்தம்.
இராணுவம் போதைப்பொருளை வைக்கும், போலீஸ் கைது செய்யும்’ என்பது இலங்கையில் வாடிக்கையான ஒன்று. 2009-ம் ஆண்டுக்குப் பிறகு உள்நாட்டு யுத்தத்தை முடித்துவிட்ட இலங்கை அரசுக்கு, பெரும் தலைவலியாக இருப்பது இராமேஸ்வரம் மீனவர்கள்தான்.
இனி எப்போதும் ஈழத்தில் தமிழர்கள் அரசியல்ரீதியாகப் பலம்பெறாமல் இருக்க, புவியியல்  ரீதியாக இராமேஸ்வரம் கடல் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறது இலங்கை அரசாங்கம். அதனாலேயே தீவுப் பகுதி மீனவர்களோடு, ஒரு மறைமுக யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறது இலங்கை இராணுவம். அந்த யுத்தத்தின் ஆரம்ப சமிக்ஞைதான், இந்தத் தூக்குத் தண்டனை!
குற்றத்துக்கு யார் சாட்சி?
எட்டு மீனவர்களுக்கும் கொழும்பு நீதிமன்றம் சாட்சியங்களின் அடிப்படையில்தான் தூக்குத் தண்டனை வழங்கியிருக்கிறது. சுமார் 10 சாட்சியங்களின் அடிப்படையில் 8 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்திருக்கிறார்கள். யார் அந்தச் சாட்சிகள்?
முதல் சாட்சி, பம்பரவான லியனகே சரித்த குணவர்த்தன. கொழும்பு கடற்படைத் தலைமையகத்தின் லெஃப்டினென்ட் கமாண்டர் இவர். கடற்படைத் தளபதி ஹேரத் முதியன் மற்றும் காங்கேசன்துறை போலீசார்தான் பிற சாட்சிகள். வழக்கு தொடுத்தவர்களே சாட்சியம் அளித்து அதற்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்ட விசித்திரக் கொடுமை இலங்கையில் மட்டுமே அரங்கேறும்!
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgr4.html

Geen opmerkingen:

Een reactie posten