தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 november 2014

யாழ்.போதனா வைத்தியசாலை சுற்றாடலில் போலி வைத்திய நிலையங்கள்!

வடமாகாண நிதி மோசடிகள் கண்டறிவதற்கான நிபுணர்குழு விரைவில் அமைக்கப்படும்!- சி.வி.கே
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 12:45.25 PM GMT ]
வடமாகாணத்தில் நெல்சிப் திட்டத்தின் கீழ் நடைபெற்றிருக்கும் முறைகேடுகள் மற்றும் பண மோசடிகளை கண்டறிவதற்கான நிபுணர்குழு விரைவில் அமைக்கப்படும் எ ன வடமாகாணசபை அவை தலைவரும், மாகாண பொது கணக்குகள் குழுவின் தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் வடகிழக்கு மாகாணங்களில் 2010ம் ஆண்டு தொடக்கம் மேற்படி நெல்சிப் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வடமாகாணத்தில் மேற்படி திட்டத்தை நடைமுறைப்படுத்திய அதிகாரிகள், சுமார் 100மில்லியன் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் மேற்படி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட வேண்டும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேணடும் என கோரியுள்ளதுடன், முன்னதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியும் மேற்படி விடயம் தொடர்பில் நிபுணர் குழு அமைத்துள்ளார்.
இதேவேளை விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருக்கும் மாகாண பொது கணக்குகள் குழுவின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மேற்படி முறைகேடு தொடர்பில் ஆய்வதற்கு மாகாண பொது கணக்குகள் குழுவிற்கு அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன், பிரதேச சபை மற்றும் நகரசபை ஆகியவற்றில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பிலான முழுமையான தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் விரைவில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுவதுடன், விடயம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் தாம் இருப்பதாக கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXew2.html

அரசுக்கெதிராக அரசுக்குள்ளிருந்து செயற்படுபவர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள்!- தயாசிறி
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 12:56.34 PM GMT ]
அரசாங்கத்திற்கு எதிராக அரசாங்கத்திற்கு உள்ளிருந்தே செயற்படுபவர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என வட மத்திய மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சிக்குள் இருந்து கொண்டே அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் நபர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டவர்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் பொது வேட்பாளர் ஓருவரைத் தெரிவு செய்ய முடியவில்லை.
பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாவிட்டால், சந்திரிக்கா பண்டாரநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியினர் போட்டியிடச் செய்வார்கள்.
அவ்வாறு போட்டியிடச் செய்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு வேட்பாளர்களுக்கு மக்களினால் வாக்களிக்க நேரிடும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXew4.html
யாழ்.போதனா வைத்தியசாலை சுற்றாடலில் போலி வைத்திய நிலையங்கள்
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 12:52.48 PM GMT ]
குடாநாட்டில் ஐஸ் கிறீம் உற்பத்தியாளர்களுடைய சிக்கல் உச்சத்தையடைந்திருக்கும் நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை சுற்றாடலில் போலி வைத்திய நிலையங்கள் இயங்குவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குவதாகவும் வைத்தியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை சுற்றாடலில் பல் வைத்திய நிலையம் மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிலையம் என தனியாரால் நடத்தப்படுகின்றன.
ஆனால் இவற்றில் முறையான சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என்பதுடன், இங்கே வைத்தியம் செய்யும் பலர் வைத்தியர்களே இல்லை. அவர்கள் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் எனவும் கூறப்படுகின்றது.
குறிப்பாக அண்மையில் இவ்வாறான போலி வைத்திய நிலையங்களில் பல் சிகிச்சை பெறச்சென்ற பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல் மிதப்புக்காக சிகிச்சை பெற சென்றிருந்த ஒருவருக்கு வேலி கட்டும் கட்டுக் கம்பியினால் பல் கட்டப்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இதேவேளை மேற்படி சம்பவம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வட மாகாண பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கும் வைத்திய நிபுணர்கள் எழுத்து மூலம் முறைப்பாடு கொடுத்துள்ளபோதும் அவர்கள் இந்த விடயத்தில் அக்கறையற்றிருப்பதாக வைத்தியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இலங்கையின் மருத்துவ சட்டத்தின் படி ஒரு தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒரு நோயாளியை தொட முடியாது. அவரிடம் பணம் பெற முடியாது, தனியாக ஆய்வு கூடங்களை வைத்திருக்க முடியாது. என பல சட்டங்கள் சொல்லப்பட்டுள்ள போதும் அவை அனைத்தும் இங்கே அப்பட்டமாக மீறப்படுவதாக சுட்டிக்காட்டியிருக்கும் வைத்தியர்கள், இதனால் ஏழை மக்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXew3.html

Geen opmerkingen:

Een reactie posten