தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 november 2014

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க கடவுளிடம் கூற சென்ற மகிந்த இன்று அதனை தக்கவைத்து கொண்டுள்ளார்: மாதுளுவாவே!



பாடசாலை மாணவனை பலியெடுத்த பஸ்: மட்டக்களப்பில் பரிதாபம்
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 11:55.51 AM GMT ]
மட்டக்களப்பு- திருகோணமலை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, இன்று திங்கட்கிழமை பாடசாலை மாணவனொருவன் மீது மோதியதால் அம்மாணவன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்த பஸ், அவ்வழியே தனியார் வகுப்பொன்றுக்கு சைக்களில் சென்றுக்கொண்டிருந்த மாணவன் மீது மோதியது.
இதன்போது மாணவன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
புனித மிக்கேல் கல்லூரியில் தரம் 08 இல் கல்வி பயிலும் கூழாவடியை சேர்ந்த கேசாந்த் என்னும் மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியே அவ்வழியே தனியார் வகுப்பொன்றுக்கு சைக்களில் சென்றுக்கொண்டிருந்த மாணவன் மீது மோதியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXewz.html
முடியுமா, முடியாதா? அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தீர்ப்பு
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 12:30.42 PM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட முடியுமா, முடியாதா என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று மாலை அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் ஆதரவாகவும் எதிராகவும் 38 விரிவுரை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், கே. ஸ்ரீபவன், சந்திரா ஏக்கநாயக்க, ஈவா வனசுந்தர, ரோஹினி மாரசிங்க, புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் ஜனாதிபதி மகிந்த அனுப்பிய விளக்க கோரிக்கை ஆராயப்பட்டது.
இந்த நீதியரசர் குழுவில் வெளிநாடு சென்றிருந்த சலீம் மர்சூக் மாத்திரமே இடம்பெறவில்லை.
பிரதமர் டி.எம். ஜயரத்ன, கோமின் தயாசிறி, க்ஷனிகா ஹிரிபுரேகம, ஜே.சி. வெலியமுன, பேராசிரியர் சுதந்த லியனகே, பேராசிரியர் சம்பத் பண்டார, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, சுனில் வட்டகல, ஊடகவியலாளர் கே.டப்ளியூ. ஜனரஞ்சன, கலாநிதி என்.எல்.கே. கருணாரத்ன, ஆகியோர் உள்ளிட்ட 38 பேர் எழுத்து மூலமான வாதங்களை முன்வைத்திருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXew0.html

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க கடவுளிடம் கூற சென்ற மகிந்த இன்று அதனை தக்கவைத்து கொண்டுள்ளார்: மாதுளுவாவே
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 12:38.08 PM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை கடவுளிடம் கூறியாவது ஒழிக்க போவதாக கூறி இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் போது கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்றதாக நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.
கோட்டே சோலிஸ் ஹொட்டலில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
மகிந்த ராஜபக்ஷ கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்றது மாத்திரமல்லது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஜே.வி.பியுடன் உடன்படிக்கையை மேற்கொண்ட போது தனது முதலாவது பதவிக்காலத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிப்பதாக உறுதியளித்தார்.
அதனையும் தாண்டி மகிந்த சிந்தனையிலும் அந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.
இதனால் அனைவரையும் விட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைக்கு எதிராக செயற்பட்டார்.
ஆனால் தற்போது அந்த அதிகாரத்தை தக்கவைத்து கொண்டு மூன்றாது முறையாகவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட போகிறார்.
முழு நாடும் எதிர்க்கும் இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் மாதுளுவாவே சோபித தேரர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXew1.html

Geen opmerkingen:

Een reactie posten