தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 november 2014

இந்தியா இன்றி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது: விக்னேஸ்வரன்!

கொலைக் குற்றச்சாட்டு! மூவருக்கு மரண தண்டனை
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 01:10.37 PM GMT ]
சிலாபம் மாம்புரி – சேதபொல பிரதேசத்தில் ஒருவரை வெட்டிக்கொலை செய்த மூன்று குற்றவாளிகளுக்கு இன்று சிலாபம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்மானித்துள்ளது.
1995 ஆம் ஆண்டு மாம்புரி – சேதபொல பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
கல்பிட்டி ஏத்தாலை, நல்லந்தலுவை, மற்றும் பாலாசோலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மூவருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாக தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXew5.html
ரத்ன தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 01:22.37 PM GMT ]
அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருவதோடு எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து செயற்பட்டு வரும் தூய்மைக்கான நாளை அமைப்பின் ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்ன தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.
அரச பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை, நம்பிக்கை துரோகம், போலி ஆவணங்களை சமர்பித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பௌத்த விவகாரம் மற்றும் புனர்ஜீவன மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதாக கூறி 4.73 மில்லியன் ரூபா பணத்தை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொண்டு அதனை பயன்படுத்தி தனக்காக இருப்பிடம் ஒன்றை நிர்மாணித்து கொண்டதாகவும் இதன் மூலம் ரத்ன தேரர் அரச பணத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக தெளிவான சாட்சியங்கள் இருப்பதால் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகமே இந்த ஆலோசனையை அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர். ரணவீரவிற்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள யோசனைகளை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றாது போனால், மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அத்துரலியே ரத்ன தேரர் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXew7.html
இந்தியா இன்றி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது: விக்னேஸ்வரன்
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 01:18.41 PM GMT ]
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட்டால் தான் நிரந்தர தீர்வுகாண முடியும் என வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 7–ந் திகதி சென்னைக்கு விஜயம் செய்த விக்னேஸ்வரன், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இன்று காலை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட 18 ஆயிரம் பேரும், ஒரு லட்சம் இளம் விதவைகளும், பெற்றோரை இழந்த எண்ணற்ற குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் இருக்கின்றனர்.
இளைஞர்கள், பெண்கள், அன்றாடம் குடும்பம் நடத்த பணவசதி இன்றி வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளும் கிடைக்க வில்லை. இந்தியா முன்வந்து வீடு கட்டித்தரும் திட்டத்தில் தகுதியானவர்களுக்கு வீடு கிடைப்பதில்லை.
அரசியல் செல்வாக்கு, ஆள்பலம் உள்ளவர்களுக்கு வீடு கிடைக்கிறது. இலங்கை அரசு எங்களை எல்லா விதத்திலும் இயங்க விடாமல் தடுக்கிறது. அதிகாரம் இல்லாமல் தான் நான் முதல் – மந்திரியாக செயல்படுகிறேன்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட்டால் தான் நிரந்தர தீர்வு காண முடியும். இந்தியா இன்றி இப்பிரச்சினையில் தீர்வு காண முடியாது.
1987ம் ஆண்டு ராஜூவ் ஜெயவர்த்தனே கொண்டு வந்த 13வது திருத்த சட்டத்தத்தை நிறைவேற்ற இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
சமீபத்தில் ராஜபக்சவிடம் 13வது சட்ட திருத்தத்தை இலங்கையில் நடைமுறையில் பிரதமர் மோடி கூறியது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது.
இலங்கை அரசுக்கு பல்வேறு தரப்பினரும் நெருக்கடி கொடுக்கும் போது தான் அவர்கள் சிலவற்றை நிறைவேற்றுகிறார்கள் இல்லையென்றால் எதையும் அவர்கள் கண்ட கொள்வதில்லை.
ஐந்து தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து ஒட்டு மொத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்திய அரசும் இலங்கையுடன் பேசி வருகிறது. சமீபத்தில் என்னை மீனவ குடும்பத்தினரும் சந்தித்து பேசினார்கள். அவர்களிடம் நாங்கள் கொடுத்த உறுதி மொழி என்னவென்றால் 1976–ம் ஆண்டில் இருந்து இலங்கையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றும், சட்டத்தில் அவ்வாறு கூறப்பட்டிருந்தாலும் அத்தகைய கடுமையான எந்த வித நடவடிக்கையிலும் இலங்கை அரசு ஈடுபடவில்லை என்று கூறினேன்.
இதில் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மரண தண்டனைக்கு பதில் நன்மைகளே கிடைக்க கூடும். இந்த வழக்கு கோர்ட்டில் இருப்பதால் அதிகமாக இதில் விமர்சிக்க முடியாது என்கிறேன்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களையும் மத்திய சிறைக்கு மாற்ற முடியுமா என்பது பற்றி எங்களுக்கு தெரியாது.
இலங்கை ஜனாதிபதி சொல்வது எதையும் உடனே செயல்படுத்துவது கிடையாது. 2009ம் ஆண்டு இலங்கையில் போர் முடிந்ததும் வட மாகாண தேர்தலை நடத்ததப் போவதாக கூறினார். ஆனால் அப்போது நடத்தவில்லை.
இந்த விஷயத்தில் இந்தியா தலையிட்டு வலியுறுத்திய பிறகு தான் 2013ம் ஆண்டு எங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. எனவே பிரதமர் மோடி அரசு இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகண்டிட உதவ முடியும் என்று நம்பிக்கையில் இருக்கிறோம்.
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் எங்கள் வளர்ச்சி அடைந்து விடக்கூடாது என ஜனாதிபதி கருதுகிறார். இதற்காக சிங்கள குடியோற்றமும் அதிகம் நடைபெறுகிறது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXew6.html

Geen opmerkingen:

Een reactie posten