தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 november 2014

மஹிந்தவின் வெற்றிக்கு வட மாகாண மக்களின் வாக்கு தேவையில்லை: அங்கஜன்!

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறும் சம்பிக்க ரணவக்க!
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 08:11.16 AM GMT ]
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இந்த வாரம் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது உட்பட ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ள யோசனைகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இணக்கம் வெளியிடவில்லை என்றால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க நேரிடும் என அந்த கட்சியின் தவிசாளர் அத்துரலியே ரத்ன தேரர் நேற்று சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்திருந்தார்.
இந்த கொள்கை நிலைப்பாடு தொடர்பில் கட்சிக்குள் எந்த கருத்து முரண்பாடுகளும் இல்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
ஜனாதிபதி தன்னிச்சையாக சட்டவிரோத ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை அறிவித்தால் அதற்கு எதிராக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலரும் இணைந்து கொள்வர் எனவும் அத்துரலியே ரத்ன தேரர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில், அமைச்சர் சம்பிக்க ரணவக்க அரசாங்கம் வழங்கியுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXeu4.html
மங்களவை அரசாங்கத்தில் இணைக்கும் மகிந்தவின் முயற்சி தோல்வி
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 09:04.08 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவை மீண்டும் அரசாங்கத்துடன் இணைக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முயற்சி முற்றாக தோல்வியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மங்கள சமரவீரவை மீண்டும் அரசாங்கத்தில் இணைக்கும் வேலைத்திட்டம் முழுயமையாக ஜனாதிபதியின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை தோல்வியடைந்துள்ளமையானது அவரது எதிர்கால திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைய காரணமாக அமைந்துள்ளது என ஜே.வி.பியின் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள மங்கள சமரவீர இன்று நாடு திரும்புவதாக இருந்தது. எனினும் அவர் நாடு திரும்புவது மேலும் தாமதமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXeu5.html

அமைச்சர் பதவியை கூட வகிக்காத சஜித் ஜனாதிபதியாக முயற்சி! பீலிக்ஸ் பெரேரா குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 09:20.33 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முயற்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் பதவியை கூட வகிக்காதவர் என அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜா-எல துடெல்ல நகரில் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கை அலுவலகம் ஒன்றை இன்று திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாச தனது தந்தையான ரணசிங்க பிரேமதாசவின் கொலை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கவில்லை.
பிரேமதாச கொலை செய்யப்பட்ட இடம் ஒரு மணிநேரத்திற்குள் கழுவி சுத்தம் செய்யப்பட்டது.
என்னை போன்ற ஒருவரின் தந்தைக்கு இப்படியான அகால மரணம் சம்பவித்திருந்தால் அதனால் ஏற்படும் அதிர்ச்சி பேரதிர்ச்சியாக இருந்திருக்கும்.
அப்படி நடந்திருந்தால், உரிய விசாரணைகளை நடத்திய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் எனவும் பீலிக்ஸ் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXeu6.html
மஹிந்தவின் வெற்றிக்கு வட மாகாண மக்களின் வாக்கு தேவையில்லை: அங்கஜன்
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 09:33.24 AM GMT ]
வட மாகாண மக்கள் வாக்களிக்காவிட்டாலும் மகிந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட இணைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் யாழ் மாவட்ட ஒன்றுகூடல் நேற்று காலை 10 மணியளவில் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த 10 வருடங்களில் மஹிந்த அரசு எங்கோ இருந்த இலங்கையை எங்கோ கொண்டு சென்றுவிட்டுள்ளது. சாதாரண மக்களையும் அபிவிருத்தி சென்றடைந்துள்ளது. எங்களுடைய பிரதேச மக்கள் ஜனாதிபதி செய்த அபிவிருத்திகளை சாதாரணமாக விடக்கூடாது. வடமாகாண மக்கள் வாக்களிக்காவிட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெல்வார்.
அவருக்கு தென்பகுதி மக்களின் வாக்குகளே போதும். ஆனால், ஒருவர் எமக்கு நல்ல விடயங்களை செய்யும் போது அவர்களை தட்டிக்கொடுப்பதோடு நன்றியும் தெரிவிக்கவும் வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சாதாரண மனிதர்களின் கட்சி. தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அவர்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
எல்லோருக்கும் இந்தக் கட்சியால் பல நலன்கள் கிடைக்கும். 12 மணிநேரம் கொழும்பு பயணம் தற்போது 6 மணித்தியாலமாக குறைந்துள்ளது என்றார். இந்நிகழ்வில், இலங்கை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் பொது செயலாளர் வெஸ்லி தெய்வேந்திரா, இலங்கை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதேச செயலாளர் றஞ்சித் ஹெட்டியாராச்சி, பெற்றோலிய கூட்டுத்தாபன உதவிச்செயலாளர் பந்துல சமன் குமார, மற்றும் தொழிற்சங்க உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXeu7.html

Geen opmerkingen:

Een reactie posten