[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 11:37.59 AM GMT ]
வடக்கையும் தெற்கையும் இணைத்து ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ள ரயில் சேவையின் கீழ் இந்த புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரதி சனிக்கிழமை தோறும் காலை 6.20க்கு மாத்தறையில் புறப்படும் இந்த கடுகதி ரயில் அன்றைய தினம் மாலை 5.10க்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.
மீண்டும் ஞாயிறு முற்பகல் 10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 8.50க்கு மாத்தறையை சென்றடையும்.
மாத்தறை, காலி உட்பட தெற்கில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்த ரயில் சேவை மிக வசதியாக இருப்பதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYmo1.html
முன்னாள் சுங்க பணிப்பாளர் கனசபைக்கு எதிராக வழக்கு தாக்கல்
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 12:23.33 PM GMT ]
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2004- 2007 ஆம் ஆண்டுகளில் சொத்து விபரங்களை தாக்கல் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் காரணமாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் சுங்க திணைக்கள பணப்பாளர் தனது பதவிக்காலத்தில் 10 லட்சம் ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பிலும் இதற்கு முன்னர் ஆணைக்குழுவினால் வழக்கு செய்யப்பட்டிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYmo3.html
புகைத்தல் காரணமாக தினமும் 30 பேர் வரை இறக்கின்றனர்: மைத்திரிபால சிறிசேன
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 12:38.48 PM GMT ]
அத்துடன் இதன் காரணமாக புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை காணக் கூடியதாக உள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உலக மக்கள் சனத் தொகையில் புற்றுநோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவிலேயே அதிகம்.
புற்றுநோய் சம்பந்தமாக கவனத்தில் கொள்ளும் போது நாட்டில் மது, புகை மற்றும் புகையிலை போன்றவற்றை முற்றாக நிராகரிப்பதை கொள்கையாக செயற்படுத்துவது மிகவும் முக்கியமானது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
புத்தசாசன மற்றும் மத விகார அமைச்சில் நடைபெற்ற புற்றுநோய் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான இஸ்லாமிய மத தலைவர்களுக்கு தெளிவுபடுத்துத்தும் வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYmo5.html
ஜனாதிபதியின் ஆட்டத்தை ஏற்க முடியாது: ஜே.வி.பி
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 01:19.43 PM GMT ]
ஜே.வி.பியின் தலைமையக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி நீதிமன்றத்தை பயன்படுத்தி அவருக்கு தேவையான தீர்ப்பை பெற்றுள்ளார். இதனால் நீதிமன்றம் வழங்கிய முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை.
இறுதிவரை மகிந்தவுக்கு மூன்றாவது முறையாக முடியாது என்ற போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம்.
மூன்றாவது முறையாக தனக்கு தேர்தலில் போட்டியிட முடியுமா, தற்போதைய பதவிக்காலத்தில் 4 ஆண்டுகளின் பின் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியுமா என ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தின் கருத்தை கேட்டிருந்தார்.
முடியும் என்ற கருத்தை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனக்கு தேவையான முடிவை நீதிமன்றத்திடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் இந்த முடிவை அறிவிக்க விசாரணைகளை நடத்தவில்லை.முறைமுகமாகவே சகலமும் மேற்கொள்ளப்பட்டது.
வாய்மொழி மூலமான வாதங்களை முன்வைக்கவோ, சாட்சியங்களை முன்வைக்கவோ ஏனைய தரப்பினருக்கு இடமளிக்கப்படவில்லை.
சகலவற்றையும் இரகசியமான முறையில் செய்த அரசாங்கம் நீதிமன்றத்தின் முடிவை மட்டும் பகிரங்கப்படுத்தியுள்ளது.
அனைத்தையும் இரகசியமாக செய்த அரசாங்கம், அதன் கருத்தை மாத்திரம் ஏன் பகிரங்கப்படுத்தியது.
தனக்கு எதிராக சமூகத்தில் இருந்து வந்த கடும் நிலைப்பாடுகளை அடக்குவதற்காக ஜனாதிபதி நீதிமன்றத்தை பயன்படுத்தியுள்ளார்.
தனக்கு எதிராக சமூகத்தில் இருந்து வந்த கடும் நிலைப்பாடுகளை அடக்குவதற்காக ஜனாதிபதி நீதிமன்றத்தை பயன்படுத்தியுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது எனவும் 4 ஆண்டுகளின் பின் தேர்தலை அறிவிக்க முடியாது எனவும் சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாரிய சமூக நிலைப்பாட்டை கட்டியெழுப்பியுள்ளனர்.
நீதிமன்றம் தீர்மானம் ஒன்றை வழங்கியதாக அரசாங்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது நீதிமன்றத்தின் கருத்து மாத்திரமே.
இந்த விடயம் தொடர்பில் பகிரங்க நீதிமன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. மகிந்த ராஜபக்ஷ தனது தேவைக்கு நீதிமன்றத்தை பயன்படுத்திக்கொண்டார்.
இதன் காரணமாக ஜே.வி.பி இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளாது. இதற்கு காரணங்கள் உள்ளன.
ஜனாதிபதிக்கு மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது. இரண்டம் தவணைக்கான பதவிக்காலத்தில் நான்கு ஆண்டு முடிந்த பின்னர் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க முடியாது என அரசியலமைப்பு ரீதியான விடயங்களை முன்வைத்தே நாம் வாதங்களை செய்து வந்தோம் எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYmo7.html
அதிகாரத்தை கைப்பற்றும் சதித்திட்டத்தில் பல தரப்பினர்- பொதுவேட்பாளருக்கு ஆளும் கட்சியின் 10 பேர் ஆதரவு
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 01:41.53 PM GMT ]
இந்த சூழ்ச்சிகரமான சக்திகளை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கொழும்பு சுகாததாச விளையாட்டு அரங்கில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட கருத்தரங்கில் கலந்த கொண்டு பேசிய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டை அழிப்பதற்காக பல்வேறு காலங்களில் தனித்தனியாக போராடிய தரப்பினர் இன்று ஒன்றிணைந்து செயற்படுவதை காணமுடிகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
பொதுவேட்பாளருக்கு ஆளும் கட்சியின் 10 பேர் ஆதரவு- ரத்தன தேரர்
இலங்கையில் மாற்றத்தை கொண்டு வர பொதுவேட்பாளரை தேர்தலில் போட்டியிடச் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை கொழும்பு 2 முத்தையா பார்க்கில் நடைபெற்ற எதிரணிகளின் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
இந்தநிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியும் ஜாதிக ஹெல உறுமயவும் ஒன்றிணைந்து மேடையில் தோன்றியமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYmpy.html
பிரபாகரன் துப்பாக்கியில் செய்ததை கூட்டமைப்பு வேறுவிதமாக மேற்கொண்டு வருகிறது!– துமிந்த சில்வா
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 02:17.56 PM GMT ]
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளில் உள்ள புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செயற்படுகிறது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய சூழலில் நாடு எதிர்நோக்கும் சவால் என்ற தலைப்பில் ஊடகத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
30 வருடகால போரை முடிவுக்கு கொண்டு வந்த பின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டை அபிவிருத்தி பாதையை நோக்கி இட்டுச் செல்கிறார்.
இப்படியான நிலைமையில், புலம்பெயர் தமிழர்கள் மீ்ண்டும் பயங்கரவாதத்தை மேற்கொள்ளும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர் எனவும் துமிந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYmp0.html
Geen opmerkingen:
Een reactie posten