தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 12 november 2014

விக்னேஸ்வரன் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை: தமிழக காங்கிரஸ் தலைவர்!

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் 13வது திருத்தம் தொடர்பாக கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் சுவாமியார் மடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.
அதற்கு முன்னர் அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில்,
இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு கட்டிக்கொடுத்த குடியிருப்புகளில் சிங்களவர்கள் குடி புகுந்துள்ளனர்.
எனவே, ராஜபக்சவை பதவியில் இருந்து தூக்கியெறிய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் 13வது சட்டதிருத்தம் தொடர்பாக கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.
அங்குள்ள தமிழர்களுக்காக இந்திய அரசு 2 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேல் நிதி ஒதுக்கியது. ஆனால் அதை ராஜபக்ச அரசு தமிழர்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கவில்லை. எனவே ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்க வேண்டும என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYmo2.html

Geen opmerkingen:

Een reactie posten