தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 12 november 2014

அமைச்சர் சம்பிக்க ரணவக்க எதிர்க்கட்சி ஆசனத்தில் அமருவார்! தூஷண வார்த்தை பேசாத பௌத்த பிக்குவை வரவேற்போம்!- அசாத் சாலி!



பட்டம் பெற்ற கிளிநொச்சி மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்கு அறிவகம் வாழ்த்து
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 01:54.33 PM GMT ]
யாழ். பல்கலைக்கழகத்தின் 30வது பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை பெற்றுக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பணிகளில் முன்னின்றுழைக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையான அறிவகம், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மாவட்ட கட்சி நிர்வாகம், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டம் கனகாம்பிகை குளத்தை சொந்த இடமாகக் கொண்டவரும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினராகவும் கிளிநொச்சி மாவட்டத்தின் கட்சிப் பணிகளில் முன்னின்று உழைப்பவருமான பரமநாதன் குமாரசிங்கம் யாழ் பல்கலைக்கழகத்தின் 30 வது பட்டமளிப்பு விழாவில் தொழில் நிர்வாகமானி பட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் மனிதவள முகாமைத்துவ கற்கை நெறியை பூர்த்தி செய்து இந்த பட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இவர் கிளி சிவபாதகலையகம் பாடசாலை கிளிநொச்சி மத்திய கல்லூரி என்பவற்றின் பழைய மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்டம் வண்ணாங்கேணி பளையை சொந்த இடமாகக் கொண்ட சுப்பிரமணியம் சுரேன், கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இளைஞர் அணியின் தலைவராகவும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினராகவும் கட்சியின் பணியில் முன்னின்று உழைப்பவராகவும் இருந்துவரும் இவ்வேளையில், கல்வியை சிறப்புற மேற்கொண்டு யாழ் பல்கலைக்கழகத்தின் 30வது பட்டமளிப்பு விழாவில் தொழில் நிர்வாகமாணி பட்டத்தை பெற்றுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் மனிதவள முகாமைத்துவ சிறப்பு கற்கையை மேற்கொண்டு இந்த பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
தற்போது இவர் சட்டற் கற்கை மாணவனாகவும் இருந்து வருவதுடன், சுப்பிரமணியம் சுரேன் விசுவமடு மகா வித்தியாலயம் கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி என்பவற்றின் பழைய மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி உதயநகர் கிழக்கை சொந்த இடமாகக் கொண்ட சுந்தரலிங்கம் லோகேஸ்வரன் யாழ் பல்கலைக்கழகத்தின் 30வது பட்டமளிப்பு விழாவில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா (முழுநேரம்) கற்கையை மேற்கொண்டு முதற்தர சித்தி பெற்று பேராசிரியர் பி.சந்திரசேகரம் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
இவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் இளைஞர் அணியின் செயலாளராக விளங்கியதுடன், தற்பொழுது கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் கட்சிக் கிளையின் செயலாளராக இருந்து வருகின்றார்.
பிரபல தமிழாசிரியரான இவர், கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலய ஆசிரியராக கடமையாற்றுகின்றார்.
சுந்தரலிங்கம் லோகேஸ்வரன் கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பழைய மாணவன் என்பதுடன், பட்டப்பின் கல்வி டிப்ளோமாவில் கிளிநொச்சி மாவட்டத்தில் தங்கப் பதக்கத்தை பெற்ற முதலாவது பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYmpz.html
கடன் தொல்லை! மட்டக்களப்பில் தபால் ஊழியர் தற்கொலை
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 02:35.24 PM GMT ]
மட்டக்களப்பு, செங்கலடி தபாலக ஊழியர் ஒருவர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
செங்கலடி கணபதிப்பிள்ளை புதியநகர் பகுதியைச் சேர்ந்த கேதாரலிங்கம் பத்மநாதன் (45 வயது) என்பவரே தற்கொலை செய்துள்ளார்.
கடன் தொல்லை காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்த இவரிடம் கடன் கொடுத்த ஒருவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் தபாலகத்துக்குள் சென்று கடனை கேட்டு தாக்கியுள்ளார்.
இதனால் காயமடைந்த இவர் ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பிய நிலையில், விவசாய செய்கைக்குப் பயன்படுத்தும் கிருமிநாசினியை அருந்தி இன்று தற்கொலை செய்துள்ளார்.
சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் மரண விசாரணை மேற்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYmp1.html
தேர்தலை கோரிய ஐ.தே.கட்சி பயத்தில் சிவந்து சத்தமிட ஆரம்பித்துள்ளது!– அமைச்சர் ஜோன் செனவிரட்ன
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 02:39.25 PM GMT ]
தேசிய தேர்தல் ஒன்றுக்காக மக்களையும் கட்சியினரையும் திரட்ட போவதாக கூறிய ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஒன்றுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் பயத்தில் சிவந்து சத்தமிட ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்டத்தில் ஆளும் கட்சியின் தேர்தல் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கூறிக்கொள்ள முடியாத அளவில் ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆத்ம சக்தியை இழந்துள்ளது.
ரணில் போட்டியிடுவதை கட்சியில் உள்ள சிலர் எதிர்க்கின்றனர். கரு போட்டியிடுவதை சஜித் விரும்பவில்லை.
இந்த நெருக்கடி காரணமாக முன்னாள் ஜனாதிபதியின் உதவியை பெறும் நிலை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுமார் இரண்டு லட்சம் மேலதிக வாக்குகளை மாத்திரமே பெற்றார். அதனை 2010ம் ஆண்டு 18 லட்சமாக அதிகரித்து கொண்டார்.
இது உலக வரலாற்றில் எங்கு நடந்ததில்லை. இரண்டாம் முறை ஆட்சிக்கு வரும் போது உலகில் எந்த தலைவரும் இப்படியாக அதிகமான வாக்குகளை பெற்றதில்லை.
அதேபோல் மூன்றாவது முறையும் இதனை விட அதிகமான வாக்குகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெறுவது உறுதி எனவும் ஜோன் செனவிரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYmp2.html
அமைச்சர் சம்பிக்க ரணவக்க எதிர்க்கட்சி ஆசனத்தில் அமருவார்! தூஷண வார்த்தை பேசாத பௌத்த பிக்குவை வரவேற்போம்!- அசாத் சாலி
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 02:41.52 PM GMT ]
நாடாளுமன்ற மரபுகள் தெரியாத ஒருவராக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இருக்கிறார் என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி குற்றம் சுமத்தியுள்ளார்
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியும் என்று நேற்று உயர்நீதிமன்ற சட்டவிளக்கம் நாடாளுமன்றத்துக்கு கிடைத்தது.
எனினும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாää மஹிந்த ராஜபக்ச போட்டியிடமுடியும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இதனை கண்டு தாம் வேதனைப்படுவதாக அசாத் சாலி குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கு தேர்தல் ஒன்று வரும்போது 5 ஆண்டுகளுக்கு முடிந்துப்போன யுத்தம் பற்றி பேசுகிறார்.
மாவிலாறு பகுதியில் இடம்பெற்ற சம்பவம் பற்றி அவர் தற்போது பேசுகிறார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,  தமது அரசாங்கத்தின் ஊழல்களை பற்றி பேசியிருந்தால், அவற்றுக்காக ஆணைக்குழுக்களை அமைத்திருந்தால், அரசாங்கத்தில் உள்ள எத்தனை பேர் ஆணைக்குழுவின் முன் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று பார்த்திருக்க முடியும்.
இதன் காரணமாகவே சுயாதீன ஆணைக்குழுக்களை கலைத்து அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக 17வது அரசியலமைப்பை ரத்துச்செய்து 18வது அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர்; யார் என்ற பயம் ஜனாதிபதி தற்போது ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே கரு ஜயசூரியவுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏன்? ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ரணிலுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
ஜனாதிபதி தேர்தல் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் ஜனாதிபதி பொதுவேட்பாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள ஏன் ஆதங்கப்படுகிறார் என்று தெரியவில்லை.
இதேவேளை எதிர்வரும் 15ம் திகதியன்று ஜாதிக ஹெல உறுமயவை சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அமைச்சுக்கான நிதியொதுக்கீடு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இதன்போது அவரும் அத்துரலியே ரத்தன தேரரும் சம்பிக்க ரணவக்கவும் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமரவுள்ளனர்.
மேலும் பல ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சி வரிசையில் சென்று அமருவர் என்று அசாத் சாலி குறிப்பிட்டார்.
பொதுபலசேனாவின் ஞானசார தேரர், 19வது அரசியலமைப்பை வரைந்துள்ள ரத்தன தேரரை பைத்தியம் என்று கூறுகிறார்.
ரத்தன தேரர்ää அசாத் சாலியுடன் அமரப்போகிறார் என்று ஞானசார தேரர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் ஞானசார தேரரும் மன்னிப்பு கேட்டு வந்தால் அவருடன் இணைந்து நல்லதற்காக செயற்பட தயார்.
எனினும் தமது தூசணம் பேசாத பௌத்த பிக்குக்களே அவசியம் என்று அசாத் சாலி குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYmp3.html

Geen opmerkingen:

Een reactie posten