[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 05:06.51 PM GMT ]
அதேநேரம் ரணில் விக்கிரமசிங்க தமது பிரச்சார முகாமையாளராக தமது இளைய சகோதரர் விராஜ் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளார்.
எனினும் பொதுவேட்பாளர் நிலைக்கு ரணில் விக்கிரமசிங்கவா? அல்லது கரு ஜெயசூரியவா? என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றபோதும் விராஜ் விக்கிரமசிங்க இந்த நிலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
விராஜ் விக்கிரமசிங்க, டிஎன்எல் தொலைக்காட்சி சேவையின் நிறைவேற்று அதிகாரியாவார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkwy.html
பொதுவேட்பாளர் புரிந்துணர்வு உடன்படிக்கை பிற்போடப்பட்டுள்ளது
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 05:11.51 PM GMT ]
பொதுவேட்பாளர் நிலைக்கு வித்திட்ட பௌத்த பிக்குவான மாதுளுவேவ சோபித தேரர் தொடர்ந்தும் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதை அடுத்தே இந்த உடன்பாடு பிற்போடப்பட்டுள்ளது.
இந்த உடன்பாடு, மாதுளுவேவ சோபித, ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உட்பட்ட பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளனர்.
தொடர்புடைய செய்தி- எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை கையெழுத்திடப்படும்: திஸ்ஸ அத்தநாயக்க
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkwz.html
Geen opmerkingen:
Een reactie posten