[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 03:24.36 PM GMT ]
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்புத்துறை தலைவர்கள் மாநாடு இலங்கை தலைநகர் கொழும்பில், வரும் 29ம் தேதி தொடங்க உள்ளது.
சார்க் மற்றும் ஆசிய கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 18 நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில், இந்தியாவின் சார்பில் இராணுவத் தளபதி தல்பீர் சிங் சுகாக் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
இலங்கை மற்றும் மாநாட்டில் பங்கேற்கும் பிற நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்களுடனும் அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதை இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, மலேசியா, தாய்லாந்து மற்றும் ரூனே ஆகிய நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்கும்
இலங்கை கொழும்பில் எதிர்வரும் 27ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெறவுள்ள சார்க், 10 ஆசியன் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்பு தளபதிகள் பங்கேற்கும் மாநாட்டில் இந்தியாவும் பங்கேற்கிறது.
கொழும்பு மற்றும் பத்தரமுல்ல ஆகிய இடங்களில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா உட்பட 18 நாடுகளின் பாதுகாப்பு தளபதிகள் பங்கேற்கவுள்ளனர்.
அத்துடன் ரஸ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அலுவலர்களும் பார்வையாளர்களாக பங்கேற்கவுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkv1.html
வட மாகாண விவசாய அமைச்சால் கிளிநொச்சியில் மரநடுகை மாத மரங்கள் விநியோகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 03:51.58 PM GMT ]
இதன் இன்னொரு கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஆதரவுடன் வடமாகாண விவசாய அமைச்சு இன்று மரங்களை மக்களுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இன்று கிளிநொச்சி ஸ்கந்தபுரம், விநாயகர் குடியிருப்பு, அக்கராயன் கிழக்கு கரித்தாஸ் குடியிருப்பு, கோணாவில் கிழக்கு ஆகிய பகுதிகளில் மரநடுகை மாதத்திற்கான மரங்களை வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தலைமையில், பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்தின் உபதலைவருமான பொன்.காந்தன், கரைச்சி பிரதேசபை உறுப்பினர் சுப்பையா, அக்கராயன் பிரதேச கட்சியின் அமைப்பாளர் கரன், அக்கராயன் பிரதேச கட்சிக் கிளையின் தலைவர் சிறீ ஆகியோர் வழங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வுகளில் விநாயகர் குடியிருப்பு கரித்தாஸ் குடியிருப்பு கோணாவில் கிழக்கு கிராமங்களின் பொது அமைப்புக்களின் நிர்வாகிகள் இளைஞர், யுவதிகள், மாணவர்கள் மாதர் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் பங்கு பற்றி மரங்களை பெற்றுச் சென்றனர்.
மரநடுகை மாதத்தில் வீட்டுக்கு பயன்தரும் தேசி, தோடை, பலா, கொய்யா, மாதுளை உள்ளிட்ட பயன்தரு பழமரங்கள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkv2.html
மஹிந்த 3வது தடவை போட்டியிடுவதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்போம்!- ஜே.வி.பி.
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 04:07.58 PM GMT ]
நாளை மறுதினம் 18ம் திகதி தொடக்கம் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச போட்டியிடுவதற்கு எதிரான கண்டனப் போராட்டங்களை முன்னெடுப்போம். என ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துன் நெத்தி யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற மேற்படி பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகை யில்,
இலங்கையை பொறுத்தவரையில் சட்டம் ஒழுங்கு, அரசியலமைப்பு, ஜனநாயகம் போன் றன முற்றாக குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டன. இங்கே அரசாங்கம் கூறுபவற்றையும், n சய்பவற்றையும் மக்கள் ஒத்துக் கொள்ளவேண்டும்.
அதுவே ஜனநாயகம் மாறாக நியாயத்தை பேசினால் அது ஜனநாயக விரோதம். இதுவே பிரத ம நீதியரசர் பதவி விலக்கப்பட்டபோது பாராளுமன்றம் புனிதமான இடம் மற்றய இடங்கள் பு னிதமற்றவை என கூறினார்கள்.
இப்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாமா? என உச் ச நீதிமன்றை கேட்டபோது,
நீதிமன்றம் புனிதமான இடமாகவும், நாடாளுமன்றம் புனிதமற்ற இடமாகவும் மாறிவிட்டது. இதுவே இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான நிலைப்பாடாகும்.
ஒட்டுமொத்தமாக கூறினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு உரிமையில்லை.
எனவே அதற்கு எதிராக நாங்கள் மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்துவோம்.
முதற்கட்டமாக கொழும்பிலும் பின்னர் நாடு முழுவதும் எங்கள் போராட்டங்கள் வெடிக்கும்.
இதேவேளை நாம் மக்களுக்கு கூறுவது வடக்கில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மக்களுக்கு எல்லாம் கிடைத்து விட்டதாக அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கின்றது. ஆனால் வடக்கில் நடப்பது மாறாக இருக்கின்றது.
வடக்கில் 80 வீதமான மக்கள் இப்போதும் கடனாளிகளாக இருக்கின்றார்கள். 50 வீதமான மக்களுக்கு வீடுகள் இல்லை, 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கின்றார்கள். 28 ஆயிரத்திற்கும் அதிகமான அநாதை சிறார்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்வில் என்ன மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளது?
இவற்றை விட மீள்குடியேற்றம், காணி அபகரிப்பு, அரசியல் கைதிகள், காணாமல் போனவர்கள் என பல பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில் அந்த விடயங்களில் மக்களுடைய மனங்கள் சென்றுவிடக் கூடாது. என்பதற்காக நன்கு திட்டமிட்டே வடக்கில் வீதி திறப்பு விழாவிற்கும், கட்டடங்கள் திறப்பு விழாக்களுக்கும் களியாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
எனவே இவை ஒட்டுமொத்தத்தில் எங்கே கொண்டுசெல்லப் போகின்றது. என்றால் ஒரு எதேச்சாதிகார ஆட்சிக்கே கொண்டுசெல்லப் போகின்றது. என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkv3.html
தாறுமாறாக ஓடி சிறுமிகளை மோதிய தண்ணீர் வண்டி: 2 பேர் பலி, 6 பேர் படுகாயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 04:34.41 PM GMT ]
பன்னிரண்டு தொடக்கம் இருபது வயது வரையான மேலும் ஆறு சிறுமிகள் சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.00 மணியளவில் அநுராதபுரம் புதிய நகரில் நடைபெற்றுள்ளது.
குடிபோதையில் இருந்த இராணுவச் சிப்பாய் வண்டியை அதிக வேகத்துடன் செலுத்தி வந்திருந்ததுடன், ஒரு கட்டத்தில் வண்டி பாதையை விட்டு அருகில் இருந்த அநுராதபுரம் புதிய பஸ் நிலையத்தினுள் புகுந்துள்ளது.
இதன் போது கூட்டாக நின்று கொண்டிருந்த குறித்த சிறுமிகள் வண்டிக்குள் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளனர்.
உடனடியாக சிறுமிகள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் இரண்டு பேர் வழியிலேயே உயிரிழந்துள்ளனர்.
ஏனைய ஆறு சிறுமிகளும் உயிருக்குப் போராடும் நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய அனுராதபுரம் திசாவெவ இராணுவ முகாமின் கோப்ரல் தர சிப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkv5.html
எதேச்சதிகாரத்தை நிலைநாட்டவே 3வது தடவை தேர்தலில் போட்டியிட முடிவு: ஜே.வி.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 04:46.04 PM GMT ]
இலங்கை அரசாங்கம் தன்னுடைய எதேச்சாதிகாரப் போக்கினை நிலைப்படுத்துவதற்காக அரசியலமைப்பினையும், சட்டத்தினையும் மீறி மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்னும் முடிவினை எடுத்திருக்கின்றது.
இதனை ஒருபோதும் நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துன் நெத்தி தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் 18ம் திகதி தொடக்கம் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு எதிரான கண்டனப் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் சுனில் ஹெந்துன் நெத்தி குறிப்பிட்டார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையை பொறுத்தவரையில் சட்டம் ஒழுங்கு, அரசியலமைப்பு, ஜனநாயகம் போன்றன முற்றாக குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டன. இங்கே அரசாங்கம் கூறுபவற்றையும், செய்வதையும் மக்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். அதுவே ஜனநாயகம்.
மாறாக நியாயத்தை பேசினால் அது ஜனநாயக விரோதம். இதுவே பிரதம நீதியரசர் பதவி விலக்கப்பட்டபோது பாராளுமன்றம் புனிதமான இடம். மற்றய இடங்கள் புனிதமற்றவை என கூறினார்கள்.
இப்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாமா? என உச்ச நீதிமன்றை கேட்டபோது, நீதிமன்றம் புனிதமான இடமாகவும், நாடாளுமன்றம் புனிதமற்ற இடமாகவும் மாறிவிட்டது.
இதுவே இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான நிலைப்பாடாகும். ஓட்டுமொத்தமாக கூறினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு உரிமையில்லை. எனவே அதற்கு எதிராக நாங்கள் மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்துவோம்.
முதற்றட்டமாக கொழும்பிலும் பின்னர் நாடு முழுவதும் எங்கள் போராட்டங்கள் வெடிக்கும். இதேவேளை நாம் மக்களுக்கு கூறுவது வடக்கில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மக்களுக்கு எல்லாம் கிடைத்துவிட்டதாக அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கின்றது. ஆனால் வடக்கில் நடப்பது மாறாக இருக்கின்றது.
வடக்கில் 80வீதமான மக்கள் இப்போதும் கடனாளிகளாக இருக்கின்றார்கள். 50வீதமான மக்களுக்கு வீடுகள் இல்லை, 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கின்றார்கள்.
28 ஆயிரத்திற்கும் அதிகமான அநாதை சிறார்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்வில் என்ன மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளது?
இவற்றை விட மீள்குடியேற்றம், காணி அபகரிப்பு, அரசியல் கைதிகள், காணாமல்போனவர்கள் என பல பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில் அந்த விடயங்களில் மக்களுடைய மனங்கள் சென்றுவிடக் கூடாது. என்பதற்காக நன்கு திட்டமிட்டே வடக்கில் வீதி திறப்பு விழாவிற்கும், கட்டடங்கள் திறப்பு விழாக்களுக்கும் களியாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
எனவே இவை ஒட்டுமொத்தத்தில் எங்கே கொண்டுசெல்லப் போகின்றது. என்றால் ஒரு எதேச்சாதிகார ஆட்சிக்கே கொண்டுசெல்லப் போகின்றது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkv6.html
ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்- பொலிஸ் உயர் பதவிகளில் மாற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 04:58.38 PM GMT ]
குறித்த கண்காணிப்பாளர்கள் பல்வேறு நாடுகளின் தேர்தல்களின்போது கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு நன்கு அனுபவம் பெற்றவர்கள் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு வங்காளதேசம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், நேபாளம், ஆப்கானிஸ்தான், ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வர சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இரண்டு வார காலம் இலங்கையில் தங்கியிருந்து தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக வாக்குச் சாவடி மட்டத்தில் சுமார் 13 ஆயிரம் உள்நாட்டுக் கண்காணிப்பாளர்களும் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொலிஸ் உயர் பதவிகளில் மாற்றம்
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொலிஸ் உயர் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய பதவிப் பிரமாணம் செய்து கொண்டது முதல் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர்கள் பலர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு தொடர்பான தீர்மானங்கள் இதுவரை காலமும் பொலிஸ் மா அதிபரினால் எடுக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளரினால் இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkv7.html
Geen opmerkingen:
Een reactie posten