தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 november 2014

செங்கலடியில் உள்ள கடையொன்றில் ஒரே மாதத்தில் இரு தடவைகள் கொள்ளை!

தெற்காசியாவில் அதிகம் சம்பளம் வழங்கும் தொழில்துறை! ரணிலின் பொருளாதார திட்டம்
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 08:41.38 AM GMT ]
தெற்காசியாவில் அதிகம் சம்பளத்தை வழங்கும் பொருளாதாரம் நாட்டில் உருவாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற பல்கலைக்கழக இளைஞர் முன்னணியின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தெற்காசியாவில் அதிகளவில் சம்பளத்தை வழங்கும் போட்டியுடன் கூடிய தொழில்துறை மற்றும் சேவை இலங்கையில் ஏற்படுத்த எண்ணியுள்ளேன்.
அதிகளவில் சம்பளத்துடன் கூடிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தனது எனவும் இலங்கையின் உற்பத்திகள் உலக சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படும் எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கிராமிய பொருளாரத்திற்கும் உயிரூட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfq0.html
செங்கலடியில் உள்ள கடையொன்றில் ஒரே மாதத்தில் இரு தடவைகள் கொள்ளை!
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 08:35.23 AM GMT ]
மட்டக்களப்பு செங்கலடி நகரில் பொலிசாருக்கு சவால்விடும் வகையில் தொலைத்தொடர்பு நிலையமொன்றை ஒரு மாதத்திற்குள் இரு முறை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
செங்கலடி நகரின் பிரதான வீதியில் அமைந்துள்ள சிவா தொலைத்தொடர்பு நிலையத்தையே கடந்த ஒரு மாதகாலத்திற்குள் இரண்டுமுறை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
குறித்த கடையில் கடந்த மாதம் சுமார் இரண்டு இலட்சம் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் மற்றும் மீள்நிரப்பு அட்டைகள், கையடக்க தொலைபேசி பாகங்கள் போன்றவற்றை இரவு நேரத்தில் கடையின் மேற்கூரையினை உடைத்து கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர்.
இந்தநிலையில் நேற்றிரவு மீண்டும் குறித்த கடையின் மேற்கூரையினை உடைத்து உள்ளிருந்த கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் சென்றுள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொள்ளையிடப்பட்ட கையடக்க தொலைபேசிகள் சிலவற்றை ஏறாவூர் பொலிசார் கைப்பற்றியிருந்த போதும், குறித்த கையடக்க தொலைபேசிகளை கொள்ளையடித்தவர்களை ஏறாவூர் பொலிசாரினால் கைது செய்ய முடியாமல் போயுள்ளது.
இந்த நிலையில், ஏறாவூர் பொலிசாருக்கு சவால்விடும் வகையில் குறித்த தொலைத்தொடர்பு நிலையத்தை மீண்டும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளமையானது செங்கலடி வர்த்தகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழிநுட்பம் வளர்ச்சி பெற்றுள்ள இக்காலகட்டத்தில் கையடக்க தொலைபேசிகளின் இமி இலக்கம், மீள்நிரப்பு அட்டைகளின் இலக்கங்கள் பொலிசாருக்கு கிடைத்தும் குறித்த கொள்ளையர்களை கைது செய்ய முடியாமல் போனமை பொலிசார் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளதாக  வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
செங்கலடி பகுதியில் அண்மைக்காலமாக வழிப்பறிக் கொள்ளைகள், கடை உடைப்புக்கள், திருடர்களின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfqz.html

Geen opmerkingen:

Een reactie posten