தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 november 2014

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோர் இனி அடையாள அட்டை கொண்டு செல்ல முடியாது?

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு கருத்து தெரிவிக்க மாட்டோம்: சட்டத்தரணிகள் சங்கம்
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 08:01.55 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றுக்கு எழுத்துமூல ஆவணம் சமர்பிக்கப்பட மாட்டாதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதால் ஏதேனும் வேறு தரப்பினருக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி அஜித் பத்திரண குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளமை தொடர்பில் இன்று மாலை 3 மணிக்கு முன்னர் பதிலளிக்குமாறு உயர்நீதிமன்ற பதிவாளர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் கோரியுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமையால் கருத்து தெரிவிப்பதை தமது சங்கம் தவிர்த்துள்ளதாக அஜித் பத்திரண மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfp6.html
சிகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுத முயன்ற மட்டு.மாணவி கைது
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 08:02.49 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவியொருவர் சிகிரிய ஓவியத்தில் தனது பெயரை எழுத முயன்றபோது, சிகிரிய தொல்பொருள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயர்தரம் கற்கும் மாணவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மாணவி, சிகிரியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதால் விசாரணை முடியும்வரை அவருடன் சுற்றுலா சென்ற சக மாணவர்களும் சிகிரியா பகுதியில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவிக்கு பொலிஸ் பிணை பெற்றுக் கொடுக்க அரசியல்வாதிகள் முன்வந்தபோதும் அது பலனளிக்கவில்லை என தெரியவருகிறது.
மாணவி இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் சுற்றுலா சென்ற மாணவர்களும் ஆசிரியர்களும் பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சிகிரியாவில் ஒருநாள் தங்க நேரிட்டதால் அதற்கான செலவு மற்றும் வாகன செலவு போன்றவை திட்டமிட்ட தொகையைவிட அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfp7.html
முஸ்லிம் நிர்வாக மாவட்டத்தை ஏற்படுத்த அரசாங்கம் உறுதி வழங்கியது: மு.காங்கிரஸ்
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 08:10.09 AM GMT ]
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வரும் தேர்தல் தொகுதிகளை இணைத்து தனியான நிர்வாக மாவட்டம் ஒன்று ஏற்படுத்தப்படும் என அரசாங்கம் தமக்கு உறுதி வழங்கியிருந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்கும் போது தமது கட்சிக்கு இந்த உறுதிமொழியை அரசாங்கம் வழங்கியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் எமக்கு வழங்கிய உறுதிமொழியை நாங்கள் மீண்டும் நினைவூட்டினோம். முஸ்லிம் மக்கள் வாழும் தேர்தல் தொகுதிகளை தனியாக இணைத்து தனியான நிர்வாக மாவட்டம் ஒன்றை ஏற்படுத்தினால் மக்களுக்கு நிர்வாக சேவைகளை வழங்குவது இலகுவாக இருக்கும்.
இதனால், மக்களுக்காக சிந்தித்து அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிப்படி அதனை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது எனவும் ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfqy.html

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோர் இனி அடையாள அட்டை கொண்டு செல்ல முடியாது?
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 07:37.17 AM GMT ]
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு நீண்ட கால பயணங்களை மேற்கொள்பவர்கள் தேசிய அடையாள அட்டையை கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டையில் விபரங்கள் சிங்களம் மற்றும் தமிழில் மாத்திரமே காணப்படுவதால் அதனை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளுக்கு நீண்ட காலப் பயணங்களை மேற்கொள்பவர்கள் அடையாள அட்டைகளை கொண்டு செல்வது தொடர்பாக கடுமையான நடைமுறைகளை பின்பற்றவுள்ளோம்.
வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களுக்கு இது குறித்து அறிவுறுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfp5.html

Geen opmerkingen:

Een reactie posten