தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 november 2014

5 மீனவர்களுக்‌கு தூக்குத் தண்டனை: நவ.14ம் திகதிக்குள் மேல்முறையீடு!

தெற்காசியாவில் அதிகம் சம்பளம் வழங்கும் தொழில்துறை! ரணிலின் பொருளாதார திட்டம்
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 08:41.38 AM GMT ]
தெற்காசியாவில் அதிகம் சம்பளத்தை வழங்கும் பொருளாதாரம் நாட்டில் உருவாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற பல்கலைக்கழக இளைஞர் முன்னணியின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தெற்காசியாவில் அதிகளவில் சம்பளத்தை வழங்கும் போட்டியுடன் கூடிய தொழில்துறை மற்றும் சேவை இலங்கையில் ஏற்படுத்த எண்ணியுள்ளேன்.
அதிகளவில் சம்பளத்துடன் கூடிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தனது எனவும் இலங்கையின் உற்பத்திகள் உலக சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படும் எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கிராமிய பொருளாரத்திற்கும் உயிரூட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfq0.html
5 மீனவர்களுக்‌கு தூக்குத் தண்டனை: நவ.14ம் திகதிக்குள் மேல்முறையீடு!
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 09:51.49 AM GMT ]
5 தமிழக மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வழக்கில், வரும் 14ம் திகதிக்குள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 30ஆம் திகதி இவ்வழக்கில் இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், தீர்ப்பு நகல் தற்போது அங்குள்ள இந்திய தூதரகத்திற்குக் கிடைத்துள்ளது.
தீர்ப்பு ஆவணம் சிங்கள மொழியில் இருப்பதால் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணி நடைபெற்று வருகின்றன.
அப்பணிகள் ஓரிரு நாளில் நிறைவடைந்தவுடன், வரும் 14ம் திகதிக்குள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் எனத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை உள்ள ஆவணங்களை தமிழக மீன்வளத் துறையிடம் இருந்து மத்திய அரசு கேட்டுப் பெற்றுள்ளது.
இந்த ஆவணங்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தொலைநகல் மூலம் அனுப்பபட்டுள்ளதாக தமிழக தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfq1.html

Geen opmerkingen:

Een reactie posten