தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 november 2014

மஹிந்தவை பதவி கவிழ்க்குமாறு இந்திய பிரதமரிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது !

ஆட்சியில் இருந்தபோது, இலங்கையோடு சேர்ந்து கும்மாளம் அடித்த காங்கிரஸ் தற்போது மகிந்தரை பதவியில் இருந்து கவிழ்க்கவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. மிகவும் கேலிக்குரிய விடையமாகவும் அரசியல் கோமாளித்தனமாகவும் இது பார்கப்படுகிறது. இக்கோரிக்கையை தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களே விடுத்துள்ளார்கள். தமிழகத்தில் செல்வாக்கை இழந்து பாதாளத்தில் விழுந்துள்ள காங்கிரஸ் கட்சியை மீட்க்கவே தமிழக காங்கிரஸ் தலைவர்கள், ஈழப் பிரச்சனையை தற்போது தமது கைகளில் எடுத்துள்ளார்கள்.
ராஜபக்ஸவை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கி அதற்கு பொருத்தமான மற்றுமொருவரை பதவியில் அமர்த்துமாறு அவர்கள் கோரியுள்ளார்கள். தமிழ் மக்களின் நலன்களை உறுதி செய்யக் கூடிய ஒருவரையே பதவியில் அமர்த்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவை எவ்வாறு பதவி விலக்க வேண்டும் என்பது நரேந்திர மோடிக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மீனவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் மஹிந்த செயற்பட்டுள்ளதாகவும், நாட்டில் ஜனநாயகம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏதோ உள்நாட்டில் உள்ள அதிகாரி ஒருவரை மாற்ற்ச் சொல்வது போல சிறுபிள்ளைத் தனமாக இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளது, மிகவும் வேடிக்கையான விடையம்.

Geen opmerkingen:

Een reactie posten