[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 06:31.44 AM GMT ]
இந்த பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, மைத்திரிபால சிறிசேன, டளஸ் அழகபெரும ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இடதுசாரி கட்சிகளின் சார்பில் லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் திஸ்ஸ விதாரண, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் டியூ. குணசேகர, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இந்த இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் ஏற்கனவே இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். மீண்டும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfp1.html
திருப்பதியானை தரிசிக்கச் சென்ற பிரதமருக்கு கறுப்புக் கொடி
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 06:44.38 AM GMT ]
தமிழகத்தை சேர்ந்த, ஐந்து மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை பிரதமர் திருமலைக்கு சென்றுள்ளார்.
இந் நிலையில் திருத்தணியில் இருந்து மல்லை சத்யா தலைமையில் மதிமுகவினர் திருப்பதிக்கு பயணம் மேற்கொண்டனர்.
அப்போது மல்லை சத்யா தலைமையில் ஊர்வலமாக புறப்பட்ட 100க்கும் மேற்பட்ட மதிமுகவினரை பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இலங்கை பிரதமர் டி.எம்.ஜயரத்ன, இன்று திருமலைக்கு செல்கிறார். இலங்கை பிரதமர் வந்து, திரும்பும் வரை தேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வெடிகுண்டு அகற்றும் படையினரும், மோப்ப நாய் பிரிவினரும், திருமலை மலை பாதையில் நேற்று சோதனையில் ஈடுபட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfp2.html
Geen opmerkingen:
Een reactie posten