[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 07:07.30 AM GMT ]
நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள உள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஜனநாயகக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய, ஜனநாயக மக்கள் முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதில் கலந்து கொள்ள உள்ளன.
மாதுளுவாவே சோபித தேரர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களில் ஒருவர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தகவல்கள் தெரிவி்க்கின்றன.
இது தொடர்பாக ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதுடன் இன்று முக்கியமான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
இறுதித் தீர்மானம் தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நாளை அல்லது நாளை மறுதினம் நடத்தப்படவிருப்பதுடன் அதில் யார் பொது வேட்பாளர் என அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfp3.html
இந்திய அமைதிப் படை இலங்கையில் பாலியல் வல்லுறவில் ஈடுபடவில்லையாம்?
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 07:24.43 AM GMT ]
இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்,
இலங்கை அரசாங்கம் இது குறித்து எங்களிடம் கேள்விகள் எதனையும் எழுப்பவில்லை. அப்படியான கேள்வி வந்தாலும் எங்களால் இலங்கை அரசாங்கத்துக்கு மாத்திரமே பதிலளிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நாடாளுமன்றத்தில் இந்திய அமைதிப் படையினர் இலங்கையில் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டனர் என்று குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அமைதிப் படையினர் தமிழ்ப் பெண்களை வல்லுறவுக்குட்படுத்தினர்: கருணா
நாடாளுமன்றில் இந்திய அமைதிப் படையினர் மீது பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,
இந்திய அமைதிப் படையினர், இலங்கையில் தங்கியிருந்த 1987- 1990ம் ஆண்டு காலப்பகுதியில் பல தமிழ்ப் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்தனர். அத்துடன் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர் என்று குற்றம் சுமத்தினார்.
கிழக்கில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்களுக்கு ஆதாரங்கள் உள்ளதாக முரளிதரன் குறிப்பிட்டார்.
இலங்கை கடற்படையை பொறுத்தவரையில் அவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து, இலங்கையின் வடக்கு மீனவர்களுக்கு உதவுவதாக கருணா குறிப்பிட்டார்.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சி தம்மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் தாம் அந்தக்கட்சி தொடர்பில் பல தகவல்களை வெளியிட தயங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆர் பிரேமதாஸ ஜனாதிபதி பதவியில் இருந்தபோது 350 பேரே விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தனர்.
பிரேமதாஸ, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதன் பின்னர் அந்த இயக்கத்தின் உறுப்பினர் தொகை அதிகரித்தது என்றும் கருணா தெரிவித்தார்.
பிரேமதாஸவினால் விடுதலைப் புலிகளுக்கு சுமார் 5000 ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்றும் கருணா கூறினார்.
ஐக்கிய தேசியக்கட்சி தொடர்ந்தும் தம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் மேலும் பல இரகசியங்களை வெளியிடப் போவதாக கருணா எச்சரித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfp4.html
Geen opmerkingen:
Een reactie posten