தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 november 2014

பிரிவினைவாதத்திற்கு மீண்டும் இடமளிக்கப்பட மாட்டாது: ரட்னசிறி விக்ரமநாயக்க

கொஸ்லாந்த சம்பவம் தொடர்பில் 19 பேரிடம் வாக்குமூலம்
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 05:29.10 AM GMT ]
கொஸ்லாந்த, மீரியபெத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவு தொடர்பில் பிரதேச செயலாளர், கிராம சேவகர் உட்பட 19 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு இச்சம்பவம் தொடர்பான அறிக்கையொன்று பொலிஸாரால் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடு சென்றுள்ள பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன், நாடு திரும்பியதும் அவரிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அவரூடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 28 பேரை காணவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சடலங்களை அடையாளம் காணும் போது அனுமான அடிப்படையில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படாது. உரிய முறையில் அடையாளம் காட்டினால் மட்டுமே சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இன்றேல் அந்த சடலத்தின் பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்படும். அவை நவீன முறையிலான மரபணு(டி.என்.ஏ) பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நட்டஈடு மற்றும் மரண சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
பதுளை, கொஸ்லாந்த, மீரியாபெத்தை பிரதேசத்தில் இயற்கை அனர்த்த அபாயம் இருப்பது தொடர்பில் அங்கிருந்த மக்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி, தன்னிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மீரியபெத்தையிலிருந்து உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த உத்தரவுக்கிணங்க, பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfo6.html
ஐ.தே. கட்சிக்கு எவரும் வந்து போகலாம்: ரணில்- அளவு கடந்த அதிகாரம் மனிதனை அழிவுப்பாதையில் இட்டுச்செல்லும்: ஹரின்
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 05:47.11 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐக்கிய தேசிய  கட்சிக்கு எவரும் வந்து போகலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியில் இருந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு வந்து விரும்பிய காலம் வரை இருந்து விட்டு மீண்டும் சுதந்திரக் கட்சிக்கு செல்ல சுதந்திரம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளே நாட்டில் இருந்தன.ராஜபக்ஷ அரசாங்கத்தை துரத்த வேண்டும் என்பது எமது தேவை.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிக்கும் தேவை எமக்கில்லை.நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அளவு கடந்த அதிகாரம் மனிதனை அழிவுப்பாதையில் இட்டுச்செல்லும்: ஹரின் பெர்னாண்டோ
அளவு கடந்த அதிகாரம் மனிதனை அழிவுப்பாதையில் இட்டுச்செல்லும் என ஊவா மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நாமே அறிமுகம் செய்தோம்.
நாம் இந்த முறைமையின் குறைபாடுகளை அடையாளம் கண்டு கொண்டோம். அதன் காரணமாகவே இதனை ரத்து செய்ய வேண்டுமென கோரி வருகின்றோம்.
ஒரு மனிதன் மட்டுமன்றி ஒரு குடும்பமே அதிகார மோகத்தில் பிணைந்துள்ளது.
ஊவா மாகாணசபையில் நாம் அரசாங்கத்தை விரட்டும் முதலாவது நடவடிக்கையை எடுத்தோம்.
ராஜபக்ஷகள்களின் மகன் ஒருவருடன் மோதுவதனை எனது தந்தை கூட விரும்பவில்லை.
சிரமப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த இவன் மாகாணசபையில் கேட்கின்றான் அடுத்த தடவை நகரசபைக்காகவும் போட்டியிடுவான் என எனது தந்தை என்னுடன் கோபித்துக்கொண்டார்.
நான் தனியாகவே போட்டியிட்டு 45.8 வீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டேன்,6000 வாக்குகளில் நாம் தோல்வியடைந்தோம்.
பணம், ஆடைகள்,மின் அழுத்தி,றைஸ் குக்கர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் லஞ்சமாக வழங்கியே அரசாங்கம் தேர்தலில் வெற்றியீட்டியது.
இப்போது மக்கள் இதயத்தையோ அல்லது மூளையைப் பயன்படுத்தியோ வாக்களிப்பதில்லை, ஆசை காரணமாகவே வாக்களிக்கின்றனர்.
ரஞ்சன் ராமநாயக்க போன்றவர்கள் நடித்து விருதுகள் பெற்றுக்கொண்டாலும் மஹிந்த ராஜபக்சவுடன் அவர்களினால் நடிக்க முடியாது.
இன்று இந்த இடத்திற்கு மஹிந்த ராஜபக்ச வந்திருந்தால் சும்மா வந்திருக்க மாட்டார், அனைவரையும் தொட்டுத் தடவி, சிரித்து, ஆச்சிமாரை உச்சி முகர்ந்து, சிறுவர்களை தூக்கி கொஞ்சி பல்வேறு வழிகளில் மக்களை கவர்ந்திருப்பார். இதனை பார்க்கும் மக்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.
எனினும் புத்தியுள்ள ஒர் தலைவரையே நாம் கொண்டு வர வேண்டும், சீனாவிடம் தொழில்நுட்பம் பெற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் சீனாவிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களுக்கு இறுதியில் அந்த அபிவிருத்தித் திட்டங்களை சீனாவிடமே தாரை வார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடும் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் அத்துருகிரிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfpz.html

பிரிவினைவாதத்திற்கு மீண்டும் இடமளிக்கப்பட மாட்டாது: ரட்னசிறி விக்ரமநாயக்க
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 05:41.23 AM GMT ]
நாட்டில் மீண்டும் பிரிவினைவாதம் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என முன்னாள் பிரதமரும் சிரேஸ்ட அமைச்சருமான ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். 
விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியினால் தேர்தலில் போட்டியிட முடியுமா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். எனினும் மக்களின் தீர்ப்பு இந்த அனைவரினதும் நடவடிக்கைகளுக்கும் மேலானது.
சர்வஜன வாக்கெடுப்பு நியாயமானதே அதனை எவ்வாறு சட்டவிரோதமானது என குறிப்பிட முடியும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த எண்ணங்களுடன் செயற்பட்டால் எந்தவொரு சவாலையும் வெற்றிகொள்ள முடியும்.
இந்த நாட்டு மக்கள் வலுவானவர்கள்.
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கப்பட முடியாது. அதற்கான வாய்ப்புக்களும் கிடையாது.
பயங்கரவாதத்திற்கு உயிரூட்ட சில தரப்பினர் பல்வேறு வழிகளில் முயற்சிக்கின்றனர்.
முப்படையினரின் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும் அதன் மூலம் நாட்டை பாதுகாக்க முடியும்.
ஹொரணை மொரகஹாஹேன என்னும் இடத்தில் அண்மையில் நடைபெற்ற அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண வைபவத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfpy.html

Geen opmerkingen:

Een reactie posten