[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 04:02.25 AM GMT ]
தனது உரையாடலின் போது தான் ஆளும் கட்சியில் இருந்து மக்களுக்கு என்ன செய்துள்ளேன் என்று பார்க்கும் போது தனக்கு வெட்கமாக உள்ளது என தெரிவித்தார்.
அது போன்று தனது பிள்ளைகள் கூட ஏன் இந்த அரசோடு இருக்கின்றீர்கள் என்று கேட்கும் அளவுக்கு எனது நடவடிக்கை இருந்ததாக தெரிவித்துள்ளார்.
தற்போது இவருக்கு வந்துள்ள இந்த அறிவு அன்று அடுக்கடுக்காக சிறுவர்கள், பெரியோர்கள், பெண்கள் மீது கொத்துக் கணக்கான குண்டுகளை போடும் போது எங்கு சென்றது?
தனது பிள்ளைகள் தற்போது தன்னை தப்பாக புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளமை மிகவும் வேடிக்கையாக உள்ளது.
அது ஒரு புறம் இருக்கட்டும். ஒருவேளை இவருடைய ஆட்சி வந்தால் இவரால் தமிழர்களுக்கு என்ன தீர்வினை கொடுக்க முடியும் என்பது ஒரு பாரிய பிரச்சனையாக உள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நடந்தது போன்று நடந்தால் திரும்பவும் குடும்ப ஆட்சி உருவாகும் என்பது உண்மை.
தனது ஊடக அறிக்கையில் மிகவும் தவறான விடயத்தை சிறிசேன முன் வைத்துள்ளார். 100 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்பது அவரின் முதலாவது பொய்!
குறைந்தது ஜனாதிபதி தேர்தலில் இவர் வெற்றி பெற்றாலும் 180 நாட்கள் அதாவது 6 மாத காலத்துக்கு மஹிந்த ஜனாதிபதியாக இருக்க முடியும் இது சட்டம்.
ஆட்சிக்கு வர முதல் பொய் சொல்லும் இவர் தமிழர்களுக்கு தீர்வு கொடுப்பாரா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
இன்றைய சுழலில் ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் சக்தி தமிழர்கள் என்பதை விட தமிழ் பேசும் மக்கள் என்று சொல்வது நல்லது. தமிழ் பேசும் மக்களான அனைத்து தமிழர்களும் ஒன்று சேர்ந்தால் வருங்கால தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாற முடியும்.
ஆனால் பதவிக்காக அடிமாடு போல் இருக்கும் சில அரசியல்வாதிகள் இருக்கும் வரைக்கும் இதை எதிர்பார்க்க முடியாது.
அதுபோன்று இன்று முஸ்லிம் மக்களும் பாவம் தங்களுடைய பள்ளிகள் உடைக்கப்பட்டும் தங்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டும் மக்கள் முக்கியம் இல்லை பதவியை இழக்க தயாராக இல்லை என்னும் அரசியல்வாதிகளை தேர்ந்து எடுத்துள்ளார்கள்.
ஒட்டு மொத்தத்தில் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கு ஒன்றும் போய் சேர்வதில்லை அரசியல் அசிங்கங்களின் இந்த நடவடிக்கைகளுக்கு தீர்வு வரும் என்பது ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது.
இன்று கட்சி மாறியவர்கள் நாளை மீண்டும் இணைய மாட்டார்கள் என்பது சொல்ல முடியுமா?
ஜனாதிபதி இன்று கூட நினைத்தால் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்கி மீண்டும் ஜனாபதியாக வர முடியும் ஆனால் அவர்களால் அதை செய்ய முடியாது ஏன் என்றால் அங்கு நடப்பதும் கூட்டு அரசாங்கம்.
அது போலவே தற்போது இவர்களாலும் ஒரு தீவினை தர முடியாது. ரணில் எடுக்கும் முடிவுக்கு அடுத்தவர் இடமளிக்க மாட்டார். அகவே யார் வந்தாலும் தமிழர் நிலை கேள்வி குறியாகவே இருக்கும்.
இன்று சிந்திக்கும் காலம் வந்துள்ளது தமிழர்களின் பிரதிநிதிகள் என அழைக்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களின் பிரதிநிதிகளும் ஒட்டு மொத்த தமிழ் பேசும் உறவுகளுக்கான தீர்வு என்ன என்பதை எழுத்து மூலம் வங்க வேண்டியவர்களாக உள்ளார்கள்.
வெறுமனே வாய் சொல்லுக்கு சோரம் போகாமல் தமிழர்கள் யார் என்பதை எடுத்து கட்டுவதற்கும் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் நல்ல ஒரு காலம் வந்துள்ளது.
சிந்தித்தால் வெற்றி யாருக்கு என்பதை சிறுபான்மையினர் முடிவு செய்ய முடியும்.
தமிழர்கள் எதிர்பார்க்கும் சர்வதேச விசாரணை ஒன்று நடத்த வேண்டுமானலும் பதவியில் இருக்கும் போது நடத்த வேண்டும் அதுதான் மடிந்த மக்களுக்கு செய்யும் காணிக்கையாக இருக்க வேண்டும்.
அகவே இது போன்ற விடயங்களையும் சிந்திக்க வேண்டியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர்கள் செய்தது போல் தமிழர்கள் செய்யக் கூடாது .
இறந்தவர்களை வைத்து இட்சை தீர்ப்பது போல் பதவி இழந்தவனை பழிவாங்குவது செத்த பிணத்துக்கு தண்டனை வாங்கி கொடுத்தவர்களாக மாறிவிடக் கூடும்.
தமிழன் என்றும் முகத்தில் குத்துபவனாக இருக்க வேண்டும். முதுகில் குத்தி அவர்கள் செய்தவை போன்று நாம் செய்யக் கூடாது .
எமது தமிழ் அரசியல்வாதிகளே நீங்கள் சேர்த்தது போதும் உங்களுக்கும் அதை அனுபவிக்கும் வயதுகளும் இல்லை. ஆகவே அன்றாடம் தனது நாளை எப்படி கடப்பது என்று அலையும் மக்களையும் கொஞ்சம் நினைத்து பாருங்கள் .
உங்களுடைய கையில் மக்கள் ஆணை தந்துள்ளார்கள் அவர்களுக்கான தீர்வினை ஐக்கிய இலங்கைக்குள் காண்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
இனியும் இந்தியா போன்ற நாடுகளை நம்புவதால் உங்களுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை அவர்கள் தங்களது அரசியலுக்காக எம்மை வைத்து அரசியல் செய்கின்றனர். நீங்கள் இனியும் ஏமாறாத சக்தியாக மாற வேண்டும் .
எமது மக்கள் நாளுக்கு நாள் பசி படினியல் வாடுகின்றார்கள். அவர்களை காப்பாத்த இந்திய அரசியல்வாதிகளால் முடிய வில்லை .
எப்படி எமது மக்களுக்கு தீர்வினை தருவார்கள் சிந்தியுங்கள் சிந்தித்து எமது இலக்கு எமது மக்களுக்கான தீர்வினை தரக் கூடிய ஒரு சிறந்த ஜனாதிபதிக்கு ஒட்டு மொத்தத் தமிழர்களும் இன பேதமின்றி செயற்பட வேண்டும் .
தமிழன் என்றும் எதையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறவேண்டும். மாறினால் எமக்கு நல்ல எதிர் காலம் மலரும் இல்லையேல் தமிழர்கள் இனியாவது மக்களுக்கு சேவை செய்பவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் .
எது நடந்தாலும் முடிவு சாதாரண பாமர தமிழ் மக்களின் கைகளில்.
எஸ்.கே
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgoz.html
ஊவா, கிழக்கு, மத்திய மாகாண சபைகளின் அதிகாரம் கைமாறுகிறது
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 04:22.40 AM GMT ]
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று நள்ளிரவு வரை கொழும்பில் நடைபெற்றுள்ளது.
தற்போதைய நிலையில் கிழக்கு மாகாண சபையில் ஆரியவதி கலப்பத்தி, விமலவீர திசாநாயக்க ஆகியோருடன் இன்னும் இரண்டு பேர் ஆளுங்கட்சியை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக நேற்றிரவு உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக கிழக்கு மாகாண சபையின் அதிகாரம் விரைவில் கைமாறி, புதியதொரு முதலமைச்சர் நியமிக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் குறித்த தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
இதேபோன்று மத்திய மாகாண சபையிலும் அநுராத ஹேரத் தலைமையிலான ஏழு மாகாண சபை உறுப்பினர்கள் கட்சி தாவத் தயாராக இருப்பதன் காரணமாக அங்கும் அதிகாரம் கைமாறவுள்ளது.
அதன் பின்னர் புதிய முதலமைச்சராக அநுராத ஹேரத் நியமிக்கப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு புத்தெழுச்சியை ஏற்படுத்தி ஊவா மாகாண சபையிலும் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் அதிகாரம் பறிபோகவுள்ளது.
அமைச்சர் சுமேதா ஜயசேனவின் மகன் சுமேத உள்ளிட்ட தரப்பினர் கட்சி தாவும் நிலையில் இருப்பதால் எதிர்வரும் இரண்டொரு நாட்களில் மாகாண சபையின் புதிய முதலமைச்சராக ஹரின் பெர்னாண்டோ பதவியேற்கும் வாய்ப்பு கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgo0.html
ஆளுங்கட்சி ஆட்டம் குளோஸ், எதிர்க்கட்சி இன்னிங்ஸ் ஆரம்பம்! விக்டர் ஐவன்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 04:37.33 AM GMT ]
எதிர்க்கட்சிகள் சிறந்த ஒரு போட்டியாளரைத் தெரிவு செய்திருப்பதாக அவர் கூறுகிறார்.
நேற்றிரவு பி.பி.சி. சந்தேசயவுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஜனாதிபதியைத் தோற்கடிப்பதற்காக களமிறங்கியிருப்பதாகச் சொல்லும் அவர், முழுப் போராட்டத்துக்குச் செல்வதற்கு முன்னரேயே அது முடிந்துவிட்டது.
“பாரியதொரு வீழ்ச்சி, உடைவு, தோல்வியின் முன்கூட்டிய எதிர்வுகூறல்“ என்றுதான் இதனை குறிப்பிட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்கான போராட்டம் 70 வீதமளவு முடிந்துவிட்டது. ஜனாதிபதி அனைத்து துரும்புகளையும் பயன்படுத்தி முடிந்து விட்டதாகவும், எதிர்க்கட்சி இப்போதுதான் ஆரம்பித்திருப்பதாகவும் விக்டர் ஐவன் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgo1.html
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட யோக்கட்டுகளில் பங்கசு
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 05:22.03 AM GMT ]
சுகாதார பணிமனைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று காலை பாடசாலைக்கு விரைந்த போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட யோகட்களில் பங்கசு தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டதாக புளியாவத்தை பிராந்திய பொது சுகாதார பரிசோதகர் தர்மலிங்கம் வரதராஜன் தெரிவிக்கின்றார்.
இதன் காரணமாக மாணவர்களுக்கு யோக்கட் வழங்கப்படுவது நேற்றய தினம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட யோக்கட்களில் பங்கசு தொற்றியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் புளியாவத்தை பிராந்திய பொது சுகாதார பரிசோதகர் கூறினார்.
யோக்கட்டுக்களை பாடசாலைக்கு விநியோகதத்ததில் தவறு ஏற்பட்டுள்ளதா அல்லது களஞ்சியப்படுத்தலில் சிக்கல் காணப்படுகின்தா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் புளியாவத்தை பிராந்திய பொது சுகாதார பரிசோதகர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மஸ்கெலியா நகரில் வர்த்தக நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 18 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgo3.html
பொதுபலசேனா- ஜாதிகஹெல உறுமயவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 05:41.27 AM GMT ]
ஹெல உறுமய கட்சி அரசாங்கத்திலிருந்து விலகியது முதல் இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்ற குறிப்பிட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பு ஹெல உறுமயவின் யோசனைகளை ஏற்று செயற்படத் தயார் எனின், தாம் அவ்வமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் என ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று, இன்னும் பல கட்சிகளுடனும் ஹெல உறுமய தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தாம் பல அமைப்புக்களுடன் இதுவரையில் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாகவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgo4.html
ஜனாதிபதி தேர்தல் வன்முறைகள் ஆரம்பம்! குருநாகலையில் பதற்றம்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 05:58.17 AM GMT ]
இதன் முதலாவது வன்முறை களுத்துறை மக்கோன சந்தியில் பதிவாகியுள்ளது. இங்கு இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பேருவளை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் உறுப்பினர் படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் சமில ரணசிங்க என்பவரே காயமடைந்தவராவார். இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.
இதேவேளை, நேற்று மாலை குருணாகல் மாவத்தகம பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். பல வாகனங்களுக்கும் சேதமேற்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் மாவத்தகம பிரதேச சபைத் தவிசாளரின் வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே பொலன்னறுவை மாவட்டத்தில் நாமலின் குண்டர் படைத் தளபதி ரொஷான் தலைமையிலான குழுவினர் மைத்திரிபாலவுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஐ.தே.க.வினரை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgo5.html
Geen opmerkingen:
Een reactie posten