தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 november 2014

பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது: எதிர்க்கும் சுப்பிரமணியன் சுவாமி!

இது ஆரம்பம் மட்டுமே! இன்னும் பலர் வெளியேறுவர்!- ராஜித சேனாரத்ன
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 06:05.01 AM GMT ]
பல ­துன்­பங்­க­ளுக்கு அப்பால் ஒரு இலக்­கினை நோக்கி நாங்கள் முன்­வந்­துள்ளோம். மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இந்த இலக்­கினை நாம் அடைவோம். இந்த நாட்­டையும் மக்­க­ளையும் காப்­பாற்றக் கூடிய தலைவர் ஒரு­வரை சகல கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தெரிவு செய்­துள்ளோம் என்று எதி­ர­ணிக்கு மாறி­யுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 
கொழும்பு புதிய நகரசபை மண்டபத்தில் .நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது;
கடந்த காலங்­களில் எனது அமைச்சுப் பத­வியில் இருந்து பல்­வேறு சேவை­களை செய்­தி­ருக்­கின்றேன். ஒரு பொறுப்­பான அமைச்­ச­ராக இந்த நாட்­டையும் மக்­க­ளையும் பாது­காத்து என்­னா­லான சேவை­களை செய்­தி­ருக்­கின்றேன்.
எனினும் இந்த அர­சாங்­கத்தில் ஒரு சந்­தர்ப்­பத்­தி­லேனும் திருப்­தி­க­ர­மா­ன­தா­கவும் சந்­தோ­ச­மா­கவும் சேவை­யாற்­ற­வில்லை. என் அர­சியல் வர­லாற்றில் பல துன்­பங்­க­ளுக்கு அப்பால் ஒரு இலக்­கினை நோக்கி பய­ணிக்க நாங்­கள் முன்­வந்­துள்ளோம்.
ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கி பாரா­ளு­மன்­றிற்­கான அதி­கா­ரங்­களை பெற்றுக் கொண்டு நாட்டில் நிரந்­தர ஜன­நா­ய­கத்­தினை ஏற்­ப­டுத்த நாம் துணிந்­துள்ளோம். இன்று நான் மிகவும் மகிழ்ச்­சி­யாக உள்ளேன். நாட்டை வளர்க்கும் ஒரே இலக்­கினை அடை­வ­தற்­காக எனது அமைச்சுப் பத­வி­யி­னையும் சலு­கை­க­ளையும் துறந்து மக்­க­ளுக்­காக முன்­வந்­துள்ளேன்.
எனது அர­சியல் வர­லாற்றில் நான் சொத்து சேர்க்­க­வில்லை. மக்­களின் சொத்­துக்­க­ளையோ அல்­லது சலு­கை­க­ளையோ பறித்­தெ­டுக்­க­வில்லை.
அதேபோல் இன்று நாங்கள் அர­சாங்­கத்தை விட்டு வெளி­யே­றி­யி­ருப்­பது ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச மீதோ உள்ள தனிப்­பட்ட விரோ­தத்­தி­னாலோ அல்­லது முரண்­பா­டு­க­ளி­னாலோ அல்ல.
எனக்கு ஆட்சி முறைமை மீதே வெறுப்பு ஏற்­பட்­டுள்­ளது. நாட்­டிற்குள் பொருந்­தாத நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை தொடர்ந்தும் கொண்டு நடத்­து­வது அர்த்­த­மற்­றது. அதனை இனி­மேலும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடி­யாது.
நாம் இப்­போதும் பொறுத்து இருந்தால் நமது மக்­களும் சீர­ழியும் போது வேடிக்கை பார்த்தால் வரும் கால சந்­த­தி­யினர் எம்­மையே திட்­டு­வார்கள்.
மேலும் இந்த நாட்டில் விடு­தலைப் புலி­களின் ஆயுதப் போராட்டம் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் பிரளையும் ஒன்றிணையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு காரணம் இந்த ஜனா­தி­பதி முறை­மையேயாகும். அதி­காரப் பகிர்வின் ஊடாக உரி­மைகள் பாது­காக்­கப்­பட்­டி­ருக்­கு­மாயின் போராட்­டங்கள் ஏற்­பட்­டி­ருக்­காது.
அன்று இந்த நாட்­டையும் மக்­க­ளையும் காப்­பாற்ற வேண்டும் என்­ப­தற்­கா­கவும் ஆயுதப் போராட்­டத்தில் இருந்து காப்­பாற்­று­வ­தற்­கா­கவும் நாம் 17 பேர் அர­சுடன் இணைந்தோம். அப்­போது ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் இணைந்து நாட்டை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்றோம்.
மேலும் இந்த நாட்டில் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டத்தில் எவ்­வித குறை­பா­டு­களும் இல்லை. அத­னோடு எமக்கு எவ்­வித முரண்­பா­டு­களும் இல்லை. ஆனால் அதை அனைத்­தையும் சீர­ழிக்கப் பார்க்கும் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை மீதே எமது விரோதம் உள்­ளது.
நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினால் இந்­த­ நாடு பிடியில் சிக்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. மக்கள் இச் சது­ரத்­திற்குள் சிக்கிக் கொண்­டி­ருக்­கின்­றனர். தேசப்­பற்று, தேசியம் என பேசு­வது வெறும் வாய் வார்த்­தை­க­ளா­கவோ கற்­பனைச் சொற்­க­ளா­கவோ இருக்­கக்­கூ­டாது.
தேசப்­பற்று என்­பது இந்த நாட்­டினை காப்­பாற்­று­வ­தா­கவும் மக்­களை காப்­பாற்­றவும் எடுக்கும் அர்ப்­ப­ணிப்­பாகும்.  சொத்­துக்­க­ளையும் புக­ழை­யும் விடவும் மக்­களின் ஆத­ர­வே தேவை­யா­னது. மக்­களின் ஆத­ரவு இன்றி வேறு எது எம்­மிடம் இருந்தும் அவை அர்த்­த­முள்­ள­தாக அமையாது.
இந்த நாட்­டையும் மக்­க­ளையும் காப்­பாற்றக் கூடிய தலைவர் ஒரு­வரை சகல கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தெரிவு செய்­துள்ளோம். இவரின் மூலம் எண்ணி 100 நாட்­களில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கி நாட்டின் சுயா­தீ­னத்­தையும் உரி­மை­க­ளையும் பாது­காப்­ப­தற்கு நான் உறு­தி­பூண்­கிறேன்.
நாட்டில் மீண்டும் 17வது திருத்தச் சட்­டத்­தினை கொண்டு வந்து 18ம் திருத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைப்போம்.
இந்த நாட்டில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஐக்­கிய தேசியக் கட்சி ஆகிய இரண்­டு கட்சிகளும் மிக நீண்­ட­கால வர­லாற்­றினை கொண்டவை. ஆனால் இன்று நிறை­வேற்று முறை­மை­யினை நீக்குவ­தற்­காக இவ்விரண்டு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து களமிறங்கியுள்ளன.
இவ் இரண்டிற்கும் பலம் சேர்க்க ஏனைய கட்சிகளும் ஒன்றிணையவுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.
இன்று நாங்கள் ஒன்றிணைதிருப்பது ஆரம்பம் மட்டுமே. அதேபோல் அரசில் இருந்து இன்று மட்டுமல்ல போகப்போக எதிர்வரும் காலத்தில் பெருமளவானோர் வெளியேறுவர். இனிமேல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் யார் மிஞ்சுவார் என்பதை வரும் காலத்தில் பார்க்க முடியும்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgo6.html
பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது: எதிர்க்கும் சுப்பிரமணியன் சுவாமி
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 06:13.10 AM GMT ]
தமிழகத்தில் பிரபாகரன் பிறந்தநாள் விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரிடம் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் தமிழகத்தில் கொண்டாடப்படுவதைத் தடுக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அவர் கூறியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளி்யிட்டுள்ளது. 
மதிமுக சார்பில் வரும் நவம்பர் 27 ம் திகதி அன்று ´தியாகத் திருநாள் பினாங்கு பிரகடன விளக்கப் பொதுக்கூட்டம்´ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை சுட்டிக்காட்டியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இத்தகைய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள வைகோவின் மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும், வைகோவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சுவாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.
இந்திய அரசியல் சட்டம் 256-ன் படி ‘மத்திய அரசின் நிர்வாக அதிகாரத்துக்குத் தடையாகவோ, பாரபட்சப்படுத்தும் வகையிலோ மாநில அரசின் நிர்வாகம் செயல் படக்கூடாது’ என்பதை சுட்டிக்காட்டி பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgo7.html

Geen opmerkingen:

Een reactie posten