தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 november 2014

சர்வதேச மீனவர் தினம் இன்றாகும்: அம்பாறை மாவட்ட மீனவர்சங்க வலையமைப்பின் ஊடக அறிக்கை

இலங்கை மீனவர்களுக்கான மரண தண்டனை தீர்ப்பு தொடர்கிறது!
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 03:09.59 AM GMT ]
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களுக்கான தண்டனையில் மாற்றம் இல்லை என்று நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். எனினும் உள்ளுர் சட்டப்படி மூன்று இலங்கை மீனவர்களுக்கும் இன்னும் மரணதண்டனை தீர்ப்பு வழக்கில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhr5.html
வடக்கிற்கு யாழ்தேவி வந்ததால் மகிந்த அரசு தான் வேண்டும் என்று மக்கள் விரும்பவில்லை: அரியநேந்திரன் எம்.பி
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 03:29.32 AM GMT ]
வடக்கில் யாழ்தேவி புகையிரதத்தினை மகிந்த கொண்டு வந்தார் என்பதற்காக வட,கிழக்கு மக்கள் மகிந்த அரசாங்கம் தான் வேண்டும் என்று விரும்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் போக்குவரத்து தொடர்பாக நேற்று நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
யாழ்தேவி புகையிரதம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அங்குள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றது.
இதனை நிறுத்தி தகுதியானவர்களுக்கு உரிய தகைமைகளின் அடிப்படையில் தொழில் வாய்ப்பினை வழங்க உரியவர்கள் முன்வர வேண்டும் எனக்கூறினார்.
இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாங்கள் இதுவரைக்கும் எவருக்கும் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி வேலை வாய்ப்பினை வழங்கவில்லை, தகுதியானவர்களுக்கே வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் எனவும் கூறினார்.
அதனைத்தான் எமது கட்சியும் எதிர்பார்க்கின்றது என்பதனை கூறிய பாராளுமன்ற உறுப்பினர், கிழக்கு மாகாணத்தினை பொறுத்த வரையில் பாடசாலைகளுக்கான சிற்றூழியர் நியமனங்களில் அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்படுகின்றது என்பதற்கு அண்மைய நியமனங்கள் சான்று பகிர்கின்றன.
அதனடிப்படையிலேதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ஏறக்குறைய பத்து பாடசாலைகளுக்கு அம்பாறை மாவட்டத்தில் வசிக்கும் இஸ்லாமியர்கள் சிற்றூழியார்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இங்குள்ள பாடசாலைகளுக்கு ஏற்கனவே அந்தப்பிரதேசத்தில் இருக்கும் இளைஞர்களின் பெயர்கள் அந்தந்த பாடசாலை அதிபரினால் சிபாரிசு செய்யப்பட்டு உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இந்த அரசாங்கம் இருந்து வருகின்றது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 வீதம் தமிழர்கள் வாழ்கின்ற போதும் இந்த இடத்தில் இஸ்லாமியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதனை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதற்கு டக்ளஸ் தேவானந்த அமைச்சரால் பதில் கூற முடியுமா? என்ற கேள்வியினை கேட்டார்.
இங்குள்ள பல அமைச்சர்கள் இதுபோன்றுதான் எந்தவிதமான புள்ளிவிபரங்களும் தெரியாமல் பேசுகின்றார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் மட்டக்களப்பிற்கு சென்றிருந்த 110 வது பிரதி அமைச்சர் பிரபா கணேசன் மட்டக்களப்பில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு கிடைக்கும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை சரியாக பயன்படுத்தாமையால் திறைசேரிக்கு பணம் திரும்பி போவதாக கூறியிருந்தார்.
இவருக்கு இங்கு நடப்பது எதுவும் தெரியாவிட்டால் இங்கு இருப்பவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டு கதைக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வகுப்பு எடுத்து நடத்த வேண்டும்.
அண்மையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக பல அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்த வகையில் கிறவல் றோட், தென்னங்கன்று அமைப்பாளர், கொங்கிறீட் வீதிக்கென்று ஒரு அமைப்பாளர், காபட் வீதிக்கொன்று ஒரு பிரதி அமைப்பாளர், வேலைவாய்ப்பு படிவம் நிரப்ப இன்னுமொரு அமைப்பாளர், காரியாலயம் திறக்க, கட்சிக்கூட்டம் நடாத்த என்று பல அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இவ்வாறுதான் இவர்களது செயற்பாடு நடந்து கொண்டிருக்கின்றது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் மேலும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhr6.html

சர்வதேச மீனவர் தினம் இன்றாகும்: அம்பாறை மாவட்ட மீனவர்சங்க வலையமைப்பின் ஊடக அறிக்கை
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 05:04.02 AM GMT ]
எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக மீனவர்களின் நலனை கருத்திற் கொண்டு அரசு எரிபொருள் மானியம் கொடுத்து வந்தது.
அது தற்போது மாற்றப்பட்டு மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படுகின்றது. அதுவும் உரிய காலத்தில் வழங்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.
எனவே எரிபொருள் மானியத்திற்கு பதிலாக வழங்கப்படும் மீன்பிடி உபகரணம் வழங்கும் நடவடிக்கையை நிறுத்தி தொடர்ந்தும் எரிபொருள் மானியத்தினை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவர்களின் வேண்டுதலாகவுள்ளது.
இவ்வாறு சர்வதேச மீனவர் தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்ட மீனவர் சங்கங்களின் வலையமைப்பின் ஊடக அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வலையமைப்பின் தலைவர் எம்.சி.எம்.றபீக் தலைமையிலான வலையமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு:
இவ் வலையமைப்பின் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தற்காலத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமாக கருத்துகளை தெரிவித்தார்கள்.
மனித அபிவிருத்தி தாபனமும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய காரியாலயமும் இணைந்து கடந்த 2011 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்ட மீனவர் சங்கங்களின் வலைப்பின்னல் அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதில் நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையான 7 பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து 55 பதிவு செய்யப்பட்ட மீனவ சங்கங்களிலிருந்து 10000 க்கும் மேற்பட்ட அங்கத்தவ குடும்பங்கள் இணைந்துள்ளார்கள்.
இவ் வலைப்பின்னல் அமைப்பானது மீனவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை கண்டறிந்து அதனை உரிய அரச அதிகாரிகளுக்கு அறியப்படுத்தி இணக்கப்பாட்டுடன் நிவர்த்தி செய்யும் நோக்குடனே உருவாக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது.
மீனவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள்
கடந்த காலங்களில் மீனவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளான எரிபொருள் மானியம் முறையாக கிடைக்காமை, கரைவலை பாடுகளுக்கான அனுமதி கிடைக்காமை, சங்கங்களின் பதிவுகள் கிடைக்காமை, மீனவர் வாடிகளுக்கான அனுமதிகள் வழங்கப்படாமை, மீனவர் காப்புறுதி பிரச்சினைகள், கடலரிப்பு காரணமாக கடலில் இழுத்து செல்லப்பட்ட மரங்களை வெளியில் எடுக்கப்படாமை, சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடி மேற்கொள்ளல் மற்றும் மண் அகழ்வு போன்ற பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது.
இப் பிரச்சினைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடாக உரிய அரச அதிகாரிகளுக்கு அறியப்படுத்தி அவர்களின் ஒத்துழைப்படன் சில பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இவ் வலைப்பின்னல் அமைப்பின் ஊடாக மீனவர் தொடர்பான செயற்பாடுகள் தொடர்ந்தும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்காலத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மீனவர் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் பிரதான ஜீவனோபாய தொழில்களில் ஒன்றாக மீன்பிடி தொழில் உள்ளது.
இத்தொழில்களில் ஈடுபடுபவர்கள் தற்போது போதியளவு மீன்பிடி கிடைக்காமையால் வருமானம் மிகவும் பின்னிலையில் உள்ளார்கள். இவர்களுக்கு நாளாந்தம் கிடைக்கும் வருமானத்தினை தங்களது அன்றாட செலவுகளுக்கும் பிள்ளைகளின் கல்விச் செலவுக்குமே செலவு செய்ய முடியாதுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியினால் நேரடியாக பாதிக்கப்பட்டு தமது உறவுகளையும், உடைமைகளையும் இழந்து எந்தவித தொழில் மற்றும் வருமானமும் இல்லாத நிலையில் அகதிகளாக்கப்பட்டு முகாம்களில் வாழ்ந்து வந்தார்கள்.
அதன் பின்னர் தொண்டர் நிறுவனங்களினதும், அரசாங்கத்தினதும் உதவிகள் மூலமும் தங்களது முயற்சியின் மூலமும் இம்மீனவர்கள் சாதாரண நிலையில் தங்களது தொழில்களை மீண்டும் ஆரம்பித்து வாழ்ந்து வருகின்றார்கள்.
கரைவலை மீனவர்களின் பிரச்சினை
சுனாமிக்கு பின்னரான காலம் தொடக்கம் கரைவலை மீன்பிடி தொழில் பாரியளவு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை காணப்படுகின்றது. அதாவது சுனாமி தாக்கம் காரணமாக கடல் அடித்துச் சென்ற கற்கள், ஏனைய பொருட்கள் உரிய முறையில் துப்பரவு செய்யப்படாதுள்ளது.
அதே போன்று ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதால் கடந்த 3 வருடங்களாக ஏற்பட்ட கடலரிப்பு காரணமாக சாய்ந்தமருது தொடக்கம் அட்டப்பள்ளம் வரையான கடல் பிரதேசத்தில் பாரிய மரங்கள் கிடக்கின்றது. இதனால் கரைவலை மூலம் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளது.
வலைகளை போட்டு மீன்களை பிடிக்கும் போது அவ்வலைகள் மரங்கள் மற்றும் கற்களில் சிக்கி அறுந்து விடுகின்றது. இதனால் மீன்கள் வெளியேறிவிடுகின்றது. வலைகளும் அறுந்து இலட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து திருத்த வேண்டியுள்ளது. இதனால் கரைவலை மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வறுமையான நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.
வாடி வழங்கலில் பாரபட்சம் அநீதி
அதே போன்று பதிவு செய்து தலைமுறை தலைமுறையாக கரைவலை மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் மீனவர்கள் சிலருக்கு பாடுகளுக்கான அனுமதி மற்றும் வாடிகளுக்கான அனுமதி புதிப்பித்து கொடுக்கப்படாது கடந்த சில வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் சில பிரதேச மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதுவிடயத்தில் பாரபட்சம் அநீதி இழைக்கப்படுவதாக கருதுகின்றோம்.
இதனால் அம் மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக அமைச்சில் முறைப்பாடு செய்து அமைச்சரால் வழங்கப்பட்ட உத்தரவுகளை கூடஒரு சில அதிகாரிகள் நடைமுறைப்படுத்தாது காலத்தை கடத்தி வருகின்றார்கள்.
இது இவ்வாறு இருக்க கரைவலை மீன்பிடி தொழில் மூலம் நவம்பர், டிசெம்பர் வரையான காலம் பிடிக்கப்படும் மீன்கள் தற்போது அடியோடு மாந்திப் போயுள்ளது. இக்காலத்தில் பிடிக்கப்படும் மீன்களே கரைவலை மூலம் பிடிக்கப்படும் மிகவும் அதிகமான மீன்பிடியாகும். இந்நிலமை கடந்த 3 வருடகாலம் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது.
இதனால் கரைவலை மீன்பிடி தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொழிலை இழந்து வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கையை மேற்கொண்டு இம்மீனவர்களுக்கு உரிய நிவாரணத்தினை பெற்றுத்தர வேண்டும் என மீனவர் அமைப்பின் முக்கியஸ்தர்கள் உருக்கமான வேண்டுதலை முன்வைத்தார்கள்.
அத்துடன் மனித அபிவிருத்தி தாபனமானது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து சட்ட விரோதமாக மீன்பிடி உபகரணம் பாவிப்பதை தடை செய்யும் நோக்கத்துடன் உரிய அரச அதிகாரிகள் மற்றும் மீனவ சங்க வலைப்பின்னல் அமைப்பின் நிர்வாகிகளை ஒன்றிணைத்தும் கலந்துரையாடல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhsy.html

Geen opmerkingen:

Een reactie posten