அட்டன் வெலிங்டன் டிவிசன் யூனிபீல்ட் தோட்டத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான திருமதி. கமலேஸ்வரி (வயது 46) தமது குடும்பத்தின் கஷ்டம் காரணமாக குருணாகல் பிரதேசத்தில் தம்புள்ள வீதியில் உள்ள (ஷாட்) வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மூலம் கடந்த 2012 ஆண்டு 4 மாதம் 27 திகதி சவூதி அரேபியா நாட்டிற்கு வீட்டு பணிப்பெண்ணாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இவரின் கணவர் குருநாகல் பகுதியில் உள்ள கடை ஒன்றில் கூலி வேலை செய்து வருகின்றவர்.
மனைவி சவூதி நாட்டிற்கு சென்று 2 மாதம் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். அதன் பின் எந்தவிதமான தொடர்பும் இல்லாமையால் கணவன் பல இடங்களுக்கு சென்று மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்ததாகவும் அது பயனலிக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றார்.
2013.12.28 திகதி திடீரென கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வாருங்கள் உங்களின் மனைவி இலங்கைக்கு வந்துவிட்டார் என சவூதி நாட்டில் ஒன்றாக வேலை செய்த பெண் ஒருவர் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
கணவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது மனைவியின் கழுத்தில் பாரிய காயங்களுடனும், பேச முடியாத நிலையில் இருந்துள்ளார்.
குறித்த பெண் குருநாகல் , கண்டி, பேராதெனிய போன்ற வைத்தியசாலைகளில் ஒரு வருடத்திற்கு மேல் சிகிச்சை பெற்றதோடு கடந்த வாரம் வெலிங்டன் தோட்டத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த நிலையில் அவர் வெளியில் எழுந்து சென்ற போது தவறி விழுந்ததை தொடர்ந்து டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
இதே வேளை இவர் பணிப்புரிந்ததற்க்காக சம்பள பணம் எதுவும் வழங்கபடவில்லை என இவரின் கணவர் சுட்டிக்காட்டினார்.
இவரின் இறப்புக்கு வெளிநாட்டில் ஏற்பட்ட பிரச்சினை தான் காரணம் என இவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
பணிப்புரிந்த இடத்தில் கழுத்திலும், தலையிலும் அடித்துள்ளதாக தொலைபேசி மூலம் தெரிவித்ததாக கணவன் தெரிவித்தார்.
இதேவேளை இவர் வேலை செய்த வீட்டிற்கு தொடர்பு கொண்டபோதிலும் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
அத்தோடு இவரை இலங்கைக்கு வரவழைப்பதற்கு 38000 ரூபா பணத்தையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு செலுத்திருப்பதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இச்சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு நஷ்டஈடு வழங்குவதற்கு முன்வரவேண்டும் .
இச்சம்பவம் குறித்து அட்டன் திடீர் மரண விசாரணை அதிகாரி ஜே.எம்.பசீர் கருத்து தெரிவிக்கையில், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் போது கழுத்தில் பாரிய காயங்களுடன் இருந்துள்ளதுடன் அவரால் பேச முடியாத நிலையில் வீட்டில் தவறி கீழே விழுந்ததனால் தலைப்பகுதியில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhr7.html
Geen opmerkingen:
Een reactie posten