தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 november 2014

அரசியல் தீர்வு வெறுமனே ஒரு பிரதேச தமிழ் மக்களுக்குரிய தீர்வாக இருக்க முடியாது: அருண் தம்பிமுத்து!

கடும் கண்காணிப்பு வலயத்தினுள் மைத்திரிபால! சந்திரிக்காவை பழிவாங்கவும் திட்டம்?
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 05:25.40 AM GMT ]
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை முதல் கடும் கண்காணிப்பு வலயத்தினுள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அமைச்சர் மைத்திரிபாலவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளதுடன், தற்போது அமைச்சர் செல்லுமிடமெல்லாம் அரச புலனாய்வாளர்கள் பகிரங்கமாக நடமாடிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் இன்று நண்பகலுக்குள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் அவரை கட்சி தாவ விடாமல் தடுப்பது தொடர்பில் ஜனாதிபதி மட்டுமன்றி ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இன்று காலை முதல் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் தொலைபேசி வழியாக மைத்திரிபால சிறிசேனவுடன் நீண்டநேரம் உரையாடியுள்ளார். கட்சி தாவும் நடவடிக்கையை கைவிட்டால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு பிரதமர் பதவி உறுதி என்று அவர் வாக்களித்துள்ளதாக தெரிய வருகின்றது.
இதன் காரணமாக இன்று காலை தொடக்கம் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தனது நடமாட்டங்களை கட்டுப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே ஆளுங்கட்சிக்கு சவாலாக மாறிப்போயுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை பழிவாங்க அரசாங்கம் முனைப்புடன் செயலாற்றத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் சந்திரிக்காவுக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhsz.html
அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நேற்று: மக்கள் ஆராவாரம்
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 05:39.18 AM GMT ]
ஜனாதிபதி தேர்தல் நடாத்துவது தொடர்பான உத்தியோக பூர்வ பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை கையொப்பமிட்டதையடுத்து ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் பட்டாசு கொழுத்தி தங்களது மகிழ்ச்சியை  தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்னால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஆட்சி அமைத்துள்ள ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியினைத் தெரியப்படுத்தினர்.
ஜனாதிபதி தேர்தல் நடாத்துவது தொடர்பான உத்தியோக பூர்வ பிரகடனம் நேற்று வெளியீடு மக்கள் கொண்டாட்டம்
ஜனாதிபதி தேர்தல் நடாத்துவது தொடர்பான உத்தியோக பூர்வ பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை கையொப்பமிட்டதையடுத்து மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் வாழைச்சேனை நாவலடி சந்தி சுற்று வட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பட்டாசு கொழுத்தப்பட்டது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ.றபீலின் ஏற்பாட்டில் பட்டாசு கொழுத்தப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhs0.html
அரசியல் தீர்வு வெறுமனே ஒரு பிரதேச தமிழ் மக்களுக்குரிய தீர்வாக இருக்க முடியாது: அருண் தம்பிமுத்து
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 05:52.01 AM GMT ]
அரசியல் தீர்வு வெறுமனே ஒரு பிரதேச தமிழ் மக்களுக்குரிய தீர்வாக இருக்க முடியாது. கிழக்கைப் போல், வடக்கு, மலையகம் ஏனைய பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு சரியான திட்டம் ஒன்றை அமைத்துக் கொடுக்க வேண்டியது தமிழர்கள் அனைவரதும் கடமையாகும் என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு நகரிலுள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
ஜனாதிபதியவர்கள் தன் மூன்றாவது முறை மக்களின் ஆணைக்காக மக்கள் முன் செல்வதற்குத் தயாராக உள்ளார் என்ற விடயத்தை தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்திருக்கிறார்.
அதே போல் தேர்தலுக்கான தினங்கள் தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப்படவுள்ளது. அதே போல் இந்தக் காலத்தில் மக்கள் ஆணையைப் பெறவேண்டும் ஏனென்றால் கடந்த நான்கு வருடத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. அதற்கெல்லாம் பதில் கூறும் வகையில் ஜனாதிபதியவர்கள் மக்கள் முன் சென்று ஆணையைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தை முன்வைப்பது வரவேற்கத்தக்க விடயம்.
பலர் தங்களது கடைசி நாள் வரும் வரைக்கும் இருந்து விட்டு அதற்குப்பின் முடிவெடுப்போம் என்ற நிலை இல்லாமல் தனது 6 வருடங்களை பூர்த்தி செய்வதற்கு முன்னாலேயே மக்கள் ஆணையைப் பெறவேண்டும் என்று ஜனாதிபதியவர்கள் எடுத்த முடிவை நான் முழு மனதாக பாராட்டுகின்றேன். சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்புத் தொகுதி கூட தயாராக இருக்கின்றது. இந்த நாட்டில் எமது மக்களின் தேவையென்ன என்பது குறித்து தெளிவாக விளங்கப்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றோம். மக்களும் தெளிவாகச் சிந்தித்து தங்கது முடிவை வாக்கு மூலம் காட்ட வேண்டும் என்ற விடயத்தை நான் முன்வைக்க விரும்புகின்றேன்.
இன்று பல எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அபிவிருத்தியை மட்டும் முன்வைத்து இந்த அரசு தேர்தலுக்காகப் போட்டியிடுகின்றது என்று. இதனை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். அபிவிருத்தி இருந்தால்தான் இந்த நாட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்ற விடயத்தை எவரும் மறுக்க முடியாது. அதே வேளை அரசு கடந்த நான்கு வருடங்களில் முன்னெடுத்த விடயம் உட்கட்டமைப்பை இந்த நாட்டில் உவாக்க வேண்டும். வீதிகள், மின்சார வசதி, பாலங்கள் போன்றவையெல்லாம் கட்டப்படவேண்டும் அதன் ஊடாகத்தான் இங்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும்.
முக்கியமாக தொழிற்சாலைகளை எமது நாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட திட்டத்தில் தான் இன்று மக்களின் வாழ்வாதாரத்துக்குச் சரியான தீர்வைக் காணவேண்டும் என்ற விதத்தில் தான் ஜனாதிபதியவர்கள் மக்கள் மத்தியில் சென்று கடந்த நான்கு வருடங்களும் உட்கட்டுமானத்தில் அபிவிருத்தியைச் செய்திருக்கின்றேன் இனிவரும் 6 வருடங்கள் பொருளாதாரத்தில் மாற்றத்தைக் கொண்டுவரப்போகின்றேன். முக்கியமாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப் போகின்றேன் என்ற கருத்தை மக்கள் முன் வைக்க அவர் தயாராக இருக்கின்றார்.
அதே போல் எதிர்க்கட்சிகளின் உரிமைப்பிரச்சினை, எவரும் சொல்லவில்லை மக்களுக்கு உரிமை தேவையில்லை என்று. அது பேசித் தீர்க்க வேண்டிய விடயம். இதில் இன்று எடுத்துவிட்டோம். நாளை விழுத்தி விட்டோம் என்றெல்லாம் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இந்தப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் இருசாராரும் இருந்து பேசி, பல விடயங்களையும் ஆராய்ந்து, அதன் மூலமாக ஒவ்வொரு பிரதேசத்துக்குமான தீர்வைக் காணவேண்டும் என்ற ஒரு ஜதார்த்தம் உள்ளது.
கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டத்தின் படியான காணி பொலிஸ் அதிகாரம் பாரிய விளைவை ஏற்படுத்தும். அதற்கு மாற்றீட்டை, எதிர்க்கட்சிகளும், தமிழ் தேசியம் கூட சிந்திக்க வேண்டும். ஏனென்றால் கிழக்கு மாகாணத்தில் 35 வீதமளவில் இருக்கும் தமிழர்கள் காணி பொலிஸ் அதிகாரங்களை வெறுமனே மாற்றுச் சமூகங்களின் கைகளில் கொடுத்து கிழக்கு மாகாணத் தமிழர்களின் எதிர்காலத்தை பணையம் வைக்க முடியாது.
அதற்கு மாற்றீடான அரசியல் கருத்தை, திட்டத்தை அனைவரும் முன்வைக்க வேண்டும். கிழக்கு மாகாணத் தமிழர்களின் பாராம்பரிய நிலங்கள் எப்படிப்பாதுகாக்கப்படப் போகின்றது என்பதற்கு ஒரு பதிலைக் கொடுத்துவிட்டு அரசியல் பேசவேண்டும். ஏனென்றால் கிழக்கு மக்கள் பாரிய செருக்கடியில், சிக்கலுக்கு மத்தியில் வாழ்க்கையை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் வெறுமனே ஒரு பிரதேசத்துக்குரிய மக்களுக்குரிய தீர்வாக அரசியல் தீர்வு இருக்க முடியாது. ஏனென்றால் தமிழ் மக்கள், கிழக்கைப் போல், வடக்கு, மலையகம் ஏனைய பிரதேசங்களிலும் வாழ்கிறார்கள். அவர்களின் எதிர்காலத்திற்கு சரியான திட்டம் ஒன்றை அமைத்துக் கொடுக்க வேண்டியது தமிழர்கள் அனைவரதும் கடமையென்று நான் கருதுகின்றேன்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhs1.html

Geen opmerkingen:

Een reactie posten