தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 november 2014

நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: பொன் செல்வராசா

எதிரணி மேடையில் பிரதான பாத்திரம் வகிக்க சந்திரிகா உறுதி!- சந்திரிகாவுடனான சந்திப்பின் பின் மனோ தெரிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 01:31.32 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசானுக்கும் இடையிலான ஒரு முக்கிய சந்திப்பு நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.
முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவர் வேலுகுமார், உபசெயலாளர் சண் குகவரதன், நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன ஆகியோரும் கட்சி தலைவர் மனோ கணேசனுடன் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு பற்றி ஊடகங்களுக்கு மனோ கணேசன் தெரிவித்தாவது,
சந்திரிகா குமாரதுங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திலும், அதை தொடர்ந்த இடைக்கால ஆட்சியமைப்பிலும், எதிர்கால அரசமைப்பிலும் முக்கிய பாத்திரம் வகிப்பார் என்ற உறுதியை அவரிடம் இருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளவே நாம் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டோம்.
உட்கட்சி பிரச்சினைகளிலும், தனிநபர்களின் நிகழ்ச்சி நிரல்களிலும் சிக்குண்டு தோல்வியடையக்கூடிய ஒரு தேர்தலில் பங்கு பெற ஜனநாயக மக்கள் முன்னனி தயாரில்லை என நான் அவரிடம் தெரிவித்தேன்.
அந்த நிலைப்பாட்டிலேயே தானும் இருப்பதாக தெரிவித்த அவர், வெற்றியடையக்கூடிய தனது மாற்று யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டமையினாலேயே தாம் இதில் பங்களிக்க முன்வந்துள்ளதாக எம்மிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் சந்திப்பு மிகவும் திருப்திகரமாக நடைபெற்றது.
நேற்று நான் ஊடக மாநாட்டில் சொன்னது போல், இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முற்போக்கு அணியும், ஏனைய அனைத்து கட்சிகளுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்பாகவும், குறிப்பாக தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவும் ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமான நிலைப்பாடுகளை கொண்ட சந்திரிகா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முற்போக்கு அணியை பொது எதிரணியுடன் கொண்டு சேர்ப்பதில் தலைமை பாத்திரம் வகிக்க உறுதி பூண்டுள்ளார் என்பது தெளிவாக, நமது இன்றைய கலந்துரையாடலில் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
எதிரணி பொது வேட்பாளர் யாரென அதிகாரப்பூர்வமற்ற முறையில் முடிவு செய்யப்பட்டு விட்டது. அதுபற்றிய கருத்து பரிமாற்றங்களுக்கு இனி இடமில்லை.
பொது வேட்பாளர் யாரென இப்போது பகிரங்கமாக அறிவிக்க முடியாது.
நிச்சயமாக வெற்றி பெற்று இந்நாட்டிலே நல்லாட்சியை நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கையை நமக்கு தரக்கூடிய வேட்பாளராக அவர் இருக்கின்றார் என்பதை இப்போது தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
இதுபற்றிய நாளை நடைபெறும் எதிரணி கட்சி தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் அது அதிகாரப்பூர்வமாக நாட்டுக்கு அறிவிக்கப்படும்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhq3.html
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமா?
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 02:13.52 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் சற்று தடுமாறிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இது தொடர்பாக அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஆகியோருக்கிடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் அண்மையில் நடைபெற்றுள்ளன.
எனினும் மேலாதிக்க மனோபாவத்துடன் அமைச்சர் பசில் நடந்து கொள்வதும், தமது கோரிக்கைகளை உதாசீனப்படுத்துவதும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன களமிறங்கும் பட்சத்தில், அவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.
அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து பகிரங்கமாக அறிவிக்கவுள்ளதாகவும் அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhry.html
பயங்கரவாதத்தை தோற்கடிக்க நிறைவேற்று ஜனாதிபதி முறை தேவையில்லை! - அரசாங்கம் வரி வருமானத்தை அதிகரிக்க முயற்சி!- ஐதேக
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 01:37.23 AM GMT ]
பயங்கரவாதத்தை தோற்கடிக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அவசியமில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பிராந்திய நாடுகளில் பயங்கரவாதத்தை ஒழிக்க, நாடாளுமன்ற நிர்வாகமே பயன்படுத்தப்பட்டது.
எனவே நிறைவேற்று அதிகாரம் இலங்கையின் பயன்படுத்தப்பட்டமைக்காக பயங்கரவாதத்தை காரணம் கூறுவது பொருத்தமாகாது என்று எரான் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்;ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், இந்தியாவிலும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் நாடாளுமன்ற நிர்வாகத்துக்கு ஊடாகவே மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.
அரசாங்கம் வரி வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கின்றது – ஐ.தே.க
அரசாங்கம் வரி வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வரி அறவீடு செய்வது குறித்து அரசாங்கம் கிரமமான அணுகுமுறைகளை பின்பற்றவில்லை.
வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேறு வழியில்லாத காரணத்தினால் வரியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரூபாயின் ஸ்திரத்தன்மையை பேணுவது மிகவும் முக்கியமானதாகும்.
ரூபாவின் பெறுமதி தளம்பும் காரணத்தினால் திறைசேரி ஒதுக்கங்களில் பாதிக்கப்படும்.
எம்பிலிபிட்டி கடதாசி கைத்தொழிற்சாலைக்கு என்ன நேர்ந்துள்ளது.
அரச வளங்களை பாதுகாத்துக் கொள்வதாக அறிவிக்கும் அரசாங்கம் இது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
வங்கிகளின் பங்குகளை அரசாங்கம் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தின் சுய தேவைகளுக்காக அவற்றை பயன்படுத்தி வருகின்றது.
சில தனியார் வங்கிகள் வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்றுக் கொண்டு அதனை அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கத்திற்கு வழங்குகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகள் பல்வேறு பொருளாதாரப் பாதிப்புக்களை ஏற்படுத்திக் கூடும்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இவ்வாறான நடவடிக்கைகள் வழியமைக்காது எனவும் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhq4.html
நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: பொன் செல்வராசா
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 02:28.17 AM GMT ]
நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்கெட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு வாழ் மக்களின் காணிகளை அரசாங்கம் பலவந்தமாக கைப்பற்றி வருகின்றது.
இவ்வாறான ஓர் நிலைமையில் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமையை பாதுகாப்பது எவ்வாறு? நாட்டில் நல்லாட்சி கிடையாது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் அக்கறை காண்பிப்பதில்லை.
அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கடமை எமக்கு உண்டு, அந்த கடமையிலிருந்து நாம் தவற மாட்டோம்.
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இதனால் தமிழ் மக்களின் மனம் காயப்பட்டுள்ளதாக பொன் செல்வராசா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhrz.html

Geen opmerkingen:

Een reactie posten