ஐ.தே.கட்சியின் வேட்பாளரின் வெற்றிக்காக அரசில் இருந்து விலகும் தரப்பினரின் ஆதரவு பெறப்படும்: லக்ஷ்மன் கிரியெல்ல
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 06:01.11 AM GMT ]
கண்டி பிரதேசத்தில் நேற்று வாக்குச்சாவடி பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா மற்றும் ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இருந்து பிளவுப்பட்டு வரும் தரப்பு ஆகியோரின் ஆதரவை பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் வேட்பாளர் வெற்றி பெறுதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதை தடுக்க ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhq5.html
பெண்ணொருவரின் பாதத்தை வெட்டிய மர்மகும்பல்! பலாங்கொடையில் சம்பவம்
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 06:11.53 AM GMT ]
பலாங்கொடை தெஹிகஸ்தலாவ நூலகத்தில் கடமையாற்றும் பெண்ணொருவரின் பாதம் மர்ம நபர்களால் வெட்டப்பட்டுள்ளது.
54 வயதான பெண் நூலகரின் பாதமே இவ்வாறு வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்கள் பெண்ணின் வெட்டிய பாதத்துடன் தலைமறைவாகி விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடமைக்கு சென்று திரும்பும் போதே கடையொன்றுக்கு முன்பாகவைத்து பெண்ணின் பாதம் நேற்று மாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர், பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துண்டாடப்பட்ட பாதத்தை எடுத்து வந்திருந்தால் அதனை காலுடன் இணைத்திருக்க முடியும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருடைய பாதத்தை துண்டாடியதாக சந்தேகிக்கப்படும் பெண்ணின் சகோதரர் மற்றும் சகோதரரின் மகனை பொலிஸார் தேடி வருகின்றனர்.
குடும்ப தகராறு காரணமாக சகோதரியின் காலை வெட்டிய சகோதரன் கைது
இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை தெஹிகஸ்தலாவ பிரதேசத்தில் பெண்ணொருவரின் காலில் ஒரு பகுதியை வெட்டி எடுத்துச் சென்ற தந்தையும் மகனும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலாங்கொடை நகர சபைக்கு சொந்தமான நூலகம் ஒன்றின் பொறுப்பாளராக பணியாற்றி வந்த பெண்ணின் காலில் ஒரு பகுதியை சந்தேக நபர்கள் வெட்டியுள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக இந்த வெறிச் செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெண்ணின் காலில் ஒரு பகுதியை வெட்டி எடுத்துச் சென்றவர்கள் பெண்ணின் சகோதரரும் அவரது மகனும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை இன்று காலை 5.30 அளவில் கைது செய்த பலாங்கொடை பொலிசார், சம்பவத்திற்கு பயன்படுத்திய வாளையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் பலாங்கொடை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhq6.html
மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய முன்னாள் இராணுவ வீரர் கைது (செய்தித் துளிகள்)
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 06:18.56 AM GMT ]
சம்பவம் நடைபெற்று 45 நாட்களின் பின்னர் கல்கிஸ்சை பொலிசார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கல்கிஸ்சை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேக நபரான முன்னாள் இராணுவ வீரரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்சை மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க உத்தரவிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி சந்தேக நபர் கல்கிஸ்சை வெடிகந்த பிரதேசத்தில் 14 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதுடன் அவரது தந்தையை கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கியதால் படுகாயம் ஏற்படுத்தியிருந்தார்.
சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்று புத்தளத்தில் உள்ள இறால் பண்ணை ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி கொண்டிருந்த போது கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தில் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அங்கு சென்ற பொலிஸ் குழு சந்தேக நபரை கைது செய்துள்ளது.
சந்தேக நபர் முன்னாள் இராணுவ வீரர் எனவும் இராணுவத்தில் இருந்து தப்பியோடிய இந்த நபர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அத்துடன் சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் ஏற்கனவே மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
வான் முச்சக்கர வண்டி விபத்து: மூவர் படுகாயம்
தலவாக்கலை, நுவரெலியா பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உட்பட மூவர் பலத்த காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிசார் தெரிவித்தனர்.
லிந்துலை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்றும் கொட்டகலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிகொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனா்.
இவ்விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த நபரும் வீதியில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவருமே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் தலவாக்கலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயம்.
விஞ்ஞான ஆய்வு கூடத்தில் மேற்படி பாடசாலைக்கு முன்னால் காணப்பட்ட மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததால் குறித்த ஆய்வு கூடத்தில் கல்வி நடவடிக்கைகளில் இருந்த மூன்று மாணவிகள் காயம் ஏற்பட்டு வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக பாடசாலையின் அதிபர் நிர்மலா பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
இச்சம்பவம் இன்று 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் சீரற்ற காலநிலையால் பலத்த காற்று வீசியதாகவும் கிளை முறிந்து விழுந்ததால் பாடசாலை கட்டிடத்திற்கும் விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவிக்கின்றார்.
அட்டன் கல்வி வலய பணிப்பாளரின் அனுமதியை பெற்று பாடசாலைக்கு விடுமுறை வழங்கியுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காணப்படும் மரங்களை வெட்டுவதற்கு வனதுறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhq7.html
Geen opmerkingen:
Een reactie posten