தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 november 2014

முஸ்லிம் காங்கிரசின் தனி மாவட்ட கோரிக்கை பாரதூரமான பிரச்சினையாகும்: விஜேதாச ராஜபக்ஷ

ஜோதிடர்களின் யோசனைக்கமைய தேர்தல் நடத்தப்பட்டால் உலகம் நம்மை ஏளனம் செய்யும்: கபே
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 06:37.52 AM GMT ]
ஜோதிடர்களின் யோசனைக்கு அமைய தேர்தல் நடத்தப்பட்டால், சர்வதேச சமூகம் எம்மை ஏளனம் செய்யும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே குற்றம் சுமத்தியுள்ளது. 
ஜனவரி மாதம் 3ம், 7ம் அல்லது 8ம் திகதிகளில் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்த முடியும் என ஜோதிடர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
எனினும், இவ்வாறு ஜோதிடர்களின் தினங்களுக்கு அமைய ஜனாதிப தேர்தலை நடத்தினால் உலக அளவில் நாட்டையும் நாட்டின் தேர்தல் முறைமையையும் மலினப்படுத்தும் வகையில் அமையும் என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர்கள் பணிப்புரைக்கு அமைய தேர்தல் நடத்தப்பட்டால் அது இலங்கைக்கு மட்டுமன்றி முழு உலகிற்கும் பிழையான முன்னுதாரணமாக அமையும்.
சில அரசியல் கட்சிகள் ஏற்கனவே இந்த திகதிகளின் அடிப்படையில் பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளது.
தேர்தல் சுயாதீன முறையில் நடத்தப்பட வேண்டியது அவசியமானது.
ஒரு வேட்பாளருக்கு சாதகம் ஏற்படக் கூடிய வகையில் தேர்தல் நடத்தப்படுவது ஆரோக்கியமானதல்ல.
ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhry.html
மாலக்க சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 07:27.02 AM GMT ]
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு இரவு நேரக கேளிக்கை விடுதியொன்றில் வைத்து பிரிட்டன் தம்பதியினரை தாக்கியதாக மாலக்க சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாலக்க சில்வாவை எதிர்வரும் 11ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாலக்க சில்வாவை பிணையில் விடுதலை செய்யுமாறு மாலக்கவின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரியிருந்தார்.
எனினும் இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மாலக்க சில்வா கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நீதிமன்றிற்கு சென்ற நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் விளக்க மறியல் காலத்தை நீடிப்பதாக அறிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தில் மாலக்கவின் மூக்கு உடைந்துள்ளதாக சில இலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிரிட்டன் பிரஜை நடத்திய தாக்குதலில் மாலக்கவின் மூக்கு உடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாலக்க ஸ்கொட்லாந்து பிரஜையின் காதலியை தூக்க முற்பட்டதாகவும் அதன் போது முரண்பாடு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhrz.html
முஸ்லிம் காங்கிரசின் தனி மாவட்ட கோரிக்கை பாரதூரமான பிரச்சினையாகும்: விஜேதாச ராஜபக்ஷ
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 07:37.46 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் தனியான நிர்வாக பிராந்தியத்தை கோருவது பாரதூரமான பிரச்சினை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் மூன்றாம் முறை வாசிப்பின் ஆரம்ப விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சட்டம், சமாதானம், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி உள்ளிட்ட 10 அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய விவாதம் இன்று நடைபெறுகிறது.
ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் விவாதத்தின் ஆரம்பத்தில் கருத்து வெளியிட்ட விஜேதாச ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிங்கள மக்களையும் முஸ்லிம் மக்களை பிரிக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுப்பதில்லை எனவும் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட பிரதமர் டி.எம். ஜயரத்ன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவாக தானே காரணமாக இருந்தாக கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhr0.html

Geen opmerkingen:

Een reactie posten