தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 november 2014

இன்று நடைபெறும் அடையாள அணிவகுப்பில் சிக்குவாரா மாலக்க சில்வா? - துப்பாக்கிகளுடன் 7 பேர் கைது [ செவ்வாய்

மாலைதீவின் முக்கிய குற்றவாளி இலங்கையில் தஞ்சம்
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 03:53.28 AM GMT ]
மாலைதீவின் முக்கிய குற்றவாளி ஒருவர் இலங்கையில் வசிப்பதாக மாலைத்தீவு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மாலைதீவில் முக்கிய குற்றவாளியாக தேடப்படும் ஒருவர் தப்பிச்சென்று இலங்கையில் வசிப்பதாக மாலைதீவு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அப்துல்லா லத்பி என்ற அவரை கைது செய்யமுடியும் என்று மாலைதீவின் உள்துறை அமைச்சர் உமர் நசீர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆட்சியை கவிழ்ப்பதற்காக முயன்று 19 மாலைதீவியர்களின் உயிர் பலிக்கு காரணமாக இருந்தவர்களின் பின்னணியில் லத்பி இயங்கி வந்தார்.
இந்தநிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர் இலங்கைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்தவேளையில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 2012ஆம் ஆண்டு மொஹமட் நசீத் ஜனாதிபதியாக இருந்தவேளையில் இடம்பெற்றது. உள்துறை அமைச்சரின் தகவல்படி 66 வயதான லத்பி இலங்கையிலேயே வசித்து வருகிறார் .
இந்தநிலையில் லத்பியின் தலைக்கு மாலைதீவு பொலிஸ் 75ஆயிரம் மாலைதீவு நாணயமான ரூபியாவை தருவதாக அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhq0.html
கல்முனை பிராந்திய அபிவிருத்தி திட்ட இரட்டை ஒப்பந்தம் கைச்சாத்தல்
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 05:15.13 AM GMT ]
கல்முனைப் பிராந்தியத்தின் நவீன அபிவிருத்தி திட்டங்களை இலக்காகக் கொண்டு கல்முனை மாநகர சபையை ஜேர்மன் நியுரம்பேர்க் மாநகர சபையுடன் இணைக்கும் இரட்டை நகர புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை நியுரம்பேர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.
இதில் நியுரம்பேர்க் மாநகர முதல்வர் டாக்டர் கிளமன்ஸ் ஜிசெல் மற்றும் கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் ஆகியோர் கைச்சாத்திட்டு ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.
கல்முனை மாநகர பிரதேசங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, வர்த்தகம், கல்வி, கலாசாரம், சமூக, பொருளாதார மற்றும் விளையாட்டுத் துறைகளின் முன்னேற்றம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு இந்த இரட்டை நகர இணைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் கடந்த வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜேர்மன் பயணமாகியிருந்தார்.
கல்முனை நகரமானது ஒரு வெளிநாட்டு நகரம் ஒன்றுடன் இரட்டை நகர இணைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டமை கல்முனையின் வரலாற்றில் இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
நியுரம்பேர்க் நகரமானது ஜேர்மனியில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சமூக, பொருளாதார துறைகளில் தன்னிறைவு கண்ட அனைத்து வளங்களும் நிறைந்த ஒரு விசாலமான- செல்வந்த நகரம் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இந்த இரட்டை நகர ஒப்பந்தத்தின் மூலம் கல்முனை மாநகர பிரதேசங்களின் உட்கட்டமைப்பு, வர்த்தகம், கல்வி, கலாசாரம், சமூக, பொருளாதார மற்றும் விளையாட்டுத் துறைகளின் நவீன அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி, வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு ஜேர்மன் நாட்டின் நியுரம்பேர்க் மாநகர சபை முன்வந்துள்ளது என்று கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
அதேவேளை இந்த இரட்டை நகர இணைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்துவதற்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்த கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhq1.html
இன்று நடைபெறும் அடையாள அணிவகுப்பில் சிக்குவாரா மாலக்க சில்வா? - துப்பாக்கிகளுடன் 7 பேர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 05:38.36 AM GMT ]
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா இன்று  அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார். 
கொழும்பு இரவு களியாட்ட விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதலை அடுத்து மாலக்க சில்வா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய ஜோடி ஒன்றுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பிரச்சினை காரணமாக மாலக்க சில்வா கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
மோதலில் மாலக்க சில்வாவும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதல் தொடர்பில் மேலும் ஆறு பேரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் நேற்று மாலக்க சில்வாவிடம் வாக்குமூலம் பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிகளுடன் 7 பேர் கைது
நாட்டில் சில பகுதிகளில் மேற்கொண்ட விசேட தேடுதலின் போது துப்பாக்கிகளை வைத்திருந்த 7 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி, மாதம்பை, கடுவலை, ஹங்வெல்லை ஆகிய பிரதேசங்களில் இந்த தேடுதல்கள் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.
களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சுமித் எதிரிசிங்கவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து இலங்கையில் தயாரிக்கப்பட்ட 18 துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhq2.html

பதுளை இடைதங்கள் முகாம் பாராமரிப்பு செயற்பாடுகள் பொருத்தமற்றது: யோகேஸ்வரன் எம்.பி
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 05:56.00 AM GMT ]
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடைத்தங்கள் முகாம்களில் மேற்கொள்ளப்படுகின்ற பராமரிப்புச் செயற்பாடு மிகவும் பொருத்தமற்றதாக காணப்படுகின்றது என த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையில் இது மிகவும் வேதனையான விடயம். நான் இரண்டு நாட்களுக்கு முன் இவ்விடத்திற்கு விஜயம் செய்து இம்மக்கள் பற்றிய தகவல்களை பெற்று அவர்களுக்கு உதவிகள் வழங்கினேன்.
குறிப்பாக இப்பகுதியில் 54 வீடுகள் முற்றுமுழுதாக சேதமாகியுள்ளது, அதே வேளையில் அதனைச் சூழ்ந்திருக்கின்ற மக்களும் பாதிப்பை எதிர்கொள்ளக் கூடிய சூழல் இருப்பதன் காரணமாக அந்த மக்களும் அங்கிருந்து இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை பொருத்தமட்டில் கொஸ்லாந்து கணேசா வித்தியாலயத்தில் 11 குடும்பங்களும், எஞ்சிய மக்கள் பூணாகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் இருக்கின்றனர்.
அதே வேளை ஏனைய குடும்பங்கள் சார்பான தகவல்கள் எமக்கு கிடைக்கபெறவில்லை.
அங்கிருந்த குடும்பங்களை தவிர்த்து அவ்வழியால் வேலைக்குச் சென்றவர்களும் இதில் பாதிக்கப்ட்டிருக்கின்றார்கள.
எனினும் இந்த அரசாங்கமானது திட்டமிட்ட வகையில் இந்த மக்களுக்கான இடைத்தங்கள் முகாம் பராமரிப்பினை மேற்கொள்ளவில்லை.
குறிப்பாக பெரகல பகுதியில் இருந்து 17 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கின்ற பாதிப்புக்குள்ளான பிரதேசத்திற்கு அருகாமையில் இருக்கின்ற கணேசா வித்தியாலயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஏற்படுத்தப்பட்டிருக்கும் முகாமில்  அடிப்படை வசதிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை.
இதேவேளை பண்டாரவளையில் இருந்து 22 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கின்ற மிகவும் குளிரான பிரதேசமாகிய பூணாகலையில் அடுத்த முகாமினை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அங்கும் வசதிகள் செய்து கொடுப்பதில் தாமதிக்கின்றார்கள்.
எனவே இந்த அரசாங்கம் இரண்டு முகாமிலும் இருக்கின்ற மக்களை பண்டாரவளையில் ஒரு சிறந்த இடத்தினை தெரிவு செய்து அவர்களுக்கு தற்காலிக கொட்டிலை அமைத்து தனித்தனியாக அந்த குடும்பங்களை தங்கவைக்க வேண்டும்.
இங்கு பூரண உதவிகள் வந்து கிடைத்தாலும் கூட அதனைப் பராமரிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லை.
ஒரு அனர்த்தம் இடம்பெற்றால் எந்தளவிற்கு இந்த முகாம் பராமரிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பல அனர்த்தங்களில் ஏற்பாடுகள் செய்தவர்கள் என்ற ரீதியில் எமக்கு பல அனுபவம் இருக்கின்றது.
எனவே அந்தவகையில் இந்த மக்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற பராமரிப்புச் செயற்பாடு மிகவும் பொருத்தமற்றதாக இருப்பதனை நான் கூறவேண்டியவனாக இருக்கின்றேன்.
இந்த விடயத்தினை நான் பாராளுமன்றத்திலும் பேச இருக்கின்றேன். அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் உட்பட அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்து என்னால் இயன்ற அளவு முயற்சிகள் மேற்கொள்வேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhq3.html

Geen opmerkingen:

Een reactie posten