தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 november 2014

ஜனா­தி­பதி தேர்தல் முடி­யும் வரை படை­யினர் முகா­முக்குள் முடக்­கப்­பட வேண்டும்!- விஜ­ய­கலா எம்.பி. வலி­யு­றுத்தல்!

மாவீரர் தினம் மற்றும் ஜனா­தி­பதி தேர்தல் என்­பன நிறை­வ­டையும் வரையில் வடக்­கிலே நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரும் கடற்­ப­டை­யி­னரும் முகாம்­க­ளுக்குள் முடக்­கப்­பட வேண்டும் என நேற்று பாரா­ளு­மன்­றத்தில் ஐ.தே.க. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் வலி­யு­றுத்தினார்.
மேற்­படி காலப்­ப­கு­திக்குள் இவ்­விரு தரப்­பி­னரும் முகாம்­களை விட்டு வெளியில் வரு­வ­தற்கு அர­சாங்­கமும் பாது­காப்பு அமைச்சும் அனு­ம­தி­களை வழங்­கக்­கூ­டாது என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பொது­ஜன ஐக்­கிய முன்­னணி அர­சாங்­கத்­ தே­வைக்­கா­கவே அழைத்து வரப்­பட்ட முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்­காமர் தேசத் ­து­ரோகி எனக் குறிப்பிட்டார்.
பள்­ளி­வா­சல்கள் அழிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற நிலையில் இந்தப் பாரா­ளு­மன்­றத்தில் இருக்­கின்ற முஸ்லிம் அமைச்­சர்­களும் எம்.பி.க்களும் அர­சாங்­கத்­துக்கு வக்­கா­லத்து வாங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றனர் என்றும் விஜ­ய­கலா எம்.பி. சாடினார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற காணி,- காணி அபி­வி­ருத்தி அமைச்சு மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் கூறு­கையில்,
வடக்கில் இரா­ணு­வமும் கடற்­ப­டையும் அடா­வ­டித்­த­ன­மாக செயற்­பட்டு வரு­வ­தையும் இங்கு கூறி வைக்­கின்றேன்.
பொது­ஜன ஐக்­கிய முன்­னணி அர­சாங்­கத்தின் தேவைக்­கா­கவே லக்ஸ்மன் கதிர்­காமர் அழைத்து வரப்­பட்டு வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக அமர்த்­தப்­பட்டார். அவ்­வாறு அமர்த்­தப்­பட்ட அவர் புலி­களால் கொல்­லப்­பட்­ட­தாக இங்கு கூறப்­ப­டு­கின்­றது. அவ­ருக்கு புக­ழா­ரமும் சூட்­டப்­ப­டு­கின்­றது. ஆனால் அவர் தமி­ழி­னத்தின் துரோ­கி­யாவார். தமிழ் தேசி­யத்தின் துரோ­கி­யா­கவே இருந்தார். அவ்­வா­றா­ன­வ­ரி­னது காணியும் இன்று படை­யி­னரால் சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.
யாழ்­தேவி வந்­தாலும், அபி­வி­ருத்­திகள் வந்­தாலும், வடக்கில் இரா­ணு­வத்­தினர் சிவில் அதி­கா­ரி­க­ளா­கவே செயற்­பட்டு வரு­கின்­றனர். இதனால் எம்­மக்கள் அச்­சத்தின் சூழ­லி­லேயே இருந்து வரு­கின்­றனர். வடக்கில் இரா­ணுவம் திட்­ட­மிட்டு செயற்­பட்டு வரு­கின்­றது.
மாவீரர் தினம் வர­வி­ருக்­கின்ற நிலையில் அங்கு தற்­போது சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­டுள்­ளன. அங்கு சுவ­ரொட்­டி­களை ஒட்­டு­வ­தற்­கான சூழலோ அல்­லது தைரி­யமோ தமிழ் மக்­க­ளுக்குக் கிடை­யாது. இந்­நி­லையில் இரா­ணு­வமே இவ்­வாறு சுவ­ரொட்­டி­களை ஒட்டி குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
மாவீரர் தினம் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என்பன நிறைவடையும் வரையில் வடக்கிலே நிலைகொண்டுள்ள இராணுவத்தினரும் கடற்படையினரும் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும்.
இக்காலப் பகுதியில் இவ்விரு தரப்பினரும் முகாம்களை விட்டு வெளியில் வருவதற்கு அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சும் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgpy.html

Geen opmerkingen:

Een reactie posten