[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 11:29.38 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற எதிர்க்கட்சிகளுடன் மாத்திரமல்லாது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
அடுத்த வாரத்திற்குள் இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.
மூன்று எதிர்க்கட்சி எம்.பிக்களை அரசாங்கத்தில் இணைக்க முயற்சி
எதிர்க்கட்சியில் இருந்து மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்து கொள்வது தொடர்பிலான விசேட நடவடிக்கை ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திற்கு இழுக்கும் செயலில் பெயர் பெற்ற அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டுள்ளார்.
இந்த அமைச்சர் தெற்கு, கண்டி, குருணாகல் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. சுமார் 10 நாட்களுக்கு முன்னர் இருந்து இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.
2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் இவர்களை அரசாங்கத்துடன் இணைக்கும் தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjv4.html
மக்கள் எரிமலை வெடிக்கும்முன் மத்திய அரசு செயற்படட்டும்! கி.வீரமணி
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 12:10.36 PM GMT ]
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2011 நவம்பர் 28 அன்று இராமேஸ்வரத்தில் இருந்து 712 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன. அன்றிரவு கச்சதீவு அருகே நூற்றுக்கும் அதிகமான விசைப் படகுகள் மீன் பிடித்துக் கொண்டிருந்தன.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், தங்கச்சிமடத்தை சேர்ந்த கிளாடுவின் படகில் சென்ற மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வில்சன், அகஸ்டிஸ், லாங்நைட் ஆகியோரை சிறைப் பிடித்துச் சென்றனர்.
பிடித்துச்சென்ற போது இலங்கை கடற்படை சார்பில் எல்லை கடந்ததாக உங்களைக் கைது செய்து இலங்கை காவல்துறையிடம் ஒப்படைப்பதாகத்தான் தெரிவிக்கப்பட்டது,
இது குறித்து அகஸ்டிஸ் என்பவர் தமிழகத்தில் உள்ள தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிறை பிடித்துச் சென்ற மீனவர்கள் ஐவரும் நெடுந்தீவு கடற்படை முகாமில் இரண்டு நாட்கள் தங்க வைக்கப்பட்டனர்.
அப்போது அவர்களிடம் சிங்கள மொழியில் உள்ள சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் இலங்கை ஊர்க்காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனை அடுத்து ஊர்க்காவல் படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் மீதும் போதைப் பொருள் கடத்தி வந்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்ததாக கூறினார்கள்.
மீன்பிடிப் படகில் ஹெரோயின் போதைப் பொருள் கடத்திச் சென்று நடுக்கடலில் பைபர் கிளாஸ் படகில் காத்திருந்த இலங்கையைச் சேர்ந்த மூவரிடம் கொடுத்ததாகவும், எட்டுப் பேரும் போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும் இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டது.
இது தொடர்பாக கியூ பிரிவு பொலிசாரும், தமிழக உளவுத்துறையினரும் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணை முடிவில் இது பொய் வழக்குதான் என்று அரசுக்குத் தெரிவித்தனர்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பாக இலங்கை மூத்த வழக்குரைஞர்கள் வாதாடினார்கள் என்றாலும் பயனில்லை.
நரேந்திரமோடி பதவியேற்பு விழாவுக்கு வருவதற்குமுன் இப்பொழுது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஐவரையும் அன்று “விடுதலை” செய்வதாக அறிவித்தாரே மஹிந்த ராஜபக்ஷ - அது என்னாயிற்று?
(26.5.2014) பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி பங்கேற்கக் கூடாது - அவரை அழைக்கக் கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பைத் திசை மாற்ற ஏமாற்றிட அந்த அறிவிப்பா?
இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் மட்டுமல்ல - உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும் கடந்து மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அளவுக்கு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இந்திய அரசு தொடர்ந்து காட்டி வரும் அலட்சியப் போக்கு - எவ்வளவுப் பெரிய விபரீதமான விலையைக் கொடுக்க வைத்துள்ளது என்பதை நினைத்தால் வேதனையும், கோபமும் பீறிட்டுக் கிளம்புகின்றன.
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சதீவைத் தாரை வார்த்த இந்தியா இதற்குப் பதில் சொல்லியாகவேண்டும். இதற்குப் பிறகாவது கச்சதீவு பிரச்சினையில் மறு பரிசீலனைக்கு ஆட்பட வேண்டும்.
மத்தியில் ஆட்சி மாறியிருக்கலாம், அது பொருட்டல்ல, நம் நாட்டு மக்களுக்குத் மரண தண்டனை இன்னொரு நாட்டில் சட்ட விரோதமாக - நியாய விரோதமாக அளிக்கப்பட்டுள்ளது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
கேரள மீனவர் இருவரைக் கொன்ற இத்தாலியர் விஷயத்தில் இந்திய அரசு எப்படி நடந்து கொண்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே!
இந்தியப் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ இதுவரை வாய் திறக்கவில்லை. மேல் முறையீடு செய்யப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளதாம். இது போதுமானதல்ல.
எந்தளவுக்குக் கடுமையான அணுகுமுறை மேற்கொள்ளப்பட வேண்டுமோ, அந்த எல்லை வரைக்கும் செல்ல இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனை என்பது இந்திய அரசை அச்சுறுத்தவே என்பதில் ஐய்யமில்லை.
என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? தமிழ்நாடே கட்சிகளை மறந்து பொங்குமாக்கடலாக பொங்கி எழுந்து விட்டது - அரசு ரீதியாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
இன்னும் இராஜதந்திரம்தானா? வெளிநாட்டுப் பிரச்சினை என்ற நெளிவு சுளிவுக்குள் பதுங்கிக் கொள்ளப் போகிறதா? மக்கள் எரிமலை வெடிக்குமுன் மத்திய அரசு விரைந்து செயற்படட்டும்! செயற்படவும் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjv6.html
கிறிஸ் நோனிஸிற்கு ஜனாதிபதி ஆலோசகர் பதவி?
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 12:21.10 PM GMT ]
இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் கிறிஸ் நோனிஸுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதனையடுத்து அவரும் ஜனாதிபதி ஆலோசகர் பதவியை ஏற்றுக் கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ் நோனிஸ் பெரும்பாலும் ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்படலாம் என்று தெரிய வருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjv7.html
Geen opmerkingen:
Een reactie posten