கொத்மலை, டன்சினன் தொழிற்சாலைக்கு உட்பட்ட பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படுவதை தொடர்ந்து 92 குடும்பத்தினர் இடம்பெயர்ந்து தேயிலை தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
92 குடும்பங்களை சேர்ந்த 400 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர்.
பிரதி அமைச்சர் திகாம்பரத்தின் பணிப்புரைக்கிணங்க, மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் விஜயம் செய்து நிலைமையை ஆராய்ந்தார்.
அதன்போது தோட்டத்தில் உள்ள லயக் குடியிருப்புகள், தனிவீடுகள், புதிதாக அமைக்கப்பட்ட மாடிவீடுகள் போன்ற வீட்டின் நிலம் தாழ்ந்து காணப்பட்டமையும் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதையும் அவதானித்துள்ளனர்.
இந்த மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ள இடத்திற்கு விஜயம் செய்த கட்டிட ஆய்வு பிரிவினர், பரிசோதனைகள் செய்த பின் மேற்படி இடம் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.சிறிதரன்
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjv5.html
Geen opmerkingen:
Een reactie posten