[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 02:59.46 AM GMT ]
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளா சந்திப்பில் நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்திற்கு அமைய நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே இன்றைக்கும் ஆளும் கட்சியின் நிலைப்பாடாக அமைந்துள்ளது.
இது தொடர்பில் சந்திக்கு சந்தி சென்று பொய்யாக பிரச்சாரம் செய்யாது, நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்.
அரசியல் அமைப்பில் திருத்தங்களை செய்யும் நோக்கில் 2013ம் ஆண்டில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் உரிய பதிலளிக்கவில்லை.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை 13ம் திருத்தச் சட்டம் மற்றும் தேர்தல் முறைமை போன்ற விடயங்கள் குறித்து பேசி இறுதித் தீர்மானங்களை எடுக்க முடியும் என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhr3.html
நீதிமன்றம் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது: ஜோசப் மைக்கல் பெரோரா
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 03:03.58 AM GMT ]
பொலிஸார் மற்றும் நீதிமன்றம் குறித்த மக்களின் நம்பிக்கை பழுதடைந்துள்ளது. நீதியின் ஆளுமை வலுவிழந்துள்ளது. நல்லாட்சிக்கான பண்புகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் ஆளும் கட்சி, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது.
ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு மட்டும் மோட்டார் சைக்கிள் வழங்குவதனை நல்லாட்சியாக கருதப்பட முடியாது.
சிரேஸ்ட அமைச்சர்கள் மக்களுக்கு சேவையாற்ற பணம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. சிரேஸ்ட அமைச்சர்களுக்கு கடமைகளும் வழங்கப்படவில்லை.
நாட்டில் நல்லாட்சி நிலவுகின்றதா என்பது குறித்து மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது என ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhr4.html
Geen opmerkingen:
Een reactie posten