தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

அதிருப்தியில் கீதா குமாரசிங்க: அரசாங்கத்தை விட்டு விலகுவாரா?

அமைச்சர்கள் தப்பி ஓட ஆயத்தம்!
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 06:57.01 AM GMT ]
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் சில முக்கிய அமைச்சர்கள் நாட்டைவிட்டு வெளியேற முயற்சிப்பதாக தெரியவருகின்றது. 
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் தளம்பல் நிலையில் யார் பக்கமும் சாராமல் இருக்க இந்த பயணங்கள் உதவும் எனக் கூறப்படுகின்றது.
ஏற்கனவே அமைச்சர் நவீன் திசாநாயக்க நாட்டை விட்டு வெளியேறியிருப்பதால், நுவரேலிய மாவட்ட அமைப்பாளராக அமைச்சர் சி.பி ரட்நாயக்காவை ஆளும் கட்சி நியமித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYeu7.html
அதிருப்தியில் கீதா குமாரசிங்க: அரசாங்கத்தை விட்டு விலகுவாரா?
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 07:22.13 AM GMT ]
மாகாண சபை உறுப்பினர் என்ற முறையில் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவையை செய்ய முடியாதுள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தென் மாகாண சபை உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளர்.
தென் மாகாண சபை கட்டிடத்தில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மாகாண சபை உறுப்பினர் என்ற முறையில் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்ய முடியாத காரணத்தினால் நான் திருப்தியின்றி இருக்கின்றேன்.
பணம் சம்பாதிக்க நான் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்தேன்.
ஆனால், நாங்கள் மாகாண சபை  கூட்டத்திற்கு வந்து தேனீர் அருந்தி விட்டு வீட்டுக்கு போகிறோம்.
எதனை செய்யாமல் வாங்கும் சம்பளமும் பாவமானது.மாகாண சபை வெறும் வெள்ளை யானை.
காலம் வீணாக போவது குறித்து நான் கவலையடைகிறேன்.
மாகாண சபைக்குள் ஆச்சரியமான மாஃபியா இருக்கின்றது.
உறுப்பினராக தெரிவான நாளில் இருந்து எனக்கு எந்த பணியும் வழங்கப்படவில்லை எனவும் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYev2.html

Geen opmerkingen:

Een reactie posten