ஆமியின் அடாவடிக்குள் யாழ். பல்கலைக் கழகத்தில் புலிகளின் தலைவர் பிறந்தநாள்….
அதுமட்டுமின்றி விடுதிகளில் உள்ள மாணவர்களையும் இன்று மாலைக்குள் வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினத்தினை நாளைய தினம் பல்கலைக்கழகத்திலே அல்லது விடுதிகளிலே மாணவர்கள் கொண்டாடலாம் என்ற அச்சத்திலே இந்த திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதேவேளை நேற்று இரவு முதல் யாழ்.பல்கலைக்கழக சூழலினை சுற்றி இராணுவத்தினர் கவச வாகனங்களுடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒருவாரமாக பல்கலைக்கழக சூழலில் இராணுவத்தினரும், பொலிஸாரும் நிலை கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று இரவு முதல் அதிகளவு இராணுவத்தினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டதுடன் இரண்டு கவச வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். பல்கலைக் கழகத்தில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழ் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 60 வது பிறந்த தின நிகழ்வு இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களினால் காலை அகவணக்கத்தின் ஆரம்பத்துடன் கொண்டாடப்பட்டதோடு தலைவர் பிரபாகரனின் தமிழ் தேசிய வாசகங்களும் அங்காங்கே ஒட்டி தமது உணர்வை தெரியப்படுத்தினர்.
ஆனாலும் இன்று அதன் பிற்பாடு இன்றிலிருந்து எதிர்வரும் 01.12.2014 வரை பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் உள்நுழைய தடை செய்யப்பட்டிருப்பதோடு பல்கலைக்கழக விடுதிகளில் இருந்து இன்று மாலைக்குள் அனைத்து மாணவர்களையும் வெளியேறுமாறும் பல்கலை நிர்வாகம் பணித்துள்ளது.
அதுமட்டுமின்றி பல்கலைக்கழக முன் பிரதான ராமநாதன் வீதி மற்றும் குமாரசுவாமி வீதி எங்கும் இரவு மற்றும் அதிகாலை வரையிலும் ராணுவத்தினர் சிவில் உடையிலும் , தமது வாகனங்களில் ரோந்து நடைவடிக்ககளிலும் ஈடு பட்டிருப்பதை காண கூடியதாக இருந்தது.
http://www.jvpnews.com/srilanka/88041.html
ஸ்ரீகொத்தாவில் மக்கள் வெள்ளம்
http://www.jvpnews.com/srilanka/88050.html
யாழ். பல்கலையைச் சுற்றி இராணுவம்
பவள், கவச வாகனங்கள் மூலம் கொண்டு இறக்கப்பட்ட இராணுவத்தினர், அவ்வழியாக வாகனங்களில் சென்றோரை சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் மாவீரர் தினக் கொண்டாட்டங்கள் என்பன பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதை தடுக்கும் நோக்குடன் இராணுவத்தினர் இவ்வாறு குவிக்கப்பட்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/88053.html
Geen opmerkingen:
Een reactie posten