[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 07:22.13 AM GMT ]
தென் மாகாண சபை கட்டிடத்தில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மாகாண சபை உறுப்பினர் என்ற முறையில் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்ய முடியாத காரணத்தினால் நான் திருப்தியின்றி இருக்கின்றேன்.
பணம் சம்பாதிக்க நான் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்தேன்.
ஆனால், நாங்கள் மாகாண சபை கூட்டத்திற்கு வந்து தேனீர் அருந்தி விட்டு வீட்டுக்கு போகிறோம்.
எதனை செய்யாமல் வாங்கும் சம்பளமும் பாவமானது.மாகாண சபை வெறும் வெள்ளை யானை.
காலம் வீணாக போவது குறித்து நான் கவலையடைகிறேன்.
மாகாண சபைக்குள் ஆச்சரியமான மாஃபியா இருக்கின்றது.
உறுப்பினராக தெரிவான நாளில் இருந்து எனக்கு எந்த பணியும் வழங்கப்படவில்லை எனவும் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYev2.html
பயங்கரவாதம் சவாலானது: நேபாளத்தில் மஹிந்த
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 07:19.29 AM GMT ]
நேபாளம் காத்மண்டுவில் நடைபெற்று கொண்டிருக்கின்ற 18ஆவது சார்க் மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYev1.html
மாவீரர் தின அனுட்டானங்களுக்கு இடமில்லை: இராணுவத் தளபதி
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 07:18.47 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர் நீத்த போராளிகளை நினைவு கூர்ந்து நடத்தப்படும் மாவீருர் தினத்திற்கு இடமில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறைவின் பின்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவம், கடற்படை, வான்படை, பொலிஸ், சிவில்ப் படைப்பிரிவு ஆகியவற்றின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுகின்றது.
எனவே மீளவும் நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்பட மாட்டாது என இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாவீரர் தின அனுட்டானங்களை தடுக்கும் நோக்கில் வடக்கில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYev0.html
Geen opmerkingen:
Een reactie posten