[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 06:05.28 AM GMT ]
கடந்த 5 ஆம் திகதி அவசரமாக சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுச் சென்ற மங்கள சமரவீர இன்றும் சிங்கப்பூரில் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறுகிய கால பயணம் ஒன்றை மேற்கொண்டு மங்கள இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும் எனினும் இன்று பிற்பகல் சிங்கப்பூரில் நடைபெற விசேட அரசியல் பேச்சுவார்த்தையின் பின் இங்கிலாந்து பயணம் பற்றி தீர்மானிக்கப்பாடும் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதேவேளை ஜனநாயகக் கட்சியின் தலைவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று மதியம் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
மருத்துவச் சிகிச்சைக்காக பொன்சேகா இவ்வாறு சிங்கப்பூர் செல்கிறார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXet1.html
ஆவணங்களை எரித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது- வடிகான்களை அகலமாக்க நடவடிக்கை: 26 இலட்சம் நிதி ஒதுக்கீடு
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 06:16.21 AM GMT ]
பொலிஸ் காவலரணின் விசேட அலுவலகத்தில் இருந்த முக்கியமான ஆவணங்கள் சிலவற்றை தீயிட்டு அழித்த சம்பவம் தொடர்பாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில முக்கிய விசாரணைகள் தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் அந்த ஆவணங்களில் இருந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஹொரணை கொக்குனுவிட்ட மற்றும் இஹல புளியங்குளம் ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடிகான்களை அகலமாக்க நடவடிக்கை: 26 இலட்சம் நிதி ஒதுக்கீடு
வடிகான் அகலம்நோர்வூட் நகரில் பால் சேகரிப்பு நிலைய பகுதியிலிருந்து கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் செல்லும் 3 வடிக்கான்களை பெக்கோ இயந்திரங்களை பயன்படுத்தி அகலப்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக 26 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டு செய்யப்பட்டு வேலைதிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுக்கோளின் படி அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்த கான்களை அகலமாக்காத காரணத்தால் பல தடவைகள் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் உட்புகுந்ததால் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமாகியது குறிப்பிடதக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXet2.html
மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இந்தியாவுக்கு மாற்ற நடவடிக்கை: சு. சுவாமி
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 06:20.39 AM GMT ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதியும் பேசிக்கொண்டதற்கிணங்க இவர்களை இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மீனவர் விவகாரம் குறித்து இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் என்றும் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கை நீதிமன்றில் மரணதண்டனை பெற்றுள்ள இந்திய மீனவர்கள் ஐவரையும் இந்தியச் சிறைக்கு மாற்றுவதற்கு மஹிந்த இணங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஐவரும், போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 30ஆம் திகதி, ஐவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி:
http://www.tamilwin.com/show-RUmszBSUKXet3.html
Geen opmerkingen:
Een reactie posten