தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 november 2014

நிறைவேற்று அதிகார முறையை ரத்து செய்வோம்: எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் மாநாடு ஆரம்பம்

மஹிந்தவுக்கு எதிரான மாபெரும் கூட்டணி: இன்று முதல் கூட்டம்
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 04:29.34 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக மாபெரும் கூட்டணிக்கான எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
17வது திருத்தச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல், சுயாதீன ஆணைக்குழுக்களை நடைமுறைக்கு  கொண்டு வருதல் ஆகிய பொது இணக்கப்பாட்டின் கீழ் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளக்கமளிப்பதற்கான எதிர்க்கட்சி கூட்டணியின் ஊடக மாநாடு ஒன்று இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர், தூய்மையான நாளை அமைப்பின் தலைவர் ரத்ன தேரர், ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவின் சார்பில் ஜயந்த கெடகொட ஆகியோருடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஊடக மாநாட்டில் தனது கட்சியின் சார்பில் சரத் பொன்சேகாவே கலந்து கொள்வதாக இருந்த போதிலும், மருத்துவ சிகிச்சை முடிந்து அவர் இன்னும் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பவில்லை.
அதன் காரணமாக ஜயந்த கெடகொட கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த ஊடக மாநாடு தொடர்பான உளவுத் தகவல்களை அடுத்து அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் அவசர கலந்துரையாடல் ஒன்று அலரி மாளிகையில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXes6.html
அத்துரலிய ரத்த தேரரின் கூட்டத்தில் ஜே.வி.பி கலந்து கொள்ளும்: ரில்வின் சில்வா
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 05:06.44 AM GMT ]
அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் நாளை நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி கலந்துகொள்ளும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஹெல உறுமய கட்சியுடன் இதற்கு முன்னர் நடைபெற்ற பல்வேறு பேச்சுவார்த்தைகளில் எமது அமைப்பு கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், இந்தக் கூட்டத்துக்கு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் எமது ஆதரவாளர்களைக் கலந்துகொள்ளச் செய்வதென தீர்மானித்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் வேண்டாம். ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்துவிடு எனும் கருப்பொருளில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் எதிர்க் கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாக தூய்மையான நாளை எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXes7.html
ஆசிய பொருளாதார மாநாடு இன்று: ஐ எஸ் கிளர்ச்சியாளர்கள் பற்றி கலந்துரையாடல்
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 05:26.40 AM GMT ]
ஆசிய பசுபிக் பொருளாதார மாநாடு இன்று பீஜிங்கில் நடைபெறவுள்ளது. இதற்காக உலகத் தலைவர்கள் பிஜிங் நோக்கி பயணமாகியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பொட் உள்ளிட்ட தலைவர்கள் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர்.
இதன்போது தற்போது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஐ எஸ் கிளர்ச்சியாளர்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க துருப்பினர்கள் வெளியேறியுள்ளமை மற்றும் யுக்ரேன் விவகாரங்களும் இன்று கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை மலேஷிய விமானம் யுக்ரேன் எல்லைப்பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டமை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் சீன பிரதமருடனும் அமெரிக்க ஜனாதியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXety.html
ராஜபக்ஷ அரசை விரட்டியடிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது: நிமால் சிறிபால டி சில்வா
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 05:45.22 AM GMT ]
ராஜபக்ஷ அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் எனக் கூறுபவர்களுக்கு தற்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கெக்கிரவா மாடாடுகம பிரதேசத்தில் நடைபெற்ற மகாவலி காணி உறுதிகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்கள் வழங்கிய வாக்குகளுக்கு அரசாங்கமோ ஜனாதிபதியோ கடனாளிகள் அல்ல. மக்களின் மகிழ்ச்சி எமது சந்தேஷம்.
30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பிளவுப்படாத ஐக்கியமான நாடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXetz.html
நிறைவேற்று அதிகார முறையை ரத்து செய்வோம்: எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் மாநாடு ஆரம்பம்
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 05:50.14 AM GMT ]
எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ள ஊடகவியாலாளர் மாநாடு பிட்டகோட்டேயில் தற்போது நடைபெற்று வருகின்றது.
மாதுலுவாவே சோபித்த தேரருடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூண ரணதுங்க, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வோம் என்ற தொனிப்பொருளில் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட மாதுலுவாவே சோபித்த தேரர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ரத்து செய்வதற்காகவும், 17ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீள வலுவடைய செய்வதற்காகவும் தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டு வருவதற்காகவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிடுகையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை தற்போதைய அரசாங்கத்தின் கீழேயே மேற்கொள்ள முடியுமாயின், அதனை நிறைவேற்றுவதே மிகவும் உகந்தது என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXet0.html

Geen opmerkingen:

Een reactie posten