[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 06:21.06 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை வகித்து வரும் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் எனவும் இவர் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருவதாகவும் பேசப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவாளர்கள் பலர் இந்த அமைச்சரை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாது இந்த அமைச்சர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் பல எதிர்க்கட்சிகள் அவருக்கு ஆதரவு வழங்க விருப்பம் வெளியிட்டுள்ளன.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரின் பெரும்பான்மையானவர்கள் குறித்த அமைச்சருக்கு ஆதரவு வழங்குவது பற்றி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக நம்பிக்கையான தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இது சம்பந்தமாக இதுவரை இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பதுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
பொது வேட்பாளருக்கு முழு ஆதரவு: அர்ஜூன ரணதுங்க
மாதுளுவாவே சோபித தேரர் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு தனது முழு ஆதரவு வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் நிறுத்தும் பொது வேட்பாளரை வெற்றி பெற செய்ய தேவையான ஆதரவு வழங்கப்படும்.
தோல்வி ஏற்றுக்கொண்டுள்ள அரசாங்கத்தின் ஊழல் அமைச்சர்களே இந்த பொது வேலைத்திட்டத்திற்கு எதிராக கூச்சலிடுவதாகவும் இது எதிர்க்கட்சிகள் பெற்ற மிகப் பெரிய வெற்றி எனவும் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
கோட்டே சோலிஸ் ஹொட்டலில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXet4.html
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க வேண்டும்!- பசில் ராஜபக்ச அழைப்பு
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 06:52.09 AM GMT ]
அந்த வகையில் தனது நேர்மையை வெளிக்காட்டுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை எந்த வழியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எந்தவொரு உதவியையும் செய்யவில்லை. அரசியல் ரீதியாகவோ, இராஜதந்திர ரீதியாகவோ கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு இதுவரை உதவியதில்லை.
எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குமென்று நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாக பரவலாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் பசில் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவை வழங்குவதன் மூலம் தமது நேர்மையை வெளிக்காட்டுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு சாதகமான ஒரு சிறந்த தீர்மானத்தை எடுக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
கடந்த காலம் முழுவதும் த.தே. கூட்டமைப்பு தவறான தீர்மானங்களையே எடுத்தது. ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுமே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு கூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். அந்த சந்தர்ப்பத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்க வரலாற்று ரீதியான வெற்றியை பெற்றுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXet5.html
Geen opmerkingen:
Een reactie posten