தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 november 2014

வடமாகாண சபையின் 19 ஆவது அமர்வு: ஐஸ்கிறீம் உற்பத்தி தடைக்கு எதிராக சூடான வாதம்!

ஜனாதிபதி தேர்தல் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை!- ஜே.வி.பி.
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 02:55.58 AM GMT ]
ஜனாதிபதி தேர்தல் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஜே.வி.பி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மிகவும் தீர்மானமிக்க பல்வேறு சம்பவங்கள் இடம்பெறவுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் சட்டவிரோதமான முறையில் நடத்தப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிளவடைந்து துண்டுகளாக சிதைவடையக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாம் இது குறித்து இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.
பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாää பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதா அல்லது தனியாக வேட்பாளா ஓருவரை நிறுத்துவதா என்ற தீர்மானத்தை ஜே.வி.பி கட்சி இதுவைரயில் எடுக்கவில்லை.
எதிhவரும் நாட்களில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என ரில்வின் சில்வா நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhr2.html

வடமாகாண சபையின் 19 ஆவது அமர்வு: ஐஸ்கிறீம் உற்பத்தி தடைக்கு எதிராக சூடான வாதம்
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 02:51.45 AM GMT ]
யாழ்.மாவட்டத்தில் ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் மீது போடப்பட்டிருக்கும் தடை என்ன அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என வடமாகாணசபையின் 19வது அமர்வில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியினர் இணைந்து கேள்வி எழுப்பியிருப்பதுடன் மேற்படி தடை தொடர்பில் முழுமையான ஆய்வு நடத்தப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஐஸ்கிறீம்களில் மல தொற்று உள்ளதாக குற்றம் சாட்டி 59 நிறுவனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் எஸ். தவராசா முன்மொழிந்த கவனயீர்ப்பு பிரரேரணையின் போதே மேற்படி கோரிக்கை ஒன்றிணைந்து விடுக்கப்பட்டிருக்கின்றது.
மேற்படி பிரேரணை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிடுகையில்,
ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் மீது 9பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தியிருக்கின்றனர்.
இது என்ன அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது? அவ்வாறு சோதனை செய்தவர்கள் அங்கிருந்த உற்பத்திகள் மீது மண்ணை போட்டும், எண்ணை ஊற்றியும்,பரிசோதனை செய்ததாக கூறியிருக்கின்றார்கள்.
இதனால் மூவாயிரம் தொழிலாளிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் அதுமட்டுமல்லாது 20 ஆயிரம் வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 59 நிறுவனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில்  38, சிறிய நிறுவனங்கள். எனவே இந்த இடைவெளியை பாவித்து கொழும்பில் உற்பத்தி செய்யப்படும்,ஐஸ்கிறீம் நிறுவனம் ஒன்று யாழ்.குடாநாட்டுக்குள் நுழைந்து தங்கள் உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு தொடங்கியிருக்கின்றது.
எனவே இது ஒட்டுமொத்தமாக வடமாகாணசபை அதிகாரிகள் செய்த அநியாயமாகும்.
மேலும் மேற்படி ஆய்வினை நடத்தியவர்கள் தங்கள் ஆய்வு தொடர்பாக வழங்கிய அறிக்கையில்,வதிவிடம், படுக்கையறை, சமையலறை போன்றன உற்பத்தி நிலையத்திற்கு அருகில் காணப்பட்டமை, தரை இலகுவில் கழுவ முடியாமல் காணப்பட்டமை, கூரை ஓடுகள் உடைந்து ஒழுக்கு காணப்பட்டமை, மின் கம்பிகள் அறுந்து குளிரூட்டிகள் செயலிழந்திருந்தமை போன்ற காரணங்களையே சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
அதில் எந்தவொரு இடத்திலும்,மல தொற்று என்னும் விடயம் சுட்டிக்காட்டப்படவில்லை.
மேலும் ஐஸ்கிறீம் உற்பத்தியில் மட்டும் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படுவதன் நோக்கம் என்ன? என கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து மாகாணசபையின் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் குணசீலன் பேசுகையில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லா நிறுவனங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது எதற்காக?மேலும் உற்பத்தி நிறுவனங்களுக்குள் நுழைந்து சோதனை நடத்தியவர்கள் உற்பத்தியாளர்களுக்கு கால அவகாசம் வழங்கியிருக்கவேண்டும்.
அதற்கு மேலதிகமாக சோதனையிட்டவர்களுக்கு உற்பத்தி நிலையங்களை மூடுவதற்கான அதிகாரம் கிடையாது.
மேலும் மல தொற்று உள்ளமையினை யாரும் கண்ணால் பார்க்க முடியாது.
கொழும்பில் உள்ள எம்.ஆர்.ஐ என்ற நிறுவனத்திற்கு மாதிரிகளை அனுப்பி அதன் அறிக்கை பெற்று பின்னர் நீதிமன்றம் ஊடாகவே நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால் இவை எவையும் பின்பற்றப்படாமல் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை பலத்த சந்தேகத்தை உருவாக்குகின்றது என கூறினார்.
பின்னர் மாகாணசபை உறுப்பினர் சர்வவேஷ்வரன் கருத்து கூறுகையில்,இந்த விடயம் அதிகளவில் சந்தேகங்களை உருவாக்குகின்றது. மேலும் பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்த முற்பட்டபோது அவ்வாறான தடை நீக்கப்பட்டதாக பாவனை செய்யப்படுகின்றது.எனவே இதில் பலத்த சந்தேகங்கள் எமக்கு உள்ளதாக கூறினார்.
அதன் பின்னர் மாகாணசபை உறுப்பினர் சிவமோகன் கருத்து தெரிவிக்கையில், இந்த விடயத்தில் சுகாதார அமைச்சின் சில தவறுகளும் இருக்கின்றன.மேலும் ஈகோலின் என்ற கிருமி மலத்திலும் இருக்கும் நல்ல நீரிலும் இருக்கும். யாழ்ப்பாணத்தில் எங்கே தண்ணீர் அள்ளினாலும் அந்தக் கிருமி இருக்கும். எனவே இந்த விடயத்தில் அதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றது என கூறினார்.
தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் கருத்து தெரிவிக்கையில்,ஐஸ்கிறீம் விடயத்தில் அரசியல் வியாபாரம் நடக்கிறதா? என கேள்வி எழுப்பியதுடன், மேற்படி உற்பத்தி நிலையங்களை சோதனையிட்டவர்கள் யாருடைய தூண்டுதலின் பெயரில் அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது கண்டறியப்படவேண்டும்.
அவ்வாறு அவர்கள் பிழையாக நடந்திருந்தால் சட்டத்தினால் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து மாகாண மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் கருத்துக் கூறுகையில், இன்று அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்த சுகாதார அதிகாரிகள் இதுவரை காலமும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? எனவே இது விடயத்தில் முழுமையான ஆய்வு நடத்தப்படவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhr1.html


Geen opmerkingen:

Een reactie posten