தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 november 2014

அத்த(உண்மை) என்ற பத்திரிகையை விநியோகம் செய்யத் தடை



கொஸ்லாந்தையில் தொடரும் மீட்புப் பணி! இன்றும் இரு சடலங்கள் மீட்பு
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 10:44.22 AM GMT ]
கொஸ்லாந்தை, மீரியபெத்தயில் ஏற்பட்ட மண்சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் பத்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த இருவரின் சடலங்கள் இன்று மதியம் மீட்கப்பட்டதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
54 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமும் பிள்ளையொன்றின் சடலமும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலங்கள் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மண்சரிவினால் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக, பாதிக்கப்பட்ட மக்களின் உதவியை நாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகளின் போது மீரியபெத்த கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் உதவியை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா் குறிப்பிடுகின்றார்.
கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவில் மீட்கப்பட்ட சடலங்களில், அடையாளம் காணப்படாத சடலங்களை டி.என்.ஏ (DNA) பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இதில் தற்போது இருவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 14 பேர் சரியான தகவல்களையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவிலிருந்து மீட்கப்பட்ட அனைத்து உடல்களும் அடையாளம் காண்பதே டீ.என்.ஏ பரிசோதனை முன்னெடுக்கப்படுவதன் நோக்கமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மீரியபெத்தை மண்சரிவில் புதையுண்டவர்களில் 11 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் 27 பேர் காணாமல் போயுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படுவதோடு, உயிரிழந்தமைக்கான தெளிவான காரணங்கள் குறிப்பிடப்பட்டு மரண சான்றிதழ் வழங்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfq3.html
அத்த(உண்மை) என்ற பத்திரிகையை விநியோகம் செய்யத் தடை
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 10:48.31 AM GMT ]
எதிர்வரும் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரசூரமாகவிருந்த அத்த என்ற பத்திரிகையை விநியோகம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியினால் இந்த பத்திரிகை பிரதி ஞாயிறு தோறும் பிரசூரிக்கப்படுகிறது.
இந்த வாரம் அச்சிடப்பட்ட பத்திரிகையானது எதிர்வரும் 9ம் திகதி விநியோகம் செய்யப்படவிருந்தது.
எனினும் இன்று காலை குறித்த பத்திரகை நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
விநியோகம் செய்யப்படவிருந்த பத்திரிகைகளை கைப்பற்றி ஒரு அறைவில் வைத்து பூட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அதிகாரிகளினால் இவ்வாறு பத்திரிகை நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
இவ்வார பிரசுரத்தில் அரசாங்கத்திற்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கருத்தக்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் திஸ்ஸ வித்தாரணவை பத்திரிகையில் கடுமையான விமர்சனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பத்திரிகை விநியோகம் தடை செய்யப்பட்டமைக்கு சில ஊடக நிறுவனங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfq4.html

Geen opmerkingen:

Een reactie posten