உலகெங்கும் ஒவ்வொரு நிமிடமும் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது, புதிய கண்டுபிடிப்புகள் அதன் எதிரொலியால் புதுப்புது நோய்கள், புதிய சிந்தனைகள், திடீர் காலநிலை மாற்றம் என்று எல்லாவிதமான செயற்பாடுகளும் ஒவ்வொரு வினாடியும் மாற்றம் அடைந்தே செல்லுகின்றது.
இந்த நிலையில் கடந்த 200 வருடங்களாக மலையகத்தில் வாழ்ந்து வரும் இந்தியா வம்சாவளி மக்கள் மரணங்களையும் அவர்களது வழித்தோன்றல்கள் வாழும் லயன் அறை சூழ்நிலை மட்டுமே இன்றும் மாறாத விதமாக இருக்கின்றது.
ஆம், கிராமங்களில் மாற்றங்கள், நகரமயமாக்கல், போக்குவரத்து மாற்றம், தொழிநுட்பத்தில் மாற்றம் காணும் இந்த காலகட்டத்தில் மாற்றம் காணாது வாழும் இந்த இந்திய வம்சாவளி மக்கள் என்ன பாவம் செய்தார்கள் என்பது நாம் சிந்திக்க வேண்டும்.
மேற்கண்ட தலையங்கத்தில் நான் இந்த செய்தியை தமிழினத்திற்கு சமர்ப்பிக்கின்றேன்.
நடந்தது சரித்திரம் நடப்பது நிஜம், நடக்க போவது சுபீட்சம் என்ற நம்பிக்கையே நம் எல்லோரையும் ஒவ்வொரு நாளும் வாழவைக்கின்றது.
இந்த நம்பிக்கையை எல்லோரும் தங்களுக்காக செயல்படுத்தினால் மாற்றம் மற்றவர்களுக்காக செயல்படுத்தினால் ஏமாற்றம் இது தான் மலையக மக்களிடம் இருக்கின்ற குறைபாடு என எண்ணலாம்.
இந்த குறைபாடுகளே இன்றும் இவர்கள் பிறரை நம்பி வாழும் கொள்கையாக்கப்பட்டதற்கு காரணம்.
இம்மக்கள் கடும் உழைப்பாளிகள் காற்று, மழை, வெயில் என்று பாராது மற்றவர்களை வாழ வைத்தாலும் தங்கள் வாழ்வதற்கு இதுவரை சொந்தமான வீடு இல்லாதவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களின் மனதில் ஒருவர் மீது நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் அவர் தான் இவர்களுக்கு எல்லாமே என்பது இவர்களின் நிலைப்பாடு.
இந்த நிலைக்கு, ஆரம்பகாலத்தில் இவர்களை இலங்கைக்கு அழைத்து வந்த கங்காணிமார்கள் முக்கிய காரணம்.
அவர்களை நம்பியவர்கள், அந்த கங்காணிமார்கள் ஆரம்ப காலத்தில் இவர்களை ஏமாற்றி இவர்களின் உழைப்பில் வருகின்ற வருமானத்தின் பெரும் பகுதியை கொள்ளை அடித்தார்கள்.
அதை அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு (தென் இந்தியா) எடுத்து சென்று வீடு, நிலங்கள் வாங்கி தங்களுடைய சுகபோக வாழ்வை வளப்படுத்தி கொண்டிருந்தார்கள்.
அது மாத்திரம் அல்லாது அவர்களுடைய பிள்ளைகள் சிறந்த பாடசாலைகளுக்கு சென்று கல்வி கற்றார்கள். கொழும்பு, கண்டி ஏன் தென் இந்தியாவுக்கும் சென்று கல்வி கற்றார்கள்.
ஆனால் தோட்ட தொழிலாளிகளின் பிள்ளைகளை மாத்திரம் ,அவர்கள் வேலை செய்யும் இடத்திலே தகர கொண்டில்களில் ஐந்தாம் தரம் வரை அமைக்கப்பட்ட தோட்ட பாடசாலைகளுக்கு அனுப்பினார்கள்.
அதற்கு மேல் அவர்களை படிக்க வைக்க அன்றே தடை விதித்தவர்கள் இந்த கங்காணிமார்கள்.
அதற்கு மேல் அவர்களை படிக்க வைக்க அன்றே தடை விதித்தவர்கள் இந்த கங்காணிமார்கள்.
அதை தொடர்ந்து அவர்களின் பிள்ளைகள் அந்த தொழிலுக்கு நியமிக்கப்பட்ட போது அவர்களின் தொழில் நிலை தொழிலாளர் நல உத்தியோகம் (L.W.O) ,இவர்கள் ஓரளவு ஆங்கில கல்வியுடையவர்களாகவும், வசதி படைத்தவர்களாகவும் இருந்த காரணத்தால் இந்த தேயிலை தோட்டங்களில் ஏற்படுகின்ற குமாஸ்தா, கணக்கப்பிள்ளை போன்ற தொழில்களுக்கு இவர்களின் உறவினர்களையே நியமித்தார்கள். அவர்களுக்கு ஆங்கிலேய தோட்ட நிர்வாகிகளிடம் அதிக மதிப்பும் ,மரியாதையும் இருந்தது.
ஆகவே அவர்களே அந்த தோட்டத்தை நடாத்துபவர்களாக இருந்தார்கள் தொழிலாளி அதே நிலையிலேயே இருப்பதை இவர்கள் உறுதி செய்து கொள்ள கங்காணிமார்களுக்கு ஆதரவாக ஏனையவர்கள் இருந்தார்கள்.
இதை தொடர்ந்து இந்த கங்காணி வழித் தோன்றல்களின் பிள்ளைகளையும் அதே வழியில் கல்வி கற்றவர்களாக மேலோங்கி வரும் போது பெரும்பான்மை தோட்ட தொழிலாளர்களுக்கு இடையிலும் மாற்றங்கள் வரத்தான் செய்தது.
ஆனால் மாறியதுதான் விந்தை? நாம் குறிப்பிட்ட தலையங்கத்திற்கும் நாம் எழுதிய விடயங்களும் இதை வாசிக்கின்றவர்களுக்கு மாற்றமாகவே தோன்றும்.
ஆனால் தொடர்பு உண்டு பொறுத்திருந்து பாருங்கள் அடுத்த தொடர் திங்கள் அன்று ( 10.11.2014) ஆரம்பமாகும்.
மகா
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfq6.html
Geen opmerkingen:
Een reactie posten