தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 november 2014

பாலியல் வன்முறைக்கு எதிராக யாழில் போராட்டம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் கைது
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 06:56.15 AM GMT ]
கொலை, கொள்ளை மற்றும் தீவைப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், கடந்த ஒன்பது வருடங்களாக தேடப்பட்டு, பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் சங்கர் அணியைச் சேர்ந்த ராசா என்றழைக்கப்பட்ட சின்னவன் மணிமாறன் என்பவரையே தாம் கைது செய்திருப்பதாக, கைது நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த ஏறாவூர் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரி ஆர். புருஷோத்தமன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூர் தளவாய்க் கிராமத்தைச் சேர்ந்த இச்சந்தேக நபர், 2006 மற்றும் 2007ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், கொலை, கொள்ளை மற்றும் தீவைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், அழைப்பு விடுக்கப்பட்டும் விசாரணைகளுக்கு சமூகமளிக்காததால் அவருக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இந்த சந்தேக நபர், ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பொலிஸ் பிரிவிலுள்ள அட்டப்பள்ளம் அல்லிமுல்லைச் சந்தி எனுமிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
மாம்பழ வியாபாரிகள் போல் தாங்கள் மாறுவேடத்தில் இருந்தே சந்தேக நபரைக் கைது செய்ததாக பொலிஸ் அதிகாரி புருஷோத்தமன் மேலும் கூறினார்.
பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனின் பணிப்புரைக்கமைவாக, ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்கிரமவின் வழிகாட்டலுடன், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளான எம்.ஏ.சி தாஹிர் 64931, ஆர்.புருஷோத்தமன் 73595 ஆகியோர் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மேற்படி சந்தேக நபரைக் கைது செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.
சந்தேக நபரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவிருப்பதாகவும் ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXet6.html

பாலியல் வன்முறைக்கு எதிராக யாழில் போராட்டம்
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 07:07.56 AM GMT ]
யாழில் வடக்கு,கிழக்கு மாகாண சமூக மக்கள் ஒன்றிணைந்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கக் கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
இன்று காலை 8.30 மணியளவில் யாழ்.வேம்படி சந்தியில் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
மேலும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் அரியாலை முள்ளி பிரதேசத்தில் 18வயது யுவதி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும், இதே போல பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என கோரியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
பெண்கள் இனியாவது பாதுகாக்கப்பட வேண்டும் யாரும் பெண்கள் மீது கைவைப்பதை நிறுத்த வேண்டும். எந்த பலம் வாய்ந்த சக்தியாக இருந்தாலும் நாம் அவர்களுக்கு எதிராக குரல் கொடுப்போம் எனவும் அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாதி, இன பேதமின்றி பெண்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துவோம், பாலியல் பாலாத்காரத்துக்கெதிரான ஆண்களின் குரலை உயர்த்துவோம், வருங்காலத்தை மாற்றியமைக்கும் சிறுமியர் நாம் இருட்டறையில் தள்ளாதே, போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை வைத்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXet7.html

Geen opmerkingen:

Een reactie posten