தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 november 2014

மாவீரர் தின சுவரொட்டிகளுடன் யாழில் ஒருவர் கைது!



மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளில் பாப்பரசரின் உருவப்படம்! கத்தோலிக்க அமைப்புக்கள் கண்டனம்
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 04:05.13 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளில் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ்ஸின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளமையை கத்தோலிக்க தலைவர்களும் தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்டித்துள்ளனர்.
இந்த சுவரொட்டிகள்; கொழும்பில் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த சுவரொட்டிகளை யார் ஒட்டியது என்பது தெரியவரவில்லை.
இந்தநிலையில் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை கத்தோலிக்க தலைவர்களும் இந்த சுவரொட்டி விடயம் தொடர்பில் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் என்று தேசிய கத்தோலிக்க நிலையத்தின் பணிப்பாளர் வணக்கத்துக்குரிய தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில் பாப்பரசரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் தொடர்பில் தமக்கு எந்த பொறுப்புக்களும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYery.html
மாவீரர் தின சுவரொட்டிகளுடன் யாழில் ஒருவர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 04:46.45 PM GMT ]
யாழ்ப்பாணத்தில் மாவீரர் தின சுவரொட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீரசிங்கம் சுலக்ஷன் என்பவரே பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். புத்தூர் சந்தியில் உள்ள வடமாகாண சபை உறுப்பினர் சயந்தனின் வீட்டுக்கு அருகில் வைத்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து மாவீரர் தின சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வீரசிங்கம் சுலக்ஷன் தற்போது யாழ். பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை கைது செய்ய பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYerz.html

Geen opmerkingen:

Een reactie posten