[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 06:19.09 AM GMT ]
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் கலந்து கொண்டதுடன், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகஸ்தர் எஸ்.ஜெயசேரன், கணக்காய்வாளர், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
நிதியுதவி கோரப்பட்டவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு நிதியுதவிகளும் மற்றும் தையல் இயந்திர உதவிகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgpz.html
வாயை மூடிக்கொண்டிருக்க மேலிடம் உத்தரவு! வாலைச்சுருட்டிக் கொண்ட ஞானசார
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 06:19.58 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பின் உருவாக்கத்தினூடாக சிங்கள பௌத்த வாக்குகளை தொடர்ந்தும் தம்வசம் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு கோத்தபாய உள்ளிட்ட ராஜபக்ஷவினருக்கு இருந்தது.
எனினும் அந்த எதிர்பார்ப்பில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க கூட்டிணைவு மண்ணை அள்ளிப் போட்டுள்ளது. இதனை நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஞானசார தேரர் பகிரங்கமாவே ஏற்றுக் கொண்டிருந்தார்.
தற்போதுள்ள நிலையில் பொதுபல சேனா வெளியிடும் அரசியல் கருத்துக்கள் ஆளுங்கட்சியின் கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் தகர்த்துவிடும் என்ற பயம் ஜனாதிபதி தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் எதுவித கருத்துக்களையும் வெளியிடாது மௌனமாக இருக்குமாறு ஞானசார தேரர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை தொடக்கம் ஞானசார தேரர் அல்லது திலந்த விதானகேவைத் தொடர்பு கொண்டு சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்துக்களை அறிய முயன்றபோதும் முயற்சி பலிக்கவில்லை. ஞானசார தேரர் தற்போது தனது மொபிடெல் இலக்கத்தை அணைத்து வைத்துள்ளார். திலந்த விதானகேவின் தொலைபேசி இலக்கத்தை பல தடவைகள் தொடர்பு கொண்டபோதும் அவர் பதிலளிக்கவில்லை.
இது தொடர்பாக ஞானசார தேரரின் உதவியாளர் ஒருவர் கருத்து வெளியிடும் போது, அரசியல் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இன்னும் இரண்டொரு நாட்கள் வரை ஞானசார தேரர் தனது நடமாட்டங்களை மட்டுப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgp0.html
மகிந்த தற்கொலைக்கு ஒப்பான காரியத்தை செய்துள்ளார்: திஸ்ஸ அத்தநாயக்க
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 06:22.59 AM GMT ]
சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவசர தேர்தல் ஒன்றை அறிவித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்கொலைக்கு ஒப்பான காரியத்தை செய்து கொண்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும் அரசியல் அமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதே எமது பிரதான நோக்கம்.
ஜனவரி 8 ஆம் திகதியில் இருந்து 100 நாட்களுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து விட்டு பிரதமர் தலைமையிலான ஆட்சி அதிகாரத்தை ஏற்படுத்துவதே எமது திட்டம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக பேசவில்லை. எனினும் தமிழ் மக்களின் ஆதரவு இதற்கு கிடைக்கும் என நம்புகிறோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டணியில் இணையா விட்டாலும் மக்களுக்கு வெறுத்து போன இந்த மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்ற கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கலாம் என எமது செயற்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் என்னிடம் தெரிவித்தனர்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்களை தென் பகுதி மக்கள் மாத்திரமல்லது வடக்கு மக்களும் உணர்ந்திருப்பார்கள்.
இதனால் தென் பகுதி மக்களின் ஆதரவு கிடைப்பது போன்று வடக்கு மக்களின் ஆதரவும் எமக்கு கிடைக்கும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgp1.html
Geen opmerkingen:
Een reactie posten