தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 november 2014

புலம்பெயர் தமிழர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்த ராஜபக்ஷவினர் கடும் முயற்சி: ஜே.வி.பி

வேலை செய்யத் தெரியாதவர்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டம் ஒர் மஜிக்: ஜனாதிபதி- தொழிலாளர்கள் புறக்கணிப்பு: வேலாயுதம்
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 05:43.51 AM GMT ]
வேலை செய்ய தெரியாதவர்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டம் ஓர் மஜிக் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்க வருமான உயர்வின் பலன்களை மக்களுக்கு உரிய முறையில் வழங்கத்தெரியாதவர்களுக்கு இந்த வரவு செலவுத்திட்டம் ஒர் மாயாஜாலமாகும்.
2006ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாதத்திலும் பொருளாதாரம் சரிவடையும் என சிலர் எதிர்பார்த்து கனவு காண்கின்றனர்.
இவ்வாறான நபர்களுக்கு இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஒர் கனவாகவே அமைந்துள்ளது.
இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் செய்யக் கூடிய விடயங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளன.
முன்வைக்கப்பட்ட யோசனைகள் அனைத்துமே அமுல்படுத்தப்படும்.
வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்ட சில யோசனைகள் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் முன்னதாகவே மக்களுக்கு நலன்களை வழங்கக் கிட்டியமை மகிழ்ச்சியளிக்கின்றது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மாத்தறை உயன்வத்த மைதானத்தில் நேற்று நடைபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்: வேலாயுதம் வரவு செலவுத் திட்டத்தில் தொழிலாளர் சமூகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் தொழிலாளர் சமூகம் அதிருப்தி அடைந்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தை முறைகேடாக பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
இந்த நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசாங்கம் எல்லா நேரங்களிலும் மக்களுக்கு போலி வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றவே முயற்சிக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgt1.html


மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 2521 பேர் 20 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 06:57.57 AM GMT ]
நுவரெலியாவில் தேயிலை தோட்டங்கள் உட்பட கிராமப்புற பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படும் இடங்களை பரிசோதனை செய்வதற்காக தேசிய கட்டிட நிர்மாண ஆய்வு நிறுனத்தை சேர்ந்த 6 குழுக்கள் அடங்கிய அதிகாரிகள் தற்போது பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருப்பதாக அம்மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிறி தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காணப்படும் இடங்களான கொத்மலை இறம்பொடை, வௌன்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, அட்டன், நுவரெலியா, எலமுல்ல, இராகலை தியனில்ல ஆகிய பகுதியில் 564 குடும்பங்களை சேர்ந்த 2521 பேர் அகதிகளாக 20 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மலையக தோட்டப் பகுதிகளில் மண்சரிவு அபாயத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்படவிருக்கும் புதிய வீடுகளுக்கு இடவசசதிகளை தோட்ட நிர்வாகம் வழங்கியிருப்பதாகவும் அந்த குறித்த இடத்தையும் தேசிய கட்டிட நிர்மாண ஆய்வு நிறுவன அதிகாரிகள் பரிசோதனை செய்யவுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவிக்கின்றார்.


புலம்பெயர் தமிழர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்த ராஜபக்ஷவினர் கடும் முயற்சி: ஜே.வி.பி
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 06:44.43 AM GMT ]
தேர்தலில் தோற்று விடுவோம் என்ற கடும் அச்சத்தில் ராஜபக்ஷவினர் இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கும் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களுடன் ஒரு இணக்கத்திற்கு வரும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
புலம்பெயர் தமிழர்களின் ஆதரவை பெற அரசாங்கம் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஊடாக கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பித்துள்ளது.
புலம்பெயர் தமிழர்களுக்கு பணத்தை கொடுத்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமது நன்மைக்காக எந்த தரப்பாக இருந்தாலும் அவர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தக் கூடிய அணிதான் இந்த ராஜபக்ஷவினர் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgt5.html

Geen opmerkingen:

Een reactie posten