போப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள உலகில் அதிகாரம்வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் பராக் ஒபாமாவை பின்தள்ளி ரஷ்ய ஜனாதிபதி முதலிடம் பிடித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு இரண்டாம் இடமே கிடைத்துள்ளது
போப்ஸ் சஞ்சிகையின் பட்டியலில் உலகின் பலம்வாய்ந்த 72 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன
இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 15 ஆவது இடம் கிடைத்துள்ளது
மோடி பிரதமராக பதவியேற்று குறுகிய காலத்திற்குள் இந்த இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
போப்ஸ் சஞ்சிகையின் பட்டியலில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங், பிரேஸில் ஜனாதிபதி டில்மா ருஸெல்ப் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்
போப்ஸ் சஞ்சிகையின் பட்டியலில் இந்தியத் தொழிலதிபர்களான அனில் அம்பானி மற்றும் லஷ்மி மிட்டல் ஆகியோரும் உள்ளனர்.
athikaram