தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 november 2014

இரட்டைக் குடியுரிமைக்கு அனுமதி வழங்கும் குழுவின் தலைவராக கோத்தபாய

கருவாட்டினால் வந்த வினை: இருவர் காயம் (செய்தித் துளிகள்)
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 05:47.37 AM GMT ]
நீற்கொழும்பு பிரதேசத்தில் நேற்றிரவு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கருவாட்டு வியாபாரி ஒருவர் வேறு ஒரு பிரதேசத்திலிருந்து மீனை விலைக்கு வாங்கி கருவாட்டு உற்பத்தியில் ஈடுபடுவதனை அடிப்படையாகக் கொண்டே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண  குறிப்பிட்டுள்ளார்.
இம்மோதலில் இரு மீனவர்கள் காயமடைந்துள்ளனர். இப்பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜை கைது
சட்டவிரோதமாக பொகவந்தலாவை சென் விஜயன்ஸ் தோட்டத்தில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீசா அனுமதியின்றி இந்த இந்திய பிரஜை மலையகத்தில் தங்கியிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மட்டு.மாங்காட்டில் இனந்தெரியாத நபர்கள் வீடு புகுந்து தேடுதல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த இனந்தெரியாத நபர்கள் தேடுதல் மேற்கொண்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பாக்கியராஜாவின் சகோதரியின் வீட்டிலேயே இந்த தேடுதலை சிவில் உடையில் வந்த இனந்தெரியாத நபர்கள் தேடுதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் இரவு 10.30மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்து அழைத்துள்ளனர். இதன்போது முன்னாள் தவிசாளர் பாக்கியராஜாவையும் அவரது சகோதரியின் மகனான முருகசு வினோத் ஆகியோர் தொடர்பில் கேட்டுள்ளனர்.
அவர்கள் இங்கிருப்பதில்லை, அதுபற்றி தமக்குத் என்று தெரியாது என தவிசாளரின் சகோதரியும் கணவரும் தெரிவித்துள்ளனர்.
எனினும் அதனை செவிமடுக்காத நபர்கள் வீட்டுக்குள் புகுந்து தேடுதல் நடத்தியுள்ளதுடன் குடும்பத்தினரையும் மிரட்டிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் அவசர சேவைக்கு அறிவித்ததும் ஸ்தலத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் குற்றப்புலனாய்வுத் துறையினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
களுவாஞ்சிக்குடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பாக்கியராஜா மற்றும் அவரது சகோதரியின் மகனான முருகசு வினோத் ஆகியோர் 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதியும் வீட்டுக்குள் வைத்து கடத்திச் செல்ல முற்பட்டபோது அவர்களுடன் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgt2.html
தமிழக மீனவர்களின் தூக்கு: பின்னணியில் சீனா?
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 06:11.53 AM GMT ]
இந்திய மீனவர்கள் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற இலங்கை துடிப்பதற்கு பின்னணியில் சீனா இருப்பதாக கூறப்படுகின்றது என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா சமீப காலமாக இலங்கையில் அதிக முதலீடுகளை செய்து வருகிறது. இலங்கையின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சீன நிறுவனங்கள் முதலீடுகளை கொட்டியுள்ளன.
இலங்கையில் ரயில்வே துறைக்கு தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து கொடுக்கிறது. 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரு அனல் மின் நிலையங்களையும் சீனா அமைத்துக் கொடுக்கிறது.
நெடுஞ்சாலைகளையும் சீனாவே மேம்படுத்தி வருகிறது. இலங்கைக்கு இராணுவ தளபாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது சீனா.
இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கான மிகப்பெரிய சந்தையாக சீனா மாறியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் சீனாவின் இந்திய எதிர்ப்பு நிலைக்கு இலங்கை வெகுவாக துணைபோக தொடங்கியுள்ளது.
இதன்காரணமாகவே, மீனவர்களை போதை மருந்து கடத்தல்காரர்கள் என முத்திரை குத்தி, பொய் ஆவணங்களை உருவாக்கி நீதிமன்றத்தை நம்ப வைத்து ஐந்து தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனையும் பெற்றுத் தந்துள்ளது சீனா.
மீனவர்கள் படகில் பதிவான ஜிபிஎஸ் பதிவுகளை வைத்து பார்க்கும்போது, போதைப் பொருள்  கடத்தல் நடந்த பகுதிக்கு அவர்கள் படகு செல்லவேயில்லை என்பது உறுதியாகியுள்ளது.
எனவே நீதிமன்றத்திற்கு இலங்கை போலி ஆவணங்களை அளித்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்தான்,  இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி, கொழும்பு துறை முகத்தில் சீன நீர்மூழ்கி கப்பலை நிறுத்த வசதி செய்துகொடுத்துள்ளது இலங்கை.
அதே நேரம் இந்தியாவும் தனது காய் நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளது. சீனாவுக்கு எதிரியான வியட்நாமுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சென்ற நிலையில், இந்தியாவுக்கு அந்த நாட்டு பிரதமர் வருகை தந்தார்.
இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க இலங்கையை சீனா பயன்படுத்துவதற்கு பதிலடியாக சீனாவுக்கு பூச்சி காண்பிக்க, வியட்நாமை இந்தியா பயன்படுத்தக் கூடும் என்று தெரிகிறத என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
oneindia.com
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgt3.html
இரட்டைக் குடியுரிமைக்கு அனுமதி வழங்கும் குழுவின் தலைவராக கோத்தபாய
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 06:20.49 AM GMT ]
இரட்டைக் குடியுரிமை பெற எண்ணியுள்ள வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு அதற்கான வசதிகளை பெற்றுக் கொடுக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா பாராளுமன்றத்தில்  தெரிவித்துள்ளார்.
இரட்டை குடியுரிமை பெறவிரும்பு வெளிநாடு வாழ் இலங்கையர்கள் இந்த குழுவிடம் விபரங்களை முன்வைக்க வேண்டும்.
இரட்டை குடியுரிமையை வழங்குவதா இல்லையா என்ற இறுதி முடிவை இந்த குழுவே எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்களும் இரட்டை குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.
இவர்களில் தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு கோத்தபாய தலைமையிலான குழு நிபந்தனைகளின் அடிப்படையில் இரட்டை குடியுரிமையை வழங்க சிபாரிசு செய்யும் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgt4.html

Geen opmerkingen:

Een reactie posten