தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 november 2014

பொதுவேட்பாளரா? காலம் பதில் சொல்லும்!- மைத்திரிபால சிறிசேன - மைத்திரிபாலவை தேடும் ஜனாதிபதி?

திடீர் அமைச்சரவை மாற்றம்: அதிருப்தி அமைச்சர்களுக்கு முக்கிய அமைச்சுக்கள்
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 06:28.54 AM GMT ]
அரசாங்கத்திற்குள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை அடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அமைச்சரவையில் திடீர் மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமான அமைச்சு பொறுப்புகள் வழங்கப்படாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு முக்கியமான அமைச்சுக்கள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் ஜனாதிபதி வகித்து வரும் அமைச்சுக்கள், சம்பிக்க ரணவக்க வகித்த அமைச்சு மற்றும் எதிர்க்கட்சியில் இணையவுள்ளதாக கூறப்படும் அமைச்சரின் அமைச்சு என்பன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
அமைச்சரவை மாற்றத்தில் பல அமைச்சுக்களின் பொறுப்புகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhs5.html
மகிந்தவின் பொறுப்பில் இருக்கும் நிறுவனங்களில் நிதி மோசடி- ராஜபக்ச கும்பல்களின் அடாவடி: அம்பலப்படுத்திய லால் காந்த
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 06:53.55 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பொறுப்பின் கீழ் உள்ள அமைச்சு நிறுவனங்களில் 975 கோடி ரூபா நிதி மோசடி நடந்திருப்பதாக புதிய கோப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் கீழ் உள்ள ஊழியர் சேமலாப நிதியத்தில் 44 கோடியே 48 லட்சத்து 64 ஆயிரத்து 940 ரூபா நிதி மோசடி நடைபெற்றுள்ளது.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் 240 கோடி ரூபாவும் தேசிய சேமிப்பு வங்கியினால் இலங்கை விமான நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த 113 கோடியே 65 லட்சம் ரூபாவும் வீடு அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபன வங்கியில் முதலீடு செய்யப்பட்ட 300 கோடி ரூபாவும் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மைத்திரிபால அப்பாவி – ராஜபக்ஷ கும்பல் அவருக்கு பணியாற்ற விடவில்லை
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஒரு அப்பாவி எனவும் ராஜபக்ஷ கும்பல் அவருக்கு அதிகாரங்களை கொடுக்காததால் அவரால் சரியான முறையில் சேவையாற்ற முடியவில்லை எனவும் ஜே.வி.பியின் மேல் மாகாண சபை உறுப்பினரும் அதன் தொழிற்சங்க தலைவருமான கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தீர்த்து வைத்திருப்பார். ராஜபக்ஷ கும்பல் அவருக்கு அதிகாரத்தை கொடுக்கவில்லை என்பதால் அவரை அப்பாவி என்றே கருத வேண்டும் எனவும் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அகில இலங்கை சுவசேவா சங்கத்தின் 13வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை நடக்கும் ஜனாதிபதித் தேர்தல் ஒரு சட்டவிரோத தேர்தல் என்பதால் அதனை தடுத்து நிறுத்த ஜே.வி.பி இறுதி வரை போராடும்.
தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை என்றால் தேர்தல் ரத்தாகிவிடும். அத்துடன் தேர்தலுக்கு எதிராக சில மாற்று செயற்பாடுகளை கையாள வேண்டும். பொது வேட்பாளர் பற்றிய கதைகள் தற்போது பேசப்பட்டு வருகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை கனவில் கண்டு பயந்து எழுவதாகவும் லால் காந்த கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhs7.html
கொழும்பில் ஆளும் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு - ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் தூர விலகியுள்ளனர்!– சுசில் பிரேமஜயந்த
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 07:26.48 AM GMT ]
கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஆளும் கட்சியின் தலைவர்கள் பலர் பங்கேற்கவில்லை.
குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது,  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் திகாம்பரம், பிரதியமைச்சர் வி ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்கவில்லை. தொண்டமான் சார்பில் அறிமுகமில்லாத ஒருவர் பங்கேற்றார்.
எனினும் பிரதியமைச்சர் பிரபா கணேசன் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார்.
2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காவிட்டாலும், இந்தமுறை வடக்கு கிழக்கு கொழும்பு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மஹிந்த ராஜபக்சவுக்கே வாக்களிப்பர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ஆளும் கூட்டணியின் முன்னணி அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும போன்றோரும் பங்கேற்கவில்லை.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் தூர விலகியுள்ளனர்!– சுசில் பிரேமஜயந்த
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இருக்கும் சிரேஷ்ட மற்றும் முக்கிய நபர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து தூர விலகியிருப்பதாக அரசாங்கத்தின் அமைச்சரான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
வரலாற்றிலும் எமது கட்சி இவ்வாறான நிலைமையை எதிர்நோக்கியுள்ளது.
எதிர்காலத்திலும் அப்படியான நிலைமை எதிர்பார்க்க முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhty.html
புதிய அரசின் பாதுகாப்பு அமைச்சர் சரத் பொன்சேகா
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 07:27.00 AM GMT ]
ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடித்த பின் ஆட்சி அமைக்கும் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு உட்பட முக்கிய பொறுப்புகளும், மேலும் ஒரு அமைச்சும் ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியின் தலைவர்கள் இடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
நாட்டின் தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தின் படி பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்குரியது.
சரத் பொன்சேகாவின் இராணுவ ஜெனரல் பட்டம், ஓய்வூதியம் உட்பட அவருக்கு இருந்த சகல கௌரவங்களையும் ராஜபக்ஷ அரசாங்கம் இரத்துச் செய்துள்ளது.
அத்துடன் அவரது குடியுரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்து ஆட்சியமைக்கும் அரசாங்கம் 72 மணிநேரத்திற்குள் பொன்சேகா இழந்த சகலவற்றையும் அவருக்கு வழங்கும் என அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
ஜனாதிபதித் தேர்தலின் பின் புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் புதிய நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடத்தப்படும்.
பொது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைந்து கொள்ளும் கட்சிகளுக்கு பகிரப்படும் அமைச்சு பதவிகள், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பிலும் நேற்றைய கலந்துரையாடலில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மெகா அமைச்சரவைக்கு பதிலாக சிறிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவியை பெயரளவிலான பதவியாக மாற்றிய பின் நிறைவேற்று அதிகாரத்திற்கு வழங்கும் அரசியலமைப்புத் திருத்தம் பற்றியும் இதன் போது பேசப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhtz.html
பொதுவேட்பாளரா? காலம் பதில் சொல்லும்!- மைத்திரிபால சிறிசேன - மைத்திரிபாலவை தேடும் ஜனாதிபதி?
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 07:37.48 AM GMT ]
தாம் பொதுவேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் காலத்துக்கு இடம்தரப் போவதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், தாம் இன்னும் அரசாங்கத்தில் இருந்து விலகும் தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார்.
எனினும் நாளை என்பதே அதற்கு பதில் சொல்லும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, சொத்துக்களை குவிப்பதற்காக மக்கள் எமது கைகளில் அதிகாரத்தை வழங்கவில்லை. ஊழல், மோசடிகளைச் செய்வதற்காகவும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை.
அதிகாரம் கிடைத்துவிட்டது என்ற மமதையில் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. அந்த அதிகாரத்தில், மக்களை அடிபணியச் செய்யவும் கூடாது என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன், அதிகாரத்தின் போதையில் நாம் சிக்குண்டிருக்கவும் கூடாது என்று தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால, பொதுமக்களின் பொறுப்பாளன், ஒருபோதும் அந்த மக்களை அடிமைகளாக்கி நசுக்கக் கூடாது என்றும் கூறினார்.
தாம் சுகாதார அமைச்சராக சிறந்த சேவையை ஆற்றியுள்ளதாக குறிப்பிட்ட அவர் எதிர்காலத்திலும் மக்கள் சேவையை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மைத்திரிபாலவை தேடும் ஜனாதிபதி?
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசேட பேச்சுவார்த்தை ஒன்றுக்காக இவ்வாறு ஜனாதிபதி தேடி வருகின்றார்.
பேச்சுவார்த்தை நடாத்த அலரி மாளிகைக்கு வருமாறு ஜனாதிபதி, அமைச்சர் மைத்திரிபாலவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பு தொடர்பில் அமைச்சர் மைத்திரிபால எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இதேவேளை, மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிப்பது என ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்டத்தினர் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆளம் கட்சியை விட்டு விலகுவது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன இன்றும் சற்று நேரத்தில் அறிவிக்கலாம் என கொழும்பு ஊடகங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
மைத்திரிபால சிறிசேன கட்சித் தாவ மாட்டார் என ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYht0.html

Geen opmerkingen:

Een reactie posten